Motivation - பகுதி 1
மேகலா : ஹாய் கிருஷ்ணா…., உன்னைப் பார்க்காமல் கண்ணெல்லாம் பூத்துப் போச்சு கிருஷ்ணா… உன்னோடு பேசாமல், நல்ல தமிழே மறந்து போச்சு கிருஷ்ணா….
கிருஷ்ணர் : என்னம்மா…, இந்தப் பக்கம் உன்னை பார்க்கவே முடியல… எதிரில் பார்த்தவுடன்…, செங்கல், செங்கலா கட்டுற…..
மேகலா : ஐயோ…, நானா…., செங்கல் கட்டுறனா…. நீ எப்ப வருவாய்…, என்ன topic-ல் பேசலாம் என்று காத்துக் கிடக்கிறேன் கிருஷ்ணா…., நீ என்னடான்னா….
கிருஷ்ணர் : சரி…., நம்பிட்டேன்…. என்ன topic-ல பேசலாம்…. ‘Motivation’ என்ற தலைப்பு எடுத்து பேசலாமா….?
மேகலா : கிருஷ்ணா…., எம்பெருமான் பரம்பொருளாகிய ஸ்ரீ கிருஷ்ணர், பாண்டவர்களை உசுப்பேத்தி விட்டு இயங்க வைத்த வேலையையா எழுதச் சொல்லுகிறாய்…? அதற்கெல்லாம் நான் தகுதியானவள்தானா கிருஷ்ணா….?
கிருஷ்ணர் : என்ன இப்படி பம்முற…. யார் உங்கிட்ட பேசினாலும்…, பெரிய ஆசான் மாதிரி, ‘மைக்’ இல்லாமலேயே பேசத் துவங்கி விடுவாய். இப்ப ஏன் தகுதியிருக்கான்னு கேட்கிறாய்… Motivation ஆகப் பேசுவதற்கு, நிறைய பட்டங்கள் வாங்கணும், research பண்ணியிருக்கணும் என்பதெல்லாம் தேவையில்லை… யாரை ஊக்குவிக்கிறோமோ…, அவர்கள் ‘நல்லாயிருக்கணும்’ என்ற அக்கறை இருந்தால் போதும்… உனக்கு positive எண்ணங்கள் இருந்தாலே, பாதி வேலை சுலபமாய் முடிந்து விடும்… பேசலாம்…, பேசப் பேச, என்னையே motivate பண்ண ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…
மேகலா : ஐயோ…., கிருஷ்ணா…., குருவுக்கெல்லாம் குருவே…, என் பரம்பொருளே…, என் உயிர் மூச்சே…, என்னை இயங்க வைக்கும் இயக்கமே…, நான் பேசும் மொழியே…, அதன் உண்மையின் அர்த்தமே…, உன்னை நான் motivate பண்ணுவதா…. உலகின் இயக்கம் அனைத்தின் மொத்த உருவமாய் இயங்கும் சக்தியே…, என்னை இப்படியெல்லாம் சோதிக்காதே கிருஷ்ணா… மெய் தளர்ந்து, பேசும் மொழி மறந்து போகிறேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஏன் இத்தனை scene காட்டுகிறாய்…. பேசப் பேச வந்து விடும் என்றுசொல்லுகிறேன்…
மேகலா : அதையே கொஞ்சம் ஓவராய்ச் சொல்லி விட்டாய் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சரி…, அது போகட்டும்…. ஒரு common motivation…. சொல்லு பார்க்கலாம்….
மேகலா : கிருஷ்ணா…., உலகத்திலுள்ள எல்லா தாய்மார்களும், தங்கள் பிள்ளைகளை குழந்தையிலிருந்து, ஒவ்வொரு செயலையும், அதாவது, குப்புற விழுதல், தானே எழுந்திருக்க முயலுதல், தள்ளாடித் தள்ளாடி நடத்தல் என்று ஒவ்வொரு செயலையும், தானே செய்யும்படி உற்சாகப்படுத்துதல்…, உலகின் முதல் motivation என்று நினைக்கிறேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அதென்ன நினைக்கிறேன்…, உண்மையும் அதுதானே… இது common motivation….
மேகலா : அப்புறம், ஒரு வேலையை ஒருவரிடம் ஒப்படைக்கும் போது, வேலை செய்ய வேண்டியவர் தயங்கினால்……, அது மகளோ, மகனோ…, நமக்கு வேண்டியவர்களோ…, யாராயிருந்தாலும்…, ‘உன்னாலே முடியும்’…, ‘நீதான் செய்யுற’…. ’எனக்குத் தெரியாது, நாளைக்குள்ள இந்த வேலை முடிச்சிரணும்’ என்று ஒப்படைத்து விட்டு விலகுவது…, இந்த மாதிரி motivation, பரவலாக எல்லா அம்மா, அப்பாவிடமும்…, office-னா. boss-இடமும்…, சில சமயங்களில், friends-இடம் கூட இருக்கு கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இது கூட, basic motivation தான் மேகலா…. இதே மாதிரியான training இன்னும் ஒண்ணு இருக்கு…. சம்பந்தப்பட்ட மாணவனையோ…., மகனையோ விட்டு விலகாமல்…, ‘உனக்குக் கற்றுத் தருகிறேன், கவனமாய்க் கேள்’…., என்று சொல்லாமல்…., ‘எனக்கு இதில் ஒரு குழப்பம் இருக்கு…, நீயானால் எப்படிச் செய்வ’ என்று கேட்டு…, புரியாத மாதிரி முழித்து, உருவாக்குதல்…, இது இன்னும் சுவாரஸ்யமான…, புரியாத subject-ஐக் கூட, விரும்பிப் புரிந்து கொள்ளும் யுக்தியாக இருக்கும்….
மேகலா : ஆமாம் கிருஷ்ணா…., நமக்குத் தெரியாத technology-யில், உண்மையிலேயே நாம முழித்தால், அந்த subject-ஐ பிள்ளைகள் சட்டுன்னு தெரிந்து கொள்வார்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை கிருஷ்ணா…. ஷீத்தல் school படிக்கும் போது, computer science தவிர, மற்ற பாடங்களை நான் தான் சொல்லித் தருவேன்…. எனக்குத் தெரியாத computer science-ல் தான் அவள் அதிகம் மார்க் எடுப்பாள்….
கிருஷ்ணர் : அடுத்தவர்களுக்குத் தெரியாத ஒரு subject-ஐத் தான் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மனிதனுக்கு அதிகம் உண்டு. இதில் அவனுக்கு motivation தேவையில்லை… தானே உற்சாகமாய்த் தெரிந்து கொள்வான்…
மேகலா : நீ சொல்றது correct கிருஷ்ணா…. நானும் கூட, எங்க அப்பாவை impress பண்ணணும்னு நினைத்து விட்டால், உடனே பேனாவைத் தூக்கி, நோட்டையும் எடுத்து கவிதை எழுத ஆரம்பித்து விடுவேன்…. கவிதையில் பெருசா கருத்து எதுவும் இருக்காது… ஆனாலும், தமிழில் அழகான வார்த்தைகளைப் போட்டு, அப்பாவை impress பண்ணி விடுவேன்…. அப்போ, என் அப்பா, என்னை மடியில் உட்கார வைத்து, முத்தம் கொடுத்து, ‘பெத்தால் இந்த மாதிரி ஒரு பிள்ளையைப் பெறணும்’ என்று சொல்லுவார் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! அந்த வார்த்தைகள் தான் உன்னை எழுதத் தூண்டியிருக்கிறது மேகலா…. எல்லோர் முன்னிலையிலும் உன்னைப் பாராட்டிப் பேசிய அன்றிலிருந்து, உன் உணர்வுகளை எழுத்தின் மூலமாக வெளிப்படுத்தத் துவங்கியுள்ளாய்… ஆனால், இதுவே, ‘நீ என்னதான் முயற்சித்தாலும், அவனை மாதிரியெல்லாம், உன்னால் வர முடியாது’ என்று, ஒருவரைக் compare பண்ணி மட்டம் தட்டினாலோ, ‘அவனைப் பாரு, நீயும் அவன் கூடதான படிக்கிற, அவன் மட்டும் எப்படிப் படிக்கிறான்… அவங்க அம்மா சொல்றத கேட்டு, எவ்வளவு நல்ல பிள்ளையா இருக்கிறான்’னு வெறுப்பேத்துவது மாதிரி பேசினாலோ, அது, சம்பந்தப்பட்ட குழந்தையை ஊக்குவிக்காது…. மாறாக, கோபம், வெறுப்பு என்று பிள்ளைகள், தாறுமாறாக சிந்தித்து, இன்னும் அதிகமாக சேட்டை பண்ண ஆரம்பிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் நம்மை பயப்பட வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பிள்ளைகள் வளர்ப்பில், ‘motivation’ஐ சரியான நேரத்தில், சரியான முறையில், அம்மாவும், ஆசிரியரும் கொடுக்க வேண்டும்.
மேகலா : கரெக்ட் கிருஷ்ணா… ‘சரியான நேரத்தில்’ என்று சொன்னாயா…, எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது கிருஷ்ணா….
(தொடரும்)
Comments
Post a Comment