Motivation - பகுதி 2

மேகலா : கரெக்ட் கிருஷ்ணா…. ‘சரியான நேரத்தில்’ என்று சொன்னாயா… எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருது…. ராமாயணத்தில், ஆஞ்சநேயர் தன் வலிமையையும், திறமையையும் அறிய மாட்டார்…. அவருக்குக் கொடுக்கப்பட்ட பணியோ, ராமராலும், சுக்ரீவனாலும், ‘சீதை எங்கிருக்கிறார்’ என்று கண்டுபிடிக்கும் முக்கியமான பணி… ராவணனால் கடத்தப்பட்ட சீதையைத் தேடித் தென் திசை வந்த அங்கதனின் தலைமையிலான அணியில், ஆஞ்சநேயர் ஒரு முக்கியமான சிறப்புத் தகுதிகள் கொண்டவர். ஆனால், இது எதுவும் தெரியாத ஆஞ்சநேயர், கடலைக் கடந்து எப்படி செல்லப் போகிறோம்; சீதையைக் காண்போமா…, அப்படிக் காண முடியாவிட்டால், ராமரை எப்படிக் காணப் போகிறோம் என்று பெரிதும் மன உளைச்சலில் இருக்கிறார். ஒவ்வொருவரும் கருத்தைச் சொல்லுகின்றனர்… அப்போது, ஜாம்பவான் என்ற கரடி இனத்தைச் சேர்ந்த அமைச்சர் சொல்லுகிறார்… ‘இந்தக் கடலைக் கடந்து, சீதையைக் கண்டு வருவது, ஆஞ்சநேயர் ஒருவரால் மட்டுமே முடியும்… அவர் வாயுவின் புத்திரன்… வாயுவுக்குண்டான சக்தியும், திறமையும் ஆஞ்சநேயருக்கு உண்டு… ஆஞ்சநேயருக்கு அவர் பலம் என்ன என்று அவருக்கே தெரியாது’ – என்று சொல்லச் சொல்ல, ஆஞ்சநேயருக்கு உடம்புக்குள் புது சக்தியே பிறந்தது. முகத்தில் தெளிவு பிறந்து, மகேந்திர மலை மீது ஏறி நின்று, தன் காலால் அழுத்தி, தாவிப் பறந்து செல்வார். அதன் பிறகு, அவர் சீதையைக் கண்டுபிடித்து வந்ததெல்லாம், நாம் அறிந்த கதை… சரியான நேரத்தில் ஆஞ்சநேயருடைய பலத்தை ஜாம்பவான் எடுத்துரைத்தார்…, ராவண வதமே நடைபெற்றது… எனக்குப் பிடித்த motivation சம்பவங்களில் மகத்தான காட்சி இது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உண்மைதான் மேகலா…. Motivation என்பது, சம்பந்தப்பட்டவரை ஊக்குவிப்பதோடு, எடுத்த காரியத்தை முடிக்கச் செய்வதாகவும் இருக்க வேண்டும். இந்த சம்பவத்தில், ஜாம்பவானின் பங்கு அற்புதமானது…. சரி, இதே ராமாயணத்தில் விசுவாமித்திரரின் பங்கினை நீ சொல்லவேயில்லையே….

மேகலா : ஸ்ரீராமரையே உற்சாகப்படுத்தியவர்…, ஊக்கப்படுத்தியவர்… சொல்லாமல் இருக்க முடியுமா கிருஷ்ணா…. இப்ப, கல்லூரியிலும், பள்ளிகளிலும், ‘personality development’ என்ற துறையை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு, அந்த வயதில் ஏற்படக்கூடிய மனக்குழப்பம், தயக்கம், தடுமாற்றம் (அது subject சம்பந்தமாகவோ, சூழ்நிலை சம்பந்தமாகவோ ஏற்படுமானால்) முதலியவற்றைத் தவிர்த்து, தட்டிக் கொடுத்து, அந்த வயசுக்கேத்த தயார்நிலைக்குக் கொண்டு வருகிறார்கள். இதற்கு அவர்கள் கையாளும் முறை, சிறந்த அனுபவஸ்தர்களை, தங்கள் அனுபவங்களை share பண்ணச் செய்தல், சில சம்பவங்களை நடித்துக் காட்டச் செய்தல் என்று மாணவர்களுக்கு, அவர்களுடைய வளர்ச்சியை புரியச் செய்கிறார்கள். ஒரு வகையில், விசுவாமித்திரர், ராமருக்குக் கொடுத்த பயிற்சி கூட, one sort of personality development தான்…

கிருஷ்ணர் : நீ, அப்படியா சொல்கிறாய்…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. ஸ்ரீராமர், விசுவாமித்திரரைச் சந்திக்கும் முன்பு வரைக்கும், அரண்மனை வாசியாக, இளங்கலை பயின்றவராகத்தானே இருந்தார்.. வில்பயிற்சியில் இன்னும் சிறந்த அஸ்திரங்களின் தன்மையை அறிய வேண்டும்… ‘போர்’, மக்களின் பாதுகாப்பு என்று வந்து விட்டால், தன்னை தயார்படுத்தும் பக்குவம்…, நீண்ட நேரம் போர் புரிய நேரிட்டால் களைப்பறியாமல் இருக்கும் பக்குவம், அதற்கான பயிற்சி என்று சிறந்த வில்வீரனுக்குரிய தகுதிகளை ஸ்ரீராமர் அடைய வேண்டும். அத்தோடு, உலக ஞானம், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் அனுபவம், இவைகளைத் தெரிந்து கொள்ளும் போது, உலக இயக்கங்களினால் ஏற்படும் சிறு சிறு தயக்கம், குழப்பங்கள் விலகும் என்று விசுவாமித்திரர் நினைத்ததால் தான், ஸ்ரீராமரின் personality-யை develop பண்ணும் பொருட்டு, தசரதரின் அரண்மனைக்கு வந்து ராமரை அழைத்துச் செல்கிறார். பள்ளியில் பயின்ற மாணவனாகிய ஸ்ரீராமரை, மிகப் பெரிய சிவதனுசுவை லகுவாக எடுத்து வளைக்கும் திறமையுள்ள வீரனாக உருவாக்கிய பெருமை, விசுவாமித்திரரையே சேரும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ சொல்லும் போது, கரெக்டாகத்தான் இருக்கிறது… Good…., ஆமாம் ஏதோ நடிப்பின் மூலமாக personalityயை develop பண்ணலாம் என்றாயே…, புதுசா இருக்கே….

மேகலா : ஏன் கிருஷ்ணா…. இன்று ஒருவர் வித்தியாசமாக hair-style-லோ…, வித்தியாசமான dress-ஓ போட்டிருந்தால், அது அவர் ரசித்த hero-வோ, heroin-னோ, இன்ன படத்தில் போட்டு வந்ததாக இருக்கும்… நாங்க கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம்… P. U. class சேர்ந்திருக்கிறோம்… school கண்டிப்பு, uniform…, கல்லூரியின் பிரமிப்பு என்று ஒரு மாதிரி, மந்திரிச்சி விட்ட மாதிரி இருந்தோம். எங்க Principal ஒரு யோசனை செய்து, ஒரு meeting ஏற்பாடு செய்தார்….. அதில் ஒரு drama போட்டாங்க. சில students எண்ணெய் படிய தலை வாரி, தலை நிறைய பூ வைத்து, கட்டுப்பெட்டி போல, பாவாடை தாவணி அணிந்து வரச் சொல்லி, அவர்கள் bag-ல் நிறைய புத்தகத்தைத் திணித்துக் கொண்டு, பாமரத்தனமாக வந்தார்கள். கல்லூரி சூழலைப் பார்த்து, ‘திருதிரு’ன்னு முழிக்கிறாங்க… அப்போ, கல்லூரிக்கு, புதுசா இரண்டு பேர் வராங்க…. அழகா…, colorful பாவாடையும், style ஆக தாவணியும் அணிந்திருக்கிறார்கள். Shampoo bath தலைமுடியை, லூசாகப் பின்னியிருக்கிறார்கள். Dress-க்கு match ஆக, plastic வளையல், ஒற்றைமாலை stud, செருப்பு கூட match ஆக என்று அழகாக நடந்து வருகிறார்கள். வரும் போது, வாய் நிறைய சிரித்துக் கொண்டும், joke அடித்துக் கொண்டும் வருகிறார்கள்… அப்போ, அந்தக் கட்டுப்பெட்டி students, இவர்களைப் பார்த்து, வகை தெரியாமல் முழிக்கிறாங்க… அந்த style students, அவர்களைப் பார்த்து, ‘ஏன் இப்படி ‘திருதிரு’ன்னு முழிக்கிறீங்க…. free-யா dress பண்ணுங்க…. இதோ, எங்களை மாதிரி இருங்க…. we are college students…. இன்னும் சின்னப் பிள்ளைங்க கிடையாது. இங்கு நமக்குப் பிடிச்ச மாதிரி, கண்ணியமான dress அணிந்து வரலாம். Staff-உடன் friend மாதிரி பேசலாம்….’ என்று சொல்கிறார்கள்… அரங்கமே கை தட்டுகிறது. அதன் பின் Principal பேசுகிறார். நம்முடைய வளர்ச்சிக்கு, dress பண்ணுவதில் கவனம் செலுத்துவது எவ்வளவு முக்கியம் என்று…..

கிருஷ்ணர் : Oh! இப்படிச் செய்யத்தான் வேணும். Dress பண்ணுவதில் கூட, நம்ம மனசுக்குப் பிடிச்ச மாதிரி dress பண்ணினால், நாமும் அழகாக இருப்போம். நம் மன தைரியமும் அழகாக நிமிர்ந்து நிற்கும்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1