Motivation - பகுதி 4

கிருஷ்ணர் : ‘Motivation’ என்பதே, மற்றவரை, உன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கவும், சாதனையைச் செய்ய வைப்பதும் தானே…. ஒரு teacher, எல்லோருக்கும் கல்வியைக் கற்றுக் கொடுக்கிறார். Exam போவதற்கு முன்பு, இந்த இந்தக் கேள்விகள் வரலாம், தயார் நிலையில் இருங்கள்… எழுதுவதை திருத்தமாய் எழுதுங்கள்…. தெரிந்த கேள்வியை முதலில் attend பண்ணுங்கள்… பயப்படாமல் எழுதுங்கள்… நல்லா எழுதும் பேனாவை உபயோகப்படுத்துங்கள்… – என்று பொதுவான ஆலோசனையைச் சொன்னாலும்…, குறைந்தது 7, 8 பேராவது 200/200 வாங்குவீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது… அதிலும், State first, நம்ம students தான் எடுப்பார்கள்’ என்று ஒரு confident-டோடு பேசுவார்கள் பார்…. அப்போ, அதிலிருக்கும் நெருப்பு, அது சக்தியாக மாறி, students-ஐ exam-ல் நன்றாக எழுதும் தைரியத்தைக் கொடுக்கிறது என்பதும் உண்மைதானே… தானே உருவாகுதல் என்ற நிலையில் இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களால் உருவாக்கப்படும் போது, சிறந்த மாணவர்களாக உருவாகிறார்கள் என்பது நாமும் பார்க்கத்தானே செய்கிறோம்….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. motivation என்ற மிகச் சிறந்த செயல், ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே நடக்கும் மிகப் பெரிய ஆக்கபூர்வமான செயல் தான் கிருஷ்ணா… நாம், விசுவாமித்திரருக்கும், ராமருக்கும் இடையே நடந்த மகத்தான motivation செயலிலேயே பார்த்தோம்ல கிருஷ்ணா…. நான் முதலிலேயே சொன்னது மாதிரி, ஒருவரை, அவர்களாகவே உருவாவது போல மறைமுகமாக ஊக்குவிப்பது இன்னும் ஒரு மகத்தான motivation கிருஷ்ணா… அதையும், பிறந்த குழந்தை முதற்கொண்டு, தானாக முயற்சி செய்யும் பழக்கத்தை ஊக்குவிப்பது, மனிதர்களுக்கு இயற்கையாக அமைந்த குணம் என்றுதான் நினைக்கிறேன் கிருஷ்ணா…. இன்றைக்கு நிறைய software கம்பெனிகள், படித்தவுடன் வேலை தேடும் இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுப்பது கூட, அவர்களின், ’ஏதாவது செய்து நம்முடைய திறமையை நிரூபிக்கணும்’ என்று ஆர்வமுள்ளவர்களைத் தூண்டி விடும் முயற்சிதான் கிருஷ்ணா. அந்தக் காலங்களில் manufacturing கம்பெனிகள், தங்கள் employees-க்கு, வேலையில் சேர்ந்தவுடன் முதலில் பயிற்சி கொடுக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் துணிந்து வேலையைக் கொடுக்கிறார்கள். இன்று நிலைமை தலைகீழாகிப் போச்சு கிருஷ்ணா…. இவர்கள், interview-லேயே, employee-யோட திறமையை கணித்து விடுகிறார்கள்… துணிந்து project-ஐக் கொடுக்கிறார்கள்…..

கிருஷ்ணர் : ஓஹ்ஹோ… இன்று project-ஐக் கொடுத்து திறமையாளர்களை உருவாக்குகிறார்கள்….

மேகலா : உண்மைதான் கிருஷ்ணா… இன்று technology அசுர வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமே, இளைஞர்களின், ‘புதுசா ஏதாவது சாதிக்க வேண்டும்’ என்ற வேகம் தான் கிருஷ்ணா…. அப்படி ஒரு தாகம் உள்ளவர்களுக்கு project-ஐக் கொடுத்து, தட்டிக் கொடுத்தால் மட்டும் போதும் கிருஷ்ணா…. அந்த சுதந்திரம்…, வாய்ப்பு…, திறமை…, தைரியம்…, எல்லாம் சேர்ந்து, மிகப் பெரிய சாதனையைச் செய்ய வைக்கிறது. ஒரு வகையில், தானே முயற்சி செய்தலை ஊக்குவிப்பது, software கம்பெனிகளில் ஒரு புரட்சியையே உருவாக்கியிருக்கிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உண்மைதான் மேகலா…. இன்றைய காலங்களில், இளைஞர்களும், தானே உருவாவதைத்தான் விரும்பவும் செய்கிறார்கள். ‘ஒரு கட்டத்தில் என் பேச்சை நானே கேட்பதில்லை’ என்றபடிக்குத்தான் இருக்கிறார்கள்….. நீ நல்லா யோசிச்சுப் பார்… தானே தன்னை உருவாக்கிக் கொள்பவர்கள் உச்சம் தொடுவார்கள் என்பது என்னோட கணிப்பு…. இருந்தாலும், நல்லது எது, கெட்டது எது என்று சொல்லிக் கொடுப்பவர்கள் அருகிலிருந்து சொல்லும் போது கேட்டுக் கொள்பவர்கள், வாழ்நாள் பயணம் முழுக்க, தடையைத் தாண்டிச் செல்லும் புத்திசாலியாய் இருப்பார்கள்.

‘கற்றிலனாயினும் கேட்க அஃதொருவர்க்கு

ஒற்கத்தின் ஊற்றாம் துணை –

என்று வள்ளுவர் கூடச் சொல்லியிருக்கிறாரே… தானாக முயற்சி செய்து, முடியாத போது சோர்வடையத் தேவையில்லை…, அனுபவசாலிகள் சொல்லுவதைக் கேட்கலாம்…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. நாம் தளர்ச்சியடைந்த போது, அல்லது ஏதாவது முயற்சியில் தோல்வியுற்ற போது, யாராவது ஒருவர் அனுசரணையாகப் பேசினால், அந்த நேரத்தில் நம் வலிகளெல்லாம் கண்ணீராய்க் கரையும். அவர்கள் கூறும் வார்த்தை ஒவ்வொண்ணும் வலிகளுக்கு இதமாய் மசாஜ் பண்ணியது மாதிரி இருக்கும்… நேற்று ஒரு சின்ன script கேட்டேன் கிருஷ்ணா…. “வாங்கிக்கலாம்; பணம் தானே போச்சு…, கை கால் நல்லாயிருக்குல்ல…, சம்பாதிக்கலாம். சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க. இதுக்கெல்லாம் உக்காந்து வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கலாமா…, கஷ்டம் தான், ஆனா முடியும்… நஷ்டம் தான், ஆனா மீண்டு வந்துரலாம்… விழுந்தா என்ன…, எந்திரிக்க மாட்டோமா… இவன் போனா என்ன, நமக்கு வேற ஆளா இல்லை… இது கஷ்டம் இல்லையே…, கொஞ்சம் யோசிச்சா வழி கிடைக்குமே…. கிடைக்கலியா…, பரவாயில்லை…, கொஞ்சம் wait பண்ணு, இத விட வேற நல்ல வழி கிடைக்கும்… திரும்பத் திரும்ப அதப்பத்தியே பேசாத… அது முடிஞ்சி போன கதை… ஆக, இவனும் அயோக்கியன் தானா… சரி, விடு… நாம தான் கொஞ்சம் கவனமா இருக்கணும்… பிரச்னையே இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை… அது பாட்டுக்கு அது…, நம்ம வேல பாட்டுக்கு வேல… எப்பவுமே ஜெயிக்க முடியுமா… அப்பப்ப சில சில தோல்விகளெல்லாம் வரும்… விழுகிறது தப்பில்ல…, விழுந்தே கிடக்கிறது தான் தப்பு….”

— யாரையோ நம்பி தொழிலில் invest பண்ணிய பணம் நஷ்டமடைந்து துன்புற்றிருப்போருக்கு ஆறுதல் கூறும் விதமாக, ரொம்ப யதார்த்தமாக பேசிய இந்த script கேட்டவுடன், காயங்கள் மறந்து போன எனக்குக் கூட, bend நிமிர்த்தியது போலிருந்தது கிருஷ்ணா…. இந்த மாதிரி ஆறுதல் சொல்லும் போது, நமக்கு கவலையைத் துடைப்பது மட்டுமல்ல, அதற்குள் இன்னொரு வழி கூட கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறதோ என்று தோணுது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நெசம்மாவே script ரொம்ப நல்லா இருக்கு மேகலா…. போகிற போக்கில், ‘யாருக்குத்தான் பிரச்னை இல்ல…, அதையே நினைச்சி வருத்தப்பட்டு, மேலும் கீழே விழுந்திராத’ என்று சொல்லும் போது, ஒரு mother touch…, ஒரு friend-டோட இடித்துரை எல்லாம் தெரிகிறது மேகலா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2