பெண்களால் முடியும் - பாகம் 3
மேகலா : கிருஷ்ணா…., நிறுவனங்கள் அடையாளம் காட்டும் பெண்கள் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை கிருஷ்ணா… நல்ல மனமுடையவர்களைக் கூட, அடையாளம் காட்டியிருக்கிறார்கள் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அப்படியா…. நல்ல மனமுடைய யாரை, எந்த நிறுவனம் அடையாளம் காட்டியிருக்கிறது….
மேகலா : ISKCON மாதிரி வழிபாடு செய்யும் இடங்களில், தினந்தோறும் மக்களுக்கு பசி தீர்ப்பதற்காக அன்னதானம் போடுகிறார்கள். சிலர், ஆத்மதிருப்திக்காக, குறைந்த விலையில் சாப்பாடு கொடுப்பதுண்டு… இதெல்லாம் சிலர் குழுவாகச் சேர்ந்து செய்கிறார்கள்… செய்ய முடியும்…. ஆனால், ஒரு பெண், இப்போ அவங்களுக்கு, 60, 65 வயது இருக்கும். அவர்கள் பசித்து வருபவர்களுக்கு, சும்மா கொடுப்பது போல, 1 ரூபாய்க்கு இட்லி, சட்னி வைத்து கொடுக்கிறார்கள் கிருஷ்ணா… அதிலும், யாருடைய உதவியும் இல்லாமல், அந்த இட்லி விற்கும் காசை வைத்தே, பசித்து வருபவர்களுக்கு, அன்னபூரணியாக, 1 ரூபாய்க்கு இட்லி விற்கிறார்கள். ‘கொரோனா’ காலத்தில் கூட, அவர் தன்னுடைய பணியை விடவில்லை. இதைக் கேள்விப்பட்ட ‘மஹிந்திரா க்ரூப்’ M. D., ஆச்சர்யப்பட்டு, அந்த அம்மாவை நேரில் சந்தித்து, அவர்களுக்கு, குடியிருக்க வீடு இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு, ஒரு வீடு பரிசளித்திருக்கிறார் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! அப்படியா…. பார்த்தாயா…. பிறருக்கு பசியாற்றும் சிறந்த பணியை, தனி பெண்ணாய் செய்ய முடியும் என்பதை, லட்சங்களில், கோடிகளில் பேசும் ஒரு மனிதன் வியந்து பாராட்டியிருக்கிறான் பார்… கருணையாய் இருப்பது பெரிய விஷயம் என்றால்…, கருணையைப் போற்றுவதும், மிகப் பெரிய விஷயம் தான்… சூப்பர் மேகலா….
மேகலா : இதென்ன கிருஷ்ணா பிரமாதம்…, இதை விட சூப்பர் மேட்டர் இருக்கு கிருஷ்ணா…. அதாவது, இது எளிமையான ஒரு பெண்மணியின் பசியாற்றும் செய்கைக்குக் கிடைத்த பாராட்டு. இன்னும் ஒரு சம்பவம்…., தன் கணவனால் கைவிடப்பட்ட ஒரு நிறுவனத்தை, அவருடைய மனைவி முன்வந்து நடத்திய சம்பவத்தைக் கேள் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! Cafe Coffee Day சம்பவமா…. ஆமாம், ஆமாம், நீ சொல்வது correct தான்… எங்கே…, அதை நீயே சொல்லு….
மேகலா : கர்நாடகாவைச் சேர்ந்த சித்தார்த்… அவர், Cafe Coffee Day என்ற நிறுவனத்தை நிறுவியவர்… அவருடைய திறமையால், அந்த நிறுவனம், குறுகிய காலத்தில் புகழ் பெற்ற நிறுவனமாகியது. என்ன காரணத்தினாலோ…, இவர் 2019-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். யாராலும் நம்ப முடியவில்லை… தற்கொலைக்கான காரணம்…, கடன் தொல்லை…, தொழிலில் நஷ்டம் என்று சொல்லப்பட்டது…. இனி இந்த நிறுவனம் காணாமல் போகும் என்று, அங்கு வேலை பார்த்தவர்களே சொல்ல ஆரம்பித்தனர்…. இந்த பரபரப்பு அடங்கும் முன்பே…, அவருடைய மனைவி ‘மாளவிகா ஹெக்டே’ என்பவர் நிர்வாகத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். யார், தன்னால் இந்தக் கடன் தொல்லையைத் தாங்க முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டாரோ, அவருடைய மனைவி, அவர் விட்டுச் சென்ற அத்தனை பொறுப்புக்களையும், தனியொரு பெண்ணாக ஏற்றுக் கொண்டு…, முதலில் சொத்துக்களை விற்று, 7000 கோடி அளவிலான கடன்களை அடைக்கத் தொடங்கினார். சிறிது காலத்திற்குள்ளாகவே…, தலைவன் இல்லாமல் தள்ளாடும் தன் நிறுவனத்தைத் தோள் கொடுத்து தூக்கி நிறுத்திய ‘சிங்கப் பெண்’ கிருஷ்ணா… வேலை பார்த்தவர்களுக்கு, மீண்டும் நம்பிக்கை கொடுத்து…, இந்த சமுதாயத்தில், ‘பெண்களால் முடியும்’ என்று நிமிர்ந்து நிரூபித்திருக்கிறார் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : Yesss… உண்மை…, உண்மை… பல சமயங்களில்…, பல வீடுகளில், கணவன், தன்னால் முடியாது என்று மனம் சோர்வுற்ற போது…, இந்த home makers…, வீட்டை மட்டுமல்ல மேகலா…, நாட்டையே make over பண்ணக் கூடிய திறம் படைத்தவர்கள் ஆகிறார்கள்… பெண்களால் முடியும் மேகலா….
மேகலா : ஆம் கிருஷ்ணா….இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள், தன் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்புக்களை ஏற்கிறார்கள்… படித்திருந்தால் பரவாயில்லை… வேலைக்குச் சென்று தன் கடமைகளை எப்படியாவது நிறைவேற்றி விடுவார்கள்… ஆனால், என் மாமனாருடைய அம்மா…, என் மாமனார் பிறந்து 6 மாதக் குழந்தையாக இருந்த போதே, பாட்டையா இறந்து விட்டார். 3 குழந்தைகளையும் கையில் வைத்துக் கொண்டு, கிடைத்த வேலையைச் செய்தார். காட்டு வேலைக்குச் சென்றார்… இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்து…, என் மாமனாரையும் வளர்த்து ஆளாக்கியுள்ளார்…. கல்வியறிவு இல்லையென்றாலும், கடமையிலிருந்து பதுங்கி விடவில்லை… ‘பெண்கள் எப்படி வேலைக்குச் செல்லலாம்’ என்ற வியாக்கியானத்தையெல்லாம் ஒதுக்கி வைத்தால்தான், போராடவே முடியும். போராட்டம் என்பது ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்பதில்லை… பெண்களும், போராடும் நேரம் வரும் போது, பின் வாங்குவதில்லை… பெண்கள் எந்த வேலையைச் செய்யவில்லை கிருஷ்ணா…. காட்டு வேலையிலிருந்து…, கல்லுடைப்பது, விறகு வெட்டுவது…, துணி துவைப்பது…, கட்டிட வேலை என்று…, உலகத்தில் ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் பெண்கள் விட்டு வைக்கவில்லை… இப்ப நான் சொல்லப் போகும் சம்பவத்தைக் கேள் கிருஷ்ணா… படிப்பறிவில்லாத பெண்கள் தன் குடும்பத்தைத் தன் தோள் மேலே தாங்கினால்…, படிப்பறிவுள்ள நம் ஔவையார்.., இரு நாடுகளுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்தி, இரு நாட்டு மக்களையும் நண்பர்களாக்கியுள்ளார்…. நீ நம்புறியா கிருஷ்ணா…
கிருஷ்ணர் : நம்ம கண்ணு முன்னாடி நடந்த நிகழ்ச்சியைப் பார்த்து நம்பாமல் இருக்க முடியுமா… பெண்களால் எதுவும் முடியும் மேகலா… எங்கே, அந்த சம்பவத்தை நீ சொல்லு….
(தொடரும்)
Comments
Post a Comment