பெண்களால் முடியும் - பாகம் 7

மேகலா : எந்த வேலையில் பங்கெடுக்கவில்லை கிருஷ்ணா… கணவன் ஏதோ வியாபாரம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நான் சொல்வதெல்லாம், நடுத்தரமாக உள்ளவர்கள் வாழ்க்கையில் நடப்பது… கணவருக்கு அவசரமாக வெளியூரூக்கு purchase பண்ண செல்ல வேண்டியிருந்தால்…, அன்று bank-ல் cheque-ஐ, collection-க்கு போடப் போக வேண்டுமென்றால், அதை உடனே மனைவியிடம் தான் செய்யச் சொல்லுவான் கிருஷ்ணா… எத்தனை ஆடிட்டர்கள், ஆபீசர்கள், வியாபாரிகள், தங்கள் clerical work-களை, தன் மனைவியைச் செய்யச் சொல்லுகிறார்கள்…. Rotation-க்கு பணம் பத்தவில்லை என்றால்…, வீட்டுக்காரம்மாவிடம் தான் கேட்பார்கள். இன்னும் ஒரு விஷயத்தை உன்னிடம் சொல்லியே ஆகணும் கிருஷ்ணா…. பழைய சிவகாசியின் மையப்பகுதிதான்…, அந்தக் காலத்தில் மக்கள் சேர்ந்து வாழ்ந்த பகுதி… இன்று remote area-விலெல்லாம், மக்கள் வீடு கட்டி வாழச் சென்றிருந்தாலும்…, அந்தக் காலத்து சிவகாசி மக்கள், உறவினர்களோடு, ஒரே compound-ல், பக்கத்துப் பக்கத்தில் வீடு கட்டி, ‘row house’ மாதிரி வாழ்ந்து வந்திருக்கின்றனர். அண்ணாச்சிமார்கள்…, மொத்தக்கடை வியாபாரம் பார்த்தால், வீட்டில் பெண்கள், சிறு சிறு பெட்டிக்கடை வைத்து, சோடா, கலர், தின்பண்டம்…, கொஞ்சம் கொஞ்சம் காய்கறி, மளிகை சாமான் என்று வைத்திருந்து கடையைப் பார்த்துக் கொள்வார்கள்…. என்னுடைய பெரிய மாமியார்…, தன் வீட்டு முன் பக்கத்து வாசலில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்வார் கிருஷ்ணா…. கல்லாவில் உட்கார்ந்து கொண்டே…, ஒரு பக்கம் சோறாக்கி, குழம்பு வைப்பார்கள்… இன்னொரு பக்கம் தீப்பெட்டி ஒட்டுவார்கள்… ஒண்ணு தெரியுமா கிருஷ்ணா…, இவர்களுக்கு, வீட்டுக்காரர் என்ன சம்பாதிக்கிறார் என்ற கவலையெல்லாம் கிடையாது… அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேலையைச் செய்வார்கள்… இன்னும் சிலர், விற்காமல் போன காய்கறியை, வற்றல் போட்டு, தன் கடையிலேயே விற்றும் விடுவார்கள் கிருஷ்ணா…. இப்படியான பெண்கள் சம்பாதிக்கும் பணத்தில், தன் மகளுக்கு நகை செய்து, கல்யாணமும் செய்து முடித்து விடுவார்கள் கிருஷ்ணா…. அந்த காலக்கட்டத்தில், அதாவது 80-க்கும் முந்தைய காலக்கட்டத்தில், வீட்டுக்கு வீடு பெண்கள் ஏதாவது வேலை செய்து, தன் கணவனுக்கு வியாபாரத்தில் உதவி செய்வது, தன் பிள்ளைகளுக்கு நகை செய்வது…, மகன்களைப் படிக்க வைப்பது என்று…, பெண்கள் என்ன வேலை செய்யவில்லை கிருஷ்ணா… சிவகாசி நகரமே, பணம் பெருத்த நகரமாக மாறியதற்கு காரணமே, பெண்களின் உழைப்பு, சிக்கனம், சேமிப்பு…., இவைகள் தான் காரணம் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : வாவ்… முடியும் மேகலா…, பெண்களால் முடியும்…. கணவனின் உயிரைப் பறித்துச் சென்ற எமனையே துரத்திச் சென்று, உயிரை மீட்டு வந்த சாவித்திரியின் இனமல்லவா…. கொண்டாட வேண்டிய பெண் இனம்….

மேகலா : சூப்பர் கிருஷ்ணா…. நான் மறந்து போன கதையைக் கூட எடுத்துச் சொல்லி, என்னை சிலிர்க்கச் செய்து விட்டாய் கிருஷ்ணா… எத்தனை பெண்கள், உயிருக்குப் போராடும் கணவனுக்கு, moral support-ஆக மட்டுமில்லை…, விதியுடன் மல்லுக்கட்டி, கடவுளிடம் மன்றாடி, டாக்டருடன் போராடி, கணவனின் உயிரை மீட்டு வந்த சாவித்திரிகள் இங்கு ஏராளம் கிருஷ்ணா…. விதியினால் வேலை இழந்த கணவன்மார்கள் இருப்பாங்கல்ல…, அவங்களுக்கு ஆறுதல் சொல்லி, தான் பொறுப்பேற்று, கிடைத்த வேலையைச் செய்து, குடும்பத்தைக் கட்டிக் காத்த பெண்கள், ஐம்பது வீட்டுக்கு ஒரு வீட்டில் இன்னும் இருக்கின்றனர் கிருஷ்ணா…. இன்னும் ஒரு வேதனையான விஷயம் என்ன தெரியுமா… புருஷன்காரன் கண்ணு மண்ணு தெரியாமல் குடித்து, ரோட்டில் விழுந்து கிடப்பான்… இனி, இவனை நம்பி எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று முடிவு செய்யும் பெண்கள், தீப்பெட்டி office-க்குச் செல்வது, நூற்பாலைக்குச் செல்வது…; ஒண்ணும் கிடைக்கலயா…, வீட்டு வேலை செய்தாவது, பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெண்கள் ஏராளம் கிருஷ்ணா…. இந்த மாதிரி பெண்கள்.., கணவனை வீட்டை விட்டு விரட்டவும் மாட்டார்கள்… தண்டச் சோறு போட்டு வீட்டிலேயே வைத்துக் கொள்வார்கள்… அவனோ…, வேலை வெட்டிக்குப் போகாமல், அங்கங்கே ஒளித்து வைத்திருக்கும் 1/4 துட்டு, 3/4 துட்டை திருடிச் சென்று குடிச்சிட்டு வருவான்… என்னோட சொந்தக்காரப் பெண், அவளோட கணவன்.., குடித்து, பொறுப்பை மறந்தான்… அவளுக்கு மூன்று பெண்குழந்தைகள்… புருஷன் பொறுப்பில்லாமல் இருந்தால் என்ன…, அவள் தீப்பெட்டி ஆபீஸிற்குச் சென்று, உழைத்து, மூன்று பெண்களையும் படிக்க வைத்து…, அதில் ஒரு பெண், போலீஸ் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஓ…. வாவ்….

மேகலா : அவர்களை வேலையிலும் சேர்த்து விட்டு…, இன்று மூத்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து…, ‘ஜாம், ஜாம்’ என்று கல்யாணம் செய்து வைத்து விட்டாள் கிருஷ்ணா…. பெண்கள் எல்லாம், நல்ல வேலையில் சேர்ந்து, இன்று தன்னம்பிக்கையோடு, அவர்கள் வாழ்க்கையை அழகாக வாழ்கிறார்கள் கிருஷ்ணா… இப்போ, சமீபத்தில்தான், மூத்த பெண்ணின் திருமணம் நடந்து முடிந்தது கிருஷ்ணா… இதை அன்றே உன்னிடம் சொல்லணும்னு நினைத்தேன் கிருஷ்ணா.., இன்று சந்தர்ப்பம் கிடைத்தது…., உன்னிடம் சொல்லி விட்டேன். இந்தப் பெண் மட்டுமில்லை கிருஷ்ணா… எத்தனையோ பெண்கள், தங்கள் பொறுப்புகளை, போராடி நிறைவேற்றுகிறார்கள்… அவர்களை எந்த அரசாங்கம் கௌரவிக்கப் போகிறது….

கிருஷ்ணர் : இவர்கள் யாரும்…, தன்னை யாராவது பாராட்டுவார்கள் என்று காத்திருப்பதில்லை மேகலா… தங்கள் கடமையைச் செய்ய, ஓயாமல் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். பொறுப்புகளை, தானே தன் கையில் எடுத்துக் கொள்ளும் பெண்களால், எதுவும் செய்ய முடியும் மேகலா…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2