வலிமை - பாகம் 3

மேகலா : எத்தனையோ பேர் இருக்கிறார்கள் கிருஷ்ணா…. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அனைத்துமே முதல் முயற்சியிலேயே வெற்றி பெறவில்லையே… மின்சார பல்பைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், சிறு வயது முதலே, விஞ்ஞான சாதனங்களுடனே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு…, ஒரு முயற்சி தோற்றதுமே, மறுபடியும் முயற்சி செய்து ஜெயித்தாரா இல்லையா…. ஒரு முறை தான் எரிய வைத்த மின்சார பல்பு பழுதடைந்தது. ஒரு பல்பு பழுதடைந்த நிலையில், அந்த இடத்தில் எரிந்த அத்தனை பல்பும் அணைந்து விட்டது. இப்படி இருக்கக் கூடாதே என்று யோசித்து யோசித்து, திருத்தியமைத்தார். அதன்படி, ஒரு பல்பு பழுதடைந்தால், அது மட்டுமே off ஆகும்படி செய்வதற்கு…, இன்றைய வடிவமைப்பைக் கொண்டு வர எத்தனை போராட்டம் நடந்திருக்கும்… இதற்கெல்லாம்.., எத்தனை மன வலிமை வேண்டும் கிருஷ்ணா…. உடல் வலிமை மட்டும்…, வலிமை கிடையாது கிருஷ்ணா…. என்றுமே தான் செய்யும் வேலையை, சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்…, இதற்காக, அதற்காக விட்டுக் கொடுப்போம் என்று எதற்காகவும் விட்டுக் கொடுக்காத மன வலிமையுடன் வேலை பார்ப்பவர்களால் மட்டுமே, சிறந்த படைப்புகளைக் கொடுக்க முடியும் என்று புரிகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உண்மைதான்…. பொறுமையும், ஒரு வேலையில் முனைப்பும், ஒருவருக்கு மனதில் வைராக்கியத்தை உருவாக்குகிறது. வைராக்கியம் உள்ளவர்களை, யாராலும் தடுக்கவோ, அசைக்கவோ முடியாது…. பாண்டவர்களின் வன வாசம் கூட, அவர்களுக்குள், பொறுமையையும், வைராக்கியத்தையும், தைரியத்தையும் கொடுக்கவில்லையா… வன வாசத்தின் போது, அவர்கள் பட்ட துன்பங்களும், துயரங்களும் கொஞ்ச நஞ்சமில்லை. துரியோதனன் கொடுத்த குடைச்சல்களுக்கு அளவே கிடையாது. பாண்டவர்கள் இருந்த வனத்திற்கு துர்வாசரை அனுப்பி, துர்வாசருக்கு விருந்துபசாரம் பண்ண முடியாமல் தவிக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால், துர்வாசர் கோபமடைந்து, பாண்டவர்களை சபிப்பார் என்று கணக்குப் போட்டான். அதைக் கிருஷ்ணரின் உதவியால், கடந்தார்கள்… துரியோதனனே, பாண்டவர்கள் இடத்திற்கு நேரில் வந்து, அவர்கள் படும் சிரமத்தை ரசிக்க விரும்பி, கந்தர்வர்களிடம் மாட்டிக் கொண்டான். ஜயத்ரதன், திரௌபதியைக் கடத்திச் செல்ல முனைந்து, பாண்டவர்களிடம் தோல்வியடைந்தான்…. இப்படி, ஒவ்வொரு காலகட்டத்தின் அனுபவத்திலும், பாண்டவர்களுக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது… வனவாசம் நிறைவு பெற்ற பிறகு, கௌரவர்கள் தங்களுக்கான உரிமையை கட்டாயம் திருப்பித் தரப் போவதில்லை…, அதனால் நமக்கான உரிமையை, யுத்தம் செய்துதான் பெற வேண்டும் என்று உணர்ந்து, அதற்கான முயற்சியைக் கை விடாமல் இருந்தார்களா, இல்லையா…. சிவபெருமானிடம் இருந்து, ‘பாசுபதா அஸ்திரத்தை’, தவம் இருந்து அர்ஜுனன் எதற்கு பெற்றான். சிறந்த வில்லாளி என்பதால் மட்டுமா… கௌரவர்களை ஜெயித்து, ராஜ்யத்தை அடைய வேண்டும் என்பதுதான் நோக்கம்… சூதாட்டத்தினால் இழந்த ராஜ்யத்தை, போரில் ஜெயித்து மீட்டெடுப்பதற்கு எத்தனை வலிமை வேண்டும்… பொறுமை, தவம், வைராக்கியம், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுதல் என்ற அனைத்தும்…, வலிமைக்கு பலம் சேர்க்கும்… இது மகாபாரதம் உணர்த்தும் உண்மை….

மேகலா : வாவ்…! உண்மைதான் கிருஷ்ணா…. புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுதல் என்ற ஒரு point-ஐச் சொல்லி என்னை யோசிக்க வைத்து விட்டாய் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அப்படியா…., என்ன யோசனை….

மேகலா : பொதுவாக, எவ்வளவுதான் நாம் University rank எடுத்து, Master’s degree வாங்கியிருந்தாலும்…, புதிய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுவதனால் மட்டுமே நாம் அறிவில் வலிமை பெற முடியும்…

கிருஷ்ணர் : எப்படிச் சொல்லுகிறாய்….?

மேகலா : ஒருவன், நிறையப் படிச்சு வேலைக்குப் போகிறான்… அன்றைய நிலையில், அவனுடைய அறிவு, அவனுக்கு வேலை வாய்ப்பை வாங்கிக் கொடுக்கிறது… நல்ல சம்பளம் வாங்குகிறான்… Market-ல் புதுப் புது technology வேகமாக வளர்கிறது. Employee-யோ, தான் வேலைக்குச் சேர்ந்த அறிவோடு, monotonous ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தால்…, புதுசாக வேலைக்குச் சேர்ந்த மற்றொருவன், புது technology-யை உபயோகப்படுத்தி, நம்மைத் தாண்டி, strong-ஆக வேலை பார்க்க ஆரம்பித்து விடுவான். அவனுடைய smart யோசனைகள், market-ல், company-க்கு பலம் சேர்க்கும்… இவ்வளவு ஏன் கிருஷ்ணா…. Consumer products பல, இன்று புதுசு புதுசா யோசித்து விளம்பரப்படுத்தும் marketing மூளையைத்தான் நம்பி இயங்குகின்றன. இந்தப் புது யுக்தி, அறிவால் ஊட்டம் பெற்று, வலிமையாகிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு, புதிய technology-யைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : மேகலா…., நீ சொல்லுவதும் ரொம்ப சரிதான். புதிதாகக் கற்றுக் கொள்வதற்கு, alertness-ம், கற்றுக் கொள்ளும் ஆர்வமும், awareness-ம், ரொம்ப அவசியம். நிஜத்தில் alert ஆக இருப்பவர்கள், நிச்சயம், வலிமையையும், பலத்தையும் வளர்த்துக் கொள்வார்கள்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2