உள்ளத்தனையது உயர்வு - பாகம் 11 (நிறைவுப் பகுதி)
மேகலா : நீ எங்களை நினைத்து வருத்தப்படுகிறாயா கிருஷ்ணா…. எனக்கென்னவோ, பிள்ளைகளை வேலை செய்யப் பழக்குவதற்கு அம்மா trick செய்வது பரவாயில்லையோ என்று தோன்றுகிறது…. கிருஷ்ணர் : நீ சொல்வது சரிதான் என்றாலும், பிள்ளைகளுக்கு, சிறுவயது முதலே, பிறருக்கு உதவ வேண்டும்…, சாப்பிடும் பொருளோ, அல்லது சில ‘ஜாமெண்ட்ரி பாக்ஸ்’ மாதிரியான பென்சில், note-book என்ற பொருட்களை, எல்லோருக்கும் share பண்ணணும், ‘சண்டை போடக் கூடாது’, ‘விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று சில கதைகளைக் கூறி புரிய வைக்க வேண்டும்… அப்பத்தான், demand பண்ணும் பொருளை வாங்கிக் கொடுத்தாவது வேலை செய்ய வைப்பது என்பதை ஒத்துக் கொள்ளலாம்… இருந்தாலும், உயர்ந்த உள்ளம் என்பது, சொல்லிக் கொடுத்து வருவதல்ல….. ஆனாலும், ஒரு மனிதனின் வளர்ச்சி, இப்படியும் வளர வாய்ப்பிருக்கிறது… நானும், என் அப்பாவைப் போல…, படித்து doctor ஆவேன் என்பதில் தொடங்கி…, எங்க teacher மாதிரி பாடம் நடத்துவேன்…. கொஞ்சம் வளர்ந்த பின், ‘தோனி’ மாதிரி விளையாடுவேன்… அப்துல் கலாம் மாதிரி scientist ஆவேன்… நானும் pilot ஆவேன்… என்று ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிய வரும் போது, அவர்கள் மாதிரி த...