உள்ளத்தனையது உயர்வு - பாகம் 11 (நிறைவுப் பகுதி)
மேகலா : நீ எங்களை நினைத்து வருத்தப்படுகிறாயா கிருஷ்ணா…. எனக்கென்னவோ, பிள்ளைகளை வேலை செய்யப் பழக்குவதற்கு அம்மா trick செய்வது பரவாயில்லையோ என்று தோன்றுகிறது….
கிருஷ்ணர் : நீ சொல்வது சரிதான் என்றாலும், பிள்ளைகளுக்கு, சிறுவயது முதலே, பிறருக்கு உதவ வேண்டும்…, சாப்பிடும் பொருளோ, அல்லது சில ‘ஜாமெண்ட்ரி பாக்ஸ்’ மாதிரியான பென்சில், note-book என்ற பொருட்களை, எல்லோருக்கும் share பண்ணணும், ‘சண்டை போடக் கூடாது’, ‘விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று சில கதைகளைக் கூறி புரிய வைக்க வேண்டும்… அப்பத்தான், demand பண்ணும் பொருளை வாங்கிக் கொடுத்தாவது வேலை செய்ய வைப்பது என்பதை ஒத்துக் கொள்ளலாம்… இருந்தாலும், உயர்ந்த உள்ளம் என்பது, சொல்லிக் கொடுத்து வருவதல்ல….. ஆனாலும், ஒரு மனிதனின் வளர்ச்சி, இப்படியும் வளர வாய்ப்பிருக்கிறது… நானும், என் அப்பாவைப் போல…, படித்து doctor ஆவேன் என்பதில் தொடங்கி…, எங்க teacher மாதிரி பாடம் நடத்துவேன்…. கொஞ்சம் வளர்ந்த பின், ‘தோனி’ மாதிரி விளையாடுவேன்… அப்துல் கலாம் மாதிரி scientist ஆவேன்… நானும் pilot ஆவேன்… என்று ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிய வரும் போது, அவர்கள் மாதிரி தானும் வர வேண்டும் என்று ஆசையை மனதில் வளர்த்து.., அதன்படி கனவுகளை மெருகேற்றும் பொழுது, உலகத்தில் நிறைய பாடங்களை மனிதன் கற்றுக் கொள்ளத் தொடங்குகிறான்…. அது நல்ல விஷயங்களாக இருக்கும் பட்சத்தில், அவனுடைய மனதும் பக்குவமடைகிறது… அந்தந்த சமயங்களுக்கேற்ற செயல்களை செய்யத் தூண்டுகிறது… அது நல்ல செயலாகும் பொழுது, மனிதன் உயர்ந்தவனாகிறான். உதாரணத்திற்கு…, அப்பா மாதிரி doctor ஆவேன் என்ற எண்ணம் உறுதியாகும் பொழுது, கடுமையாக முயற்சி எடுத்து படிக்கிறான்…, doctor ஆகிறான்… நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறான்… அவர்கள் அவனை மனசார வாழ்த்துகிறார்கள். இன்னொருவருக்கு இலவசமாக வைத்தியம் பார்க்க நேரிடுகிறது. அவர்கள் அவனை கடவுளாகப் பார்க்கிறார்கள்… அவன் மனதில் தெய்வம் குடி கொள்கிறது… இப்படி, காலம் மனிதனை மேலோனாக்குகிறது….
மேகலா : வாவ்…! ரொம்ப சரி கிருஷ்ணா… நீ சொல்லச் சொல்ல…, இப்படி…, இப்படித்தான் மனிதன் உயர்ந்தவனாகிறான்… இதுதான் உண்மை என்றும் தோன்றுகிறது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : உயர்ந்தவனாக மேன்மையுற, சிலருக்கு காலம் கற்றுக் கொடுக்கும்… சிலருக்கு, வாய்ப்புகள் வழி செய்து கொடுக்கும்… பலருக்கு, ஆச்சாரியர்கள் தட்டிக் கொடுத்து மேன்மையாக்குவார்கள். இன்னும் சிலருக்கு, பெற்றோர்கள் நல்வழிப்படுத்துவார்கள்…. நல்ல புத்தகங்களை வாசிப்பதால், சிலர் மேன்மையுறுவார்கள்… வெகு சிலரே, தானே தன் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, பாடம் படித்து, தன்னை மேன்மைப்படுத்திக் கொள்கிறார்கள்… ஒன்று நிச்சயமாகத் தெரிந்து கொள் மேகலா…. ஆதிமனிதன் பிறந்த காலம் தொட்டு, இந்த உலகம், மனிதனிடம் மேன்மையான பண்புகளை மட்டுமே விரும்புகிறது… இதில் எந்த வித கருத்து மாற்றமுமில்லை… எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நல்லவனாகவும், பிறருக்கு உதபுவனாகவும் வாழ்வது…., மனிதனை மேலோனாக்கும். அதற்கு சந்தர்ப்பம் இல்லையென்றாலும், தன்னை ஒருவர் பாராட்டுவதனால், அதற்கு ஆசைப்பட்டாவது நல்ல காரியம் செய்ய முனைய வேண்டும். நமக்கு ஒரு இக்கட்டான சூழலில், இன்னார் கட்டாயம் உதவுவார் என்ற காரணத்துக்காகவாவது, பிறருக்கு உதவும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்… இந்த உலகத்தை கடவுள் படைக்கும் பொழுது, ஒவ்வொரு மனிதனுக்கிடையேயும், ஒரு invisible சங்கிலியை மாட்டித்தான் அனுப்பியிருக்கிறார்.. இந்த சங்கிலித் தொடர் அறுபடாமல், ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவி செய்து கொண்டு, நன்மை அடைவீராக என்று ஆசிர்வதித்து அனுப்பியிருக்கிறார். உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள், அதைப் புரிந்து கொண்டு, வாழ்விலும் உயர்கிறார்கள்…
தாமரைப்பூ குளத்தின் நீரின் level-க்கு மேல் தன்னை உயர்த்தி நிற்பது போல, நல்ல எண்ணம் கொண்டவர்களும், தன் எண்ணத்தினால் உயர்ந்து நிற்கிறார்கள்…
மேகலா : Great கிருஷ்ணா…. அப்புறம்…,
கிருஷ்ணர் : அம்மாடியோவ்…. அடுத்தடுத்து கேள்விகள் கேட்டு…, கட்டுரையை முடிக்கவே விட மாட்டாளே…. இங்கு, கேள்விகளுக்கு பதில் கிடையாது… வேறு இடம் செல்லவும்….
(நிறைவு பெறுகிறது)
Comments
Post a Comment