ஏணிப்படிகள் - பாகம் 3
மேகலா : டீச்சரோட அணுகுமுறைதான் கிருஷ்ணா…. முதல் முதலாக school-க்கு வருவதால், பிள்ளைகள் பயந்து போய் அழுகும் கிருஷ்ணா…. டீச்சர்…, அம்மாவிடம் கண்ணை சிமிட்டி போகச் சொல்லி விட்டு, ‘என்ன கண்ணு…, அழக் கூடாது…, இங்க பாரு…, டீச்சர் உனக்கு மிட்டாய் வச்சிருக்கேன் பாரு’ என்று mesmerizing-ஆ பேசும் போது, பிள்ளைகள் பாதி control ஆயிரும்…. ஒரு வாரம், பத்து நாள்…, இந்த கூத்து முடிந்ததும், முதலில் பாட்டு, rhymes என்று பிள்ளைகளுக்கு அபிநயம் பிடித்து சொல்லிக் கொடுப்பதும்…, பிள்ளைகள் ஆளுக்கொரு சுதியில் ராகம் இழுப்பதும்…, பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்… நெசம்மா சொல்லணும்னா, ‘மாண்டிசோரி’ கல்வி கற்பித்தலே இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்லுமளவு, டீச்சரின் சொல்லிக் கொடுக்கும் பண்பு…, அபாரமானது கிருஷ்ணா…. கிருஷ்ணர் : இந்த மாதிரியான ஏணிப்படிகளால் மட்டும் தான், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கான பணியை சிறப்பாகச் செய்ய முடியும்… மேகலா…, சூப்பர்…, சூப்பர்…. மேகலா : இது மட்டுமல்ல கிருஷ்ணா… நான் 3rd Std படிக்கும் போது, எங்க டீச்சர் எனக்கு எப்படி கணக்கு சொல்லிக் கொடுப்ப...