ஏணிப்படிகள் - பாகம் 2
கிருஷ்ணர் : மேகலா…, உன்னிடம் ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன். இப்பெல்லாம், பிள்ளைகளுக்கு சரியான school select பண்ணுவதற்கு, parents, Google-ல் தேடி…., friends-இடம் கேட்டு, அப்படியிப்படின்னு அலப்பறைய கூட்டுறாங்க… இதில் school fees விவகாரம் ஏதுவா இருக்கணும்கற எதிர்பார்ப்பு வேற இருக்கும்…. சரி…, நீயெல்லாம் school-ல சேரும் போது, நிலவரம் எப்படி… உனக்குத்தான் அந்தக்காலத்து கதையை பேசுறதுனா ரொம்பப் பிடிக்கும்ல… அதுவும், ஏணிப்படிகளைப் பற்றிப் பேசுறோம். அந்தக் காலத்து ஆசிரியர்களைப் பற்றி தெரிஞ்சிக்கலாம்ல….
மேகலா : ஐயோ…, கிருஷ்ணா…, அந்தக் காலத்து நிகழ்ச்சிகளை பேசுறதுனாலே, எனக்கு பிரியாணி சாப்பிடற மாதிரி. நீ வேற கேட்டுட்டயா… இதோ சொல்றேன் கிருஷ்ணா….
கிருஷ்ணா…, முதல்ல எங்க school-அப் பத்தி சொல்லணும் கிருஷ்ணா…. எங்கள் பள்ளி நூறாண்டுகள் கடந்தது… பல கலெக்டர்களை…, பல பொறியாளர்களை…, பல தொழிலதிபர்களை உருவாக்கிய இந்தப் பள்ளிக்கூடம்…, நாடார் சமுதாய மகமை பண்டினால் ஆரம்பிக்கப்பட்டது… விசாலமான area… ஒவ்வொரு வகுப்பும், காற்றோட்டமாக, விசாலமாக…, 50 மாணவர்கள் கூட, சுலபமாக அமர்ந்து கல்வி கற்பதற்கு ஏதுவாக இருக்கும்… பிரிட்டிஷார் காலத்துலேயே கட்டப்பட்டது என்றாலும்…, நம்முடைய உணர்வுக்கும், வசதிக்கும் ஏற்ற மாதிரி அமைக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணா…. நான் பள்ளியில் சேர்ந்தது…, 1959-ஆ, 60-ஆ என்று தெரியவில்லை. என்னை பள்ளியில் சேர்க்க, என் அம்மாலாம் school-க்கு வரலயாம் கிருஷ்ணா…. எங்க மாம்மைதான், school-ல் பேர் சேர்த்து விட்டார்களாம்….
கிருஷ்ணர் : பேர் சேர்ப்பதுனா என்ன…? ச்சும்மா, வயசானவங்க போயி…, அப்படியே சேர்த்துரலாமா… Identification-க்கு birth certificate எதுவும் தேவையில்லையா…
மேகலா : கிருஷ்ணா…., நான் school-ல சேர்ந்த காலம்…, காமராஜர் முதலமைச்சர் ஆக இருந்த கல்வியின் பொற்காலம் கிருஷ்ணா…. பிள்ளைகள் எல்லோரும் கல்வி கற்பதற்கு, பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்பதற்காக…, ‘birth certificate’ கூட, school-ல கேட்க மாட்டாங்க கிருஷ்ணா… வீடுகளில், 2 வருஷ இடைவெளியில், அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என்று அடுத்தடுத்து பிள்ளைகள் பிறப்பதால், பெரிய பிள்ளைக்கு மூன்று வயசு வந்தவுடன்…, பள்ளியில் சென்று, வயது வரம்பு 5 என்று குறிப்பிட்டு இருந்தாலும் கூட, பிள்ளைக்கு 5 வயசாச்சு என்று சேர்த்து விடுவார்கள்…. டீச்சரும் ஒன்றும் கண்டுக்க மாட்டாங்க. பிறந்த மாசத்தைக் கேட்டு, அவர்களாக ஒரு ’date of birth’ போட்டு, ஒரு certificate ready பண்ணி, school-ல சேர்த்திருவாங்க… அநேகமாக, அந்தக் காலகட்டங்களில் சரியான date of birth கொடுத்திருக்க மாட்டார்கள்.
கிருஷ்ணர் : நான் கேள்வி கேட்டது சரிதான் போலயே…, சுவாரஸ்யமான கதை வருது… இன்றும் 2 வயசுலதான் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கிறார்கள்…. ஆனால், kindergarten-ல்….
மேகலா : எங்களையும் 2 1/2 , 3 வயசுலேயே 1st Std-ல் சேர்த்திருவாங்க கிருஷ்ணா… அந்த காலகட்டம் தான்…, மக்களுக்கு கல்வி மீது ஒரு விழிப்புணர்வு வந்த காலம்… at least, 10th std வரைக்குமாவது பிள்ளைகளை படிக்க வச்சிருவாங்க… எங்க ஊர்ல…, அந்த கால கட்டத்துல, தொழில் புரட்சியும் நடந்தது… வீட்டுக்கு அருகிலேயே, தீப்பெட்டித் தொழிற்சாலை இருக்கும். ஒவ்வொருவர் வீட்டிலும், தீப்பெட்டி ஒட்டுவதும்…, தீக்குச்சிகளை frame-ல் அடுக்கும் வேலையும் கட்டாயம் இருக்கும் கிருஷ்ணா…. அம்மாமார்கள், எந்த அளவு பிள்ளைகள் படிக்கணும் என்று விரும்பினார்களோ…, அந்த அளவு, தன் பிள்ளைகள் ஒவ்வொருவரும், 10 frame-ஆவது அடுக்கிய பிறகுதான், home- work-ஓ, exam-க்கு படிப்பதோ செய்ய வேண்டும் என்று strict ஆக சொல்லிருவாங்க. இன்றைய அண்ணாச்சிமார்கள், அக்காமார்கள், frame அடுக்காமல், தீப்பெட்டி ஒட்டாமல் தப்பித்தவர்களே கிடையாது… அதிலும், ‘ஹரிக்கேன்’ விளக்கில், home – work பண்ணுபவர்கள், வீட்டுக்கு வீடு இருப்பார்கள் கிருஷ்ணா… ஒரு நாலு நாள், மாணவர்களில் யாராவது ஒருவர் school-க்கு வரவில்லை என்றால், teacher-க்குப் பொறுக்காது. எங்கே பிள்ளையை school-க்கு அனுப்பாமல், தீப்பெட்டி office வேலைக்கு அனுப்பிட்டாங்களோ என்று பயந்து போய்…., teachers, சம்பந்தப்பட்ட மாணவனின் வீட்டுக்கே சென்று விசாரிக்கப் போயிருவாங்க… ஏதாவது காய்ச்சல், அம்மை என்றால் மட்டும் தான் rest எடுக்கச் சொல்லி விட்டு, free-யா ஆவாங்க கிருஷ்ணா…. அரசாங்கம், பள்ளிகளுக்குப் போட்ட உத்தரவு அப்படி கிருஷ்ணா… எழுதப் படிக்கத் தெரியாது, ஒரு பிள்ளை கூட இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இப்படி அடித்தளம் போட்டதால் தான்…, இன்று எல்லார் கையிலும் smart phone தவழும் அளவுக்கு technology வளர்ச்சி பெற்றிருக்கிறது….
மேகலா : கிருஷ்ணா! உனக்கு ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லட்டா… நான் 1st Std படிக்கும் காலத்தில்…, ஊர் முழுவதும் இருக்கும் அம்மாமார்கள் அத்தனை பேரும், தங்கள் குழந்தைகளை, ‘ஞானசௌந்தரி’ டீச்சர், ‘சொர்ணம்மா’ டீச்சர், ‘பாக்கியம்மா’ டீச்சரிடம் தான் படிக்கணும்னு பிடிவாதமா சேர்க்க வருவார்கள்… ஒண்ணாங்கிளாஸ் ‘G’ section வரைக்கும் இருந்தாலும், ஒரு கிளாஸுக்கு 60, 65 students வரைக்கும், A, B, C – ல மட்டுமே பிள்ளைகளைச் சேர்ப்பார்கள்…
கிருஷ்ணர் : அந்த மூன்று class மட்டும், அப்படியென்ன விசேஷம்….
(தொடரும்)
Comments
Post a Comment