ஏணிப்படிகள் - பாகம் 3

மேகலா : டீச்சரோட அணுகுமுறைதான் கிருஷ்ணா…. முதல் முதலாக school-க்கு வருவதால், பிள்ளைகள் பயந்து போய் அழுகும் கிருஷ்ணா…. டீச்சர்…, அம்மாவிடம் கண்ணை சிமிட்டி போகச் சொல்லி விட்டு, ‘என்ன கண்ணு…, அழக் கூடாது…, இங்க பாரு…, டீச்சர் உனக்கு மிட்டாய் வச்சிருக்கேன் பாரு’ என்று mesmerizing-ஆ பேசும் போது, பிள்ளைகள் பாதி control ஆயிரும்…. ஒரு வாரம், பத்து நாள்…, இந்த கூத்து முடிந்ததும், முதலில் பாட்டு, rhymes என்று பிள்ளைகளுக்கு அபிநயம் பிடித்து சொல்லிக் கொடுப்பதும்…, பிள்ளைகள் ஆளுக்கொரு சுதியில் ராகம் இழுப்பதும்…, பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்… நெசம்மா சொல்லணும்னா, ‘மாண்டிசோரி’ கல்வி கற்பித்தலே இங்கிருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது என்று சொல்லுமளவு, டீச்சரின் சொல்லிக் கொடுக்கும் பண்பு…, அபாரமானது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இந்த மாதிரியான ஏணிப்படிகளால் மட்டும் தான், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கான பணியை சிறப்பாகச் செய்ய முடியும்… மேகலா…, சூப்பர்…, சூப்பர்….

மேகலா : இது மட்டுமல்ல கிருஷ்ணா… நான் 3rd Std படிக்கும் போது, எங்க டீச்சர் எனக்கு எப்படி கணக்கு சொல்லிக் கொடுப்பாங்க தெரியுமா….

கிருஷ்ணர் : உனக்குதான், கணக்குனா…., உன் பெருமூளை, சிறுமூளையெல்லாம் strike பண்ண ஆரம்பிச்சிருமே….

மேகலா : அதென்னவோ உண்மைதான் கிருஷ்ணா…. பல சமயத்துல, மூளை காணாமக் கூடப் போயிரும் கிருஷ்ணா…. அப்போ, எங்க டீச்சர்…, என்னைத் தன்னருகில் நிற்க வைத்து, ‘நானும், மணியும் கணக்கு செய்யப் போறோம்…. யார் first முடிக்கிறாங்கன்னு பார்ப்போம்’…, அப்படீன்னு மற்ற students கிட்ட challenge விட்ருவாங்க…. நான் கூட, வெலவெலத்துப் போயிருவேன்… பிள்ளைகளெல்லாம்…, வேக வேகமா கணக்கு செய்வாங்க…என்னிடன் husky-யா பேசுவாங்க…’ நாம சீக்கிரம் முடிச்சிருவோம்னு’… கணக்கோட outline-அ ரகசியமா சொல்லுவாங்க கிருஷ்ணா… நான் வேகமா செய்ய ஆரம்பிச்சதும்…., ‘நாங்கதான் முதல்ல முடிக்கப் போறோம்’…, என்று சொல்லி…, எனக்கு வராத கணக்கையும் வர வச்சிருவாங்க கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : வாவ்! பிரமாதம்…. நீ நல்லா கணக்கு செய்யணும்னு, அவங்களுக்கு ஏன் தோணணும்…. ஒரு ஆசிரியரால் மட்டும் தான், தன்னிடம் கல்வி கற்க வந்த எல்லாரும் நல்லா படிக்கணும் என்று நினைக்க முடியும். இன்று நீ உன் நினைவில் அந்த ஆசிரியரைப் பற்றி நினைத்து பெருமைப்படுகிறாயே…, அதுதான் நீ அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடன்…. இவர்கள்தான் உண்மையான ஏணிப்படிகள்… வாவ்…, சூப்பர்… உன் பழைய நினைவுகளை இதற்காகத்தான் தூண்டி விட்டேன். அன்றைய அரசாங்கத்தின் கல்விக் கொள்கையையும், ஆசிரியர்களின் தன்னலமற்ற ஆசிரியப்பணியும், நீ சொல்லும் போது…., உண்மையிலேயே ஆசிரியர்களை…, இல்லையில்லை…, ஏணிப்படிகளை பூஜிக்கத் தோணுது மேகலா…. கல்வி மட்டுமல்ல மேகலா…, இன்னும் எத்தனையோ துறைகளிலும் கூட, மனிதனை ஏற்றி விடும் ஏணிப்படிகள், சப்தமில்லாமல் தன் பணியைச் செய்து கொண்டே இருக்கு மேகலா…

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… நீ சொல்லும் போது, எனக்கு இன்னும் வேறு சுவாரஸ்யமான ஏணிப்படிகளின் பணிகள் ஞாபகத்துக்கு வருது கிருஷ்ணா…. கட்டிடப் பணியாளர்களை மேலேயேற்றி, தாங்கிப் பிடித்து, வேலையை திறம்படச் செய்ய வைக்கிறது என்று பார்த்தோமல்லவா… நாங்கள் flight-ல் ஏறுவதற்கு முன்பாக, boarding pass வாங்கி, check-in முடித்து விட்டு, விமானத்துக்குள் நுழைய வேண்டும். அதற்கு இந்த ஏணி, தன் சக்கரங்களால் விரைந்தோடி வந்து, எங்களை விமானத்துக்குள் ஏற்றி விடுகிறது… நாங்களும், boarding pass குறிப்பிட்ட No., தேடி அமர்ந்து…, காற்றைக் கிழித்து வானத்தில் பறந்து சுகமாய்…, பயணத்தை அனுபவிக்கிறோம். இது மட்டுமல்ல கிருஷ்ணா… Train-ல் பயணிகளை ஏற்றி விடும் படிகள் கூட, நம்மோடு பயணித்தாலும்…, சுகமான பயணம் என்பது பயணிகளுக்குத்தானே…

கிருஷ்ணர் : எப்படி…., train-லதான் படிகளும் பயணம் செய்யுதுல…

மேகலா : அது இல்ல கிருஷ்ணா…. என்னதான் ஏணிப்படிகள், train-உடன் பயணித்தாலும், இரவு முழுதும் விழித்திருந்து, ஒவ்வொரு station-லயும், பயணிகளை ஏற்றி விடும் வேலைகளை செய்து கொண்டேதான் இருக்கும். ஆனா,. பயணிகள், ஜாலியாக தூங்கிக் கொண்டு வரலாமே….

கிருஷ்ணர் : ஏணிப்படிகளின் வேலை இது… இன்னும் ஒரு சிறப்பான ஏற்றி விடும் வேலையை, இந்த ஏணிப்படிகள் செய்யுது… உனக்குத் தெரியுமா….

மேகலா : நீ என்னவோ சூட்சுமமாய் சொல்லுற…, ஏதோ புரியற மாதிரி இருக்கு…., ஆனால், துல்லியமாய் தெரியலயே கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஐயப்பன் கோவிலுக்கு நீ போகவே இல்லை… ஆனால், வடபத்ர சயனர் கோவிலுக்குப் போயிருக்கியே…. இப்ப புரியுதா….

மேகலா : புரியுது…, புரியுது, கிருஷ்ணா… நான் எப்படி மறந்தேன். லக்ஷ்மிநரசிம்மரிடம் அனுமதி பெற்று…, படிகளின் மீது ஏறி வந்தால்…, பிரம்மாண்டமாய், வடதிசையை நோக்கிப் படுத்திருக்கும் எம்பெருமான் வடபத்ரரின் ஒளி மிகுந்த புன்னகை முகம், காந்தமாய் என்னை இழுக்கும். ஓடிப் போய் அவரை தரிசனம் பண்ணி, ஸ்ரீபாதம் பார்த்து, கன்னத்தில் போட்டு, பெருமாளின் திருமுகத்தினிடமிருந்து என் பார்வையை விலக்கவே முடியாமல், மெய் மறந்து நிற்பேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஒரு 5 நிமிடம் இந்த உலகத்தின் நிகழ்வுகளை மறக்கச் செய்து, பெருமாளின் புன்னகையிலேயே உன்னை ஐக்கியமாக்கச் செய்தது யார்…, இந்த ஏணிப்படிகள் தானே…. உன்னை மாதிரி எத்தனை பேரை மேலே ஏற்றியிருக்கிறது… இன்னும் ஒன்று தெரியுமா…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1