ஏணிப்படிகள் - பாகம் 1

மேகலா : ஏ! கிருஷ்ணா…, இதோ நானும் வாரேன்… கொஞ்சம் நில்லு. என்னால் வேகமா நடக்க முடியல… கிருஷ்ணா…., நில்லு….

கிருஷ்ணர் : ஹையைய்யோ…., இவ பாத்துட்டாளா…. இனி தப்ப முடியாதே… கேள்வியால என்ன குடைஞ்சிருவாளே… இன்னைக்கு என்ன கேக்கப் போறாளோ…, தெரியலயே… வா, மேகலா… என்ன இந்தப் பக்கம் வந்திருக்க… நான் அப்படியே காத்து வாங்கலாம்னு வந்தேன். உன்னை எதிர்பார்க்கல… அதான் வேகமா போய்க்கிட்டு இருந்தேன்… என்ன…, உன்னை கொஞ்ச நாளா ஆளையே காணோமே… ஊருக்கு எங்கயும் போயிட்டயோ….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. சென்ற வாரம், திண்டுக்கல்லில் உள்ள ‘கல்யாண சௌந்தரராஜப் பெருமாள்’…, ‘சௌந்தரவல்லித் தாயார்’ குடியிருக்கும் கோயிலுக்கும்…, கோட்டை மாரியம்மன் கோயிலுக்கும் சென்றிருந்தோம் கிருஷ்ணா…. அடுத்து நம்ம ஊரில், ஆடிப்பூரத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது… எங்க மாமனார் நினைவு நாள்…, என்று அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளினால் எழுத ஆரம்பிக்காமல் விட்டுட்டேன்… அறிவு வற்றிப் போய் விடுமோ என்று பயந்து போய்…, இன்று எழுத உட்கார்ந்து விட்டேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அறிவு வற்றி விடுமா…! என்ன உளறுகிறாய்… அறிவு, கல்வி.., இவையெல்லாம் ஊற்றுநீர் தேங்கியிருக்கும் மணற்கேணி மாதிரி… தொடத் தொட, நீருற்று சுரந்து வரும்… சரி…, அது இருக்கட்டும்… இன்று என்ன தலைப்பில் பேசலாம் என்றிருக்கிறாய்….

மேகலா : கிருஷ்ணா….., இப்போ, சமீபத்தில், என் வீடு renovation வேலை நடந்ததுல கிருஷ்ணா… Car shed-ஐ பிரித்து, மேய்ந்து…, புதுசாக்கினோம். அடுத்து…, வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் painting பண்ணினோம். இதற்கு உதவுவதற்காக ஏணிகளை, ஆசாரியும், painter-ம் இறக்கியிருந்தார்கள். இந்த ஏணி, ஒரு நாள், வேலையாட்களை மேலே ஏற்றி, frame மாட்டச் செய்யும்…, இன்னொரு நாள், glass frame-னால், side-களை அடைக்கும்…. இன்னும் ஒரு நாள், தண்ணீர் தொட்டியில் இறக்கி, கீழேயுள்ள பொத்தல்களை, விரிசல்களை பூசச் செய்யும். கொஞ்ச நாள் கழித்து, painter-ஐ மேலே ஏற்றி, சாரம் கட்ட வைத்து, விரிசலில் லப்பம் அடைக்க வைத்து, தூண்களில் சாய்ந்து, அதன் சுளுக்கெடுத்து, painter-ஐ பூச வைத்து…, வீட்டையே அழகுபடுத்தி விட்டது… இந்த ஏணிப்படிகளின் உதவியால், இன்று என் வீடு, தங்கமாய் ஜொலிப்பதைப் பார்க்கிறேன். என் நினைவுகள் எங்கோ போவதையும் பார்க்கிறேன்….

கிருஷ்ணர் : அதனால், ‘ஏணிப்படிகள்’ என்ற தலைப்பில் எழுதப் போகிறாயாக்கும்…

மேகலா : Yes, கிருஷ்ணா…. அதற்கு நீதான் எனக்கு help பண்ணணும் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நானா…! உனக்கென்னம்மா…, நீ சொல்லிட்டு பேனாவத் தூக்கிருவ… நீ கேக்குற கேள்விக்கு நானுல்ல பதிலைத் தேடணும்….

மேகலா உன் திருவடிகளால் இந்த உலகத்தை அளந்து…., விண்ணையும் அளந்து காட்டியவன் நீ…. இந்தப் பிரபஞ்சத்தில், நீ அறியாத செய்தி உண்டா, கிருஷ்ணா…. என்னிடம் மட்டும் ஏன் இப்படி நடிக்கிறாய்…..

கிருஷ்ணர் : சரி…, உன்னை விட்டால்…, நீ முழம் போட ஆரம்பித்து விடுவாய்…. உன்னை ஏற்றி விடும் ஏணிப்படிகளைப் பற்றி அலசலாம்… உனக்கு ஒண்ணு தெரியுமா…. அறிவுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும்…, அவன் கற்கும் கல்வி தான் அவனை ஏற்றி விடும் ஏணிப்படிகள், மேகலா….. நீ சொன்னாயே…. ‘இன்று என் வீடு தங்கமாய் ஜொலிப்பதாக’… அனைத்து பேரையும் மேலே ஏற்றி, அதற்கான வேலைகளையும் செய்ய வைத்தது என்று… அதேதான்…. ஒவ்வொரு தனி மனிதனையும், அவன் கற்கும் கல்வி, அவனை மேலே ஏற்றி விடுகிறது…. அவன், இன்னொரு தங்கமயமான உலகத்தைப் பார்க்கிறான்.

மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. மனிதர்களுக்கு, கல்விதான் ஏணிப்படிகள்…. நீ சொல்லுவதை நானும் ஒத்துக் கொள்கிறேன்… அதற்கும் முன்னாலேயே…, ‘அம்மா’…, என்ற ஆசிரியர், தன் குழந்தை பிறந்ததிலிருந்து…, அந்தக் குழந்தையை வளர்க்க…, பசியறிந்து, உணவு கொடுக்கிறாள்…. அது பேச விரும்பும் போது…, கூடவே, ’ங்கா’.., ‘க்கா’ என்று குரலெடுத்துக் கொடுத்து…, அம்மா, அப்பா, தத்தா, பாட்டி…, இது நிலா…, இது வானம்…, குருவி…, காகா…, என்று சொல்லிக் கொடுக்கிறாளே… அப்படீன்னா…, அவள்தானே, முதல் ஏணிப்படி கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : அப்படீன்னும் சொல்லலாம்…. நீ என்ன சொன்னாய்…. எங்க வீட்டுல ஏணிப்படி…, ஆசாரியை ஏற்றி விட்டு…, frame மாட்ட வைத்தது…. பொத்தல்களை, விரிசல்களை பூசச் செய்தது…. லப்பம் அடைக்க வைத்தது… paint அடித்து, தங்கமாய் மின்ன வைத்தது என்று சொன்னாயா…. ஒரு மனிதன், ஒரு துறையில் நன்கு பயிற்சி எடுத்த பின்பு தான்…, ஏணிப்படிகள்…, அந்த மனிதனை மேலே ஏற்ற முடியும்… Painter-ம், ஆசாரியும், தன் துறைக்கான கல்வியை, யாரோ ஒருவரிடம் கற்ற பின்புதான்…, மேலே ஏறி பணி செய்ய முடியும்… அதனால் தான், யாரோ ஒருவர் கற்றுக் கொடுத்த கல்வி தான் மனிதனுக்கு ஏணிப்படிகளாகும் என்று சொன்னேன்… அம்மா…., பிள்ளையை இயங்க வைக்கிறாள். இந்த உலகத்தின் இயக்கத்தில் தன் பிள்ளையையும் ஒரு இயக்கமாக்க முயற்சி செய்கிறாள். தன் பிள்ளையை, கல்வி கற்கும் நிலைக்குத் தயாராக்குகிறாள்… நிறைய அம்மாக்கள்…, பிள்ளைகளை motivate பண்ணி…, எதிர்காலக் கனவுகளை, அந்தப் பிள்ளைகள் மனதில் ஆழமாக விதைக்கிறார்கள். அது, அவர்களை இயல்பாகவே உசுப்பி விடுகிறது என்றாலும் கூட…, இவர்கள் செயல், ஏணியை எடுத்தி நிறுத்தி வைக்கும் வேலைதானே…. கல்வியும்…, கற்றுக் கொடுக்கும் ஆசிரியரும் ஏற்றுவது போல…, அம்மாவின் motivation ஏற்றி விடாது…

மேகலா : ஓ…, ஓ….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1