தன்னம்பிக்கை - பாகம் 1
மேகலா : ஹாய் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : என்னம்மா…, அதுக்குள்ள வந்துட்ட… இன்னும் ஒரு வாரத்துக்கு நீ என்னைத் தேடவே மாட்டேன்னு நினைச்சேன்… என்ன…, bore அடிக்குதா…. மேகலா : Bore அடிச்சா மட்டும் தேடுவதற்கு பரம்பொருள் கிருஷ்ணன்… சினிமா தியேட்டரா கிருஷ்ணா… நீ என் குரு… என் கடவுள்… அதுக்கும் மேல…, என் மூச்சே நீதான கிருஷ்ணா…. கிருஷ்ணர் : சரி…, சரி…, ரொம்ப அலட்டாத…. இன்னைக்கு என்ன தலைப்புல பேசலாம்னு இருக்க… மேகலா : கிருஷ்ணா…, என் வாழ்க்கையில், இந்த அளவுக்கு, பக்குவமாய், திருப்தியா நான் இருக்கேன்னா…, சந்தோஷமா எனக்கான கடமையைச் செய்யிறேன்னா…, அதெல்லாம் நீ எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்… ’பிரச்னை என்பது, வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் வரத்தான் செய்யும்… அதையெல்லாம் பார்த்து துவண்டு விடுவதால் மட்டும்…, பிரச்னை விலகப் போவதில்லை…. அதற்குப் பதிலாக, பிரச்னையை தைரியமாக எதிர்கொள்…, சுலபமாகக் கடந்து செல்வாய்…’ என்று நீ கற்றுக் கொடுத்த பாடம் எனக்கு, தைரியத்தைக் கொடுத்தது… ஒவ்வொரு பிரச்னையையும் சந்திக்க, சந்திக்க…, வாழ்க்கையின் மீது…, ‘வாழ்ந்து பார்க்கலாம்’ என்று சுவையான ந...