ஏணிப்படிகள் - பாகம் 4

கிருஷ்ணர் : இன்னும் ஒன்று தெரியுமா….? உற்சவர்…, பிரம்மோற்சவ காலங்களில் மக்களைச் சந்திக்க வருவது வழக்கம். அந்த சமயங்களில், இந்தப் படிகள் வழியாகத்தான் இறங்கி வர வேண்டும்… பெருமாளும் எத்தனை முறை ஏறி, இறங்கியிருப்பார்… ஐயப்பன் கோவிலில், மேலே ஏற்றி விடும் இந்தப் படிகளுக்கு பூஜையே செய்வார்கள். ஏனென்றால், பரம்பொருளைக் காட்டுவதற்காக ஏற்றி விடும் ஏணிப்படிகள், புனிதப் பணியைச் செய்கிறது. அதுதான் விசேஷம்… இப்படித்தான்.., ஏணிப்படிகள், பயணிகளை பயணம் செய்ய வைப்பது மட்டுமல்ல…, வேறு உலகத்திற்கும் கூட்டிச் செல்வது போல, பக்தர்களுக்கு மோட்சத்திற்கான வழியையும் காட்டும்….

மேகலா : கிருஷ்ணா…, பழநி மாதிரி கோவில்களில், படியேறி வருவது சிரமம் என்பதால்…, பழநியில் ‘விஞ்ச்’ வைத்திருக்கிறார்கள்… நாங்கள், ஹரித்வாரில், மானஸ தேவியை, இந்த ‘rope car-ல்’ ஏறித்தான் சென்று தரிசித்தோம்… திருப்பதி மாதிரி மலைக்கோவில்களில், படிகளில் ஏறிச் செல்வதற்கே பல மணி நேரம் ஆகும். அதனால், மலையைச் சுற்றிச் சுற்றி, கார், பஸ் செல்லும்படிக்கு பாதை அமைத்து, நம்மைச் சீக்கிரம் கூட்டிச் செல்கிறார்கள்… இன்னும், பலமாடிக் கட்டிடங்களில், ஏணிப்படிகளையே நம்பாமல், ‘lift’ மூலம், ஒண்ணு, ரெண்டு நிமிஷங்களில் ஏறிப் போய் விடலாம். இன்னும் ஒரு சுவாரஸ்யம் இருக்கு கிருஷ்ணா. மக்கள் அதிகமாக நடமாடும் ‘மால்’, ‘airport’, ‘railway station’ போன்ற இடங்களில், ‘மின் ஏணிப்படிகள்’ இயங்கிக் கொண்டே இருக்கும். இதில் நாம் ஏறி நின்றாலே போதும்… நாம் ஏறத் தேவையில்லை. அதுவே நம்மை ஏற்றி விட்டு விடும்… இப்படி நம்மை எளிதில் ஏற்றி விடுவது…, சரியா…, தப்பா…, கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ ஏன் இப்படிக் கேட்கிறாய்…?

மேகலா : ஏணிப்படிகள், முக்திக்கான வழியையும் காட்டுகிறது என்று சொன்னாயே…, அதான் கேட்டேன்….

கிருஷ்ணர் : முக்திக்கான வழி என்றாலே கஷ்டமானது என்று எப்படி யோசித்தாய். கோவில்களில் படி மீது ஏறி வந்தால், சாமி தரிசனம் கிடைக்கிறது… படிகள் முக்திக்கான வழியையும் காட்டுகிறது என்று சொன்னேன்… படியில் ஏறி வருவதே கஷ்டமான வேலை என்று சொல்லவில்லையே… படிகள் இருக்குமிடங்களில், அதில் ஏறிச் சென்றால், நாம் பார்க்க நினைத்தவற்றை பார்க்க முடியும். Lift-உம், rope car-உம், escalator-உம், மனிதர்களுக்கு இன்னும் சுலபமாக ஏறுவதற்கான சாதனங்கள்… கிட்டத்தட்ட, ஏணிப்படிகளின் வேலையைத்தான் செய்கின்றன. ஆனாலும், இந்த நேரத்தில் இந்த சந்தேகத்தைக் கேட்டாயே…. சுலபமாக முக்தி அடைவதற்கு, bye pass வழி இருக்கலாம் என்று நினைத்தாயா… இருக்கு…, நல்ல மனமுடையோருக்கு…, பிறருக்கு உதவும் குணம் உடையோருக்கு, அவர்களுடைய குணமே, இறைவனிடம் கொண்டு சேர்க்கும். பக்தி, அதில் escalator மாதிரி…

மேகலா : நீ சொல்லுவதுதான் correct கிருஷ்ணா… முக்தி, மோட்சம் எல்லாம் அடைவதற்கு ரொம்ப கஷ்டமோ என்று நினைத்து விட்டேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. மனிதர்களுக்கு, வாழ்க்கையில் பிரச்னை என்று வந்தால்தான் கடவுளை நினைக்கிறார்கள். உனக்கு ஒண்ணு தெரியுமா… பெருசா கடவுள் பக்தி இல்லாதவர்கள்…, பூஜை, யாகம் என்று முறையாகச் செய்யாதவர்கள்…, ஏன், கடவுளை மறுப்பவர்கள் கூட, தன் தொழில் மீது பக்தியும், சிரத்தையும் உடையவர்கள்…, பிறர் நலன் மீது அக்கறை கொண்டவர்களாக…, பிறருக்கு உதவி செய்யும் நல்ல மனமுடையவர்களாக இருந்தால்…, கடவுள் அவர்களை, ‘கர்ம யோகம்’ என்னும் படிகளில் ஏற்றி, மேன்மையுறச் செய்கிறார்….

மேகலா : வாவ்! ஆமாம் கிருஷ்ணா…. கீதையில், கிருஷ்ணரும் கூட, ’ஞானம் என்பது, கர்ம யோகத்தில் துவங்குகிறது… கர்மம், ஞானத்தில் முற்றுப் பெறுகிறது’ என்று சொல்லுகிறார்…. இதை வைத்துப் பார்க்கும் பொழுது…, செய்யும் வேலையை முனைப்பாக செய்யும் பொழுது…, அது படிப்படியாக நம்மை மேலேற்றி, தெளிந்த அறிவைக் கொடுக்கிறது… இப்போ, ஏணிப்படிகளின் வேலை, கற்றுக் கொள்வதில் ஆரம்பித்து, தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல், தினசரி பயிற்சி எடுத்தல், முற்றாகத் தெரிந்து சிறப்பான தகுதியை அடைதல் என்றபடிக்கு, ஒவ்வொரு நிலையிலும், மனிதனை மேன்மைப்படுத்துகிறது… வாவ்…, சூப்பர் கிருஷ்ணா… அதுக்காக, பக்தி தேவையில்லை என்பதில்லை… பக்தி என்பது சிறந்த ஒழுக்கம், நேர்மை…. இது தவிர, கல்வி கற்க ஆரம்பிப்பவனிடம், பக்தியும் சேரும் போது…, ஏணிப்படிகள், escalator மாதிரி வேலை செய்கிறது… அப்படித்தானே கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : பரவாயில்லையே…. அருமையான விளக்கம் கொடுத்துட்டயே… முடிவுரையில் சொல்ல வேண்டிய கருத்துக்களை சொல்லிட்டயே… கட்டுரையை முடிச்சிரலாமா….

(தொடரும்)

(அடுத்த பகுதியுடன் நிறைவு பெறும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1