தன்னம்பிக்கை - பாகம் 1

மேகலா : ஹாய் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்னம்மா…, அதுக்குள்ள வந்துட்ட… இன்னும் ஒரு வாரத்துக்கு நீ என்னைத் தேடவே மாட்டேன்னு நினைச்சேன்… என்ன…, bore அடிக்குதா….

மேகலா : Bore அடிச்சா மட்டும் தேடுவதற்கு பரம்பொருள் கிருஷ்ணன்… சினிமா தியேட்டரா கிருஷ்ணா… நீ என் குரு… என் கடவுள்… அதுக்கும் மேல…, என் மூச்சே நீதான கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி…, சரி…, ரொம்ப அலட்டாத…. இன்னைக்கு என்ன தலைப்புல பேசலாம்னு இருக்க…

மேகலா : கிருஷ்ணா…, என் வாழ்க்கையில், இந்த அளவுக்கு, பக்குவமாய், திருப்தியா நான் இருக்கேன்னா…, சந்தோஷமா எனக்கான கடமையைச் செய்யிறேன்னா…, அதெல்லாம் நீ எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்… ’பிரச்னை என்பது, வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் வரத்தான் செய்யும்… அதையெல்லாம் பார்த்து துவண்டு விடுவதால் மட்டும்…, பிரச்னை விலகப் போவதில்லை…. அதற்குப் பதிலாக, பிரச்னையை தைரியமாக எதிர்கொள்…, சுலபமாகக் கடந்து செல்வாய்…’ என்று நீ கற்றுக் கொடுத்த பாடம் எனக்கு, தைரியத்தைக் கொடுத்தது… ஒவ்வொரு பிரச்னையையும் சந்திக்க, சந்திக்க…, வாழ்க்கையின் மீது…, ‘வாழ்ந்து பார்க்கலாம்’ என்று சுவையான நம்பிக்கை பிறந்தது….

கிருஷ்ணர் : அதுவே…, தன்னம்பிக்கையானது…, என்று சொல்லி, ‘தன்னம்பிக்கை’ தலைப்பை எடுத்தாயாக்கும். ஆமாம்…, நான் கற்றுக் கொடுத்தேன் என்கிறாயே…, நானா கற்றுக் கொடுத்தேன்….

மேகலா : பின்னே…, உன்னையல்லால், என் மனசைப் புரட்டிப் போட, யாரால் முடியும் கிருஷ்ணா…. மனசுக்குள் இருந்த குப்பைகளை…, அள்ளி வீசியெறிந்து விட்டு…, ‘கீதை’ என்னும் சூரியனை ஏற்றி வைத்தது யார் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : கீதையை நீ படித்தாய்…, உனக்கு தன்னம்பிக்கை வந்தது என்கிறாய்… இதில் என் பங்கு என்ன….

மேகலா : கிருஷ்ணா…, இப்படிச் சொல்லி என்னை கலங்க வைக்காதே கிருஷ்ணா… ஒவ்வொருவருக்கும், வாழ்க்கையில், வழித்துணை என்பது எவ்வளவு அவசியம் என்பது, வாழ்க்கையை, தனியாய் வாழ்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்… எந்த வழித்துணையும் இல்லாமல்…, திசை தெரியாமல்…, தைரியம் மொத்தமும் தொலைந்து போய், தவித்துப் போயிருந்த எனக்கு…, ‘உனக்கு நான் இருக்கிறேன்’ என்று திசை காட்டி, அழைத்துச் சென்ற என் வழித்துணை…, யார் கிருஷ்ணா? பரம்பொருள் சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவே…, எனக்கு தைரியமாய்…, தன்னம்பிக்கையாய் இருந்ததனால் மட்டுமே…, என் வாழ்க்கையை அர்த்தம் புரிந்து, வாழ ஆரம்பித்தேன்…

கிருஷ்ணர் : கட்டுரையின் முன்னுரையே, ரொம்ப நீ….ளமாகப் போகுது… அடுத்தடுத்து, வேறு வேறு சம்பவங்களை அலசலாம்… சரி…, இப்போ, இதுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்… அசட்டுத் துணிச்சலுக்கும், தன்னம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னு சொல்லு பார்க்கலாம்….

மேகலா : ஒரு செயலை, முற்றிலும் அறியாமல்…, தெரிந்து கொள்ளாமல், செய்வதற்கு துணிந்து இறங்குவது…, ‘அசட்டுத் துணிச்சல்’… எடுத்த காரியத்தை, 100% தெரிந்து கொண்டு…, தன்னால் செய்ய முடியும் என்று தெளிவாகத் தெரிந்த பிறகு, செய்ய இறங்குவது…, ‘தன்னம்பிக்கை’… சரியா…, கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Correct…. அசட்டுத் துணிச்சல்ல, காரியத்தை செய்ய இறங்குபவர்களுக்கு…, எடுத்த காரியத்தை செய்யும் துணிச்சல் இருந்தாலும்…, தன்னம்பிக்கை உள்ளவர்களால் மட்டுமே, அந்தக் காரியத்தை சிரத்தையோடும், தொழில் பக்தியோடும், செய்ய முடியும்… இங்கு, நம்பிக்கை என்பது, ஒவ்வொரு மனிதருக்கும் தைரியத்தையும், ஆற்றலையும் கொடுக்கக் கூடியது… இன்னும் ஒன்று இருக்கிறது… ‘தன்னால் முடியும் என்று நம்புவது, ‘தன்னம்பிக்கை’…. தன்னால் மட்டும் தான் முடியும் என்று நினைப்பது, ‘அகம்பாவம்’….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா… நிறையப் பேர் அப்படித்தான் கிருஷ்ணா… தன்னை விட்டால், இந்தக் காரியத்தை யாராலும் செய்ய முடியாது என்று திமிறித் திரிகிறார்கள்… என்னவோ…, இந்த உலகமே, இவர்கள் செய்யும் வேலைக்காக, கையைக் கட்டித் தன் முன்னால் நிற்பார்கள் என்று அவர்கள் விடும் அலப்பறையைக் கேட்கவே முடியாது கிருஷ்ணா… இவர்களிடம் இருக்கும் திறமையை மீறிய…, தன்னை மீறிய இந்தத் தன்னம்பிக்கை தான், அடுத்தவர்களின் திறமையை வெளிக் கொண்டு வரும் திறவுகோல்ன்னு நான் நினைக்கிறேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இருக்கலாம்…. ஆனாலும், இவர்களின் அளவுக்கு மீறிய அலப்பறை, எப்படி இன்னொரு திறமையாளரை அடையாளம் காட்டும்….

மேகலா : கிருஷ்ணா…, பொதுவாக, தலைக்கனம் பிடிச்சவங்க, என்ன சொல்லுவாங்க… அங்க சுத்தி, இங்க சுத்தி…, நம்மள விட்டா, இந்த வேலையைச் செய்ய இன்னொரு ஆளே கிடையாதுன்னு சொல்றதுக்குத்தான் வருவாங்க…, அதற்கான சம்பளத்தை அதிகப்படுத்துதல்…. First quality-க்கும் அடுத்த quality- க்கும் இடையில், rate-ல் மிகப் பெரிய இடைவெளியைக் காட்டுதல்…, எல்லோரையும் எகத்தாளமாகப் பேசுதல்…, நேரங்கடத்துதல்…, என்று ஏகப்பட்ட அலப்பறையைச் செய்யும் போது…, அவர்களிடம் வேலை வாங்குபவர், automatic-ஆக, அடுத்த level ஆட்களை நாடி, ‘யப்பா, எனக்கு குறிச்ச time-க்குள் வேலையை முடிச்சுக் கொடுக்கணும்… நான் எதிர்பார்ப்பது மாதிரி செய்து கொடுத்தால், நீ கேட்டதை விட அதிகமாகத் தருகிறேன்’ – என்று சொல்லி, தட்டிக் கொடுத்து வேலை வாங்குகிறார்கள்… அந்த வேலை super-ஆக நடக்கிறது… இந்த மாதிரி வேலையெல்லாம், I. T. Company-களில் மட்டுமல்ல கிருஷ்ணா…., எல்லா வேலைகளிலும்…, எல்லா துறையிலும், இப்படி, தன்னால் தான் இந்த வேலை நடக்கிறது என்று நினைப்பவர்கள் தான் இங்கு ஏராளமாய் இருக்கின்றனர்…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1