ஏணிப்படிகள் - பாகம் 5 (நிறைவுப் பகுதி)
மேகலா : என்ன கிருஷ்ணா…, அதுக்குள்ள முடிச்சிரலாமான்னு கேட்கிற… ஏணிப்படிகளாக வாழ்ந்தவர்களைப் பற்றி யாரையாவது உதாரணம் காட்டினால், இந்த கட்டுரையின் concept இன்னும் strong ஆகுமே கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஏணிப்படிகள், ஏற்றி விடத்தானே செய்யும். அது அந்த இடத்துலயேதான் இருக்கும்… இருந்தாலும், உலகத்திலுள்ள அத்தனை ஆசிரியர்களையும் ஏணிப்படிகள் என்று தாராளமாகச் சொல்லலாம்… ஒருவர் இருக்கிறார்… தன் வாழ்க்கையில் பல மாணவர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்து, ‘இப்படியும் முயற்சி செய்யலாமோ’ என்று சிந்திக்க வைத்த ஏணிப்படி… ஆனால், எவராலும் எட்ட முடியாத உயரத்தில் இன்றும் நிலைத்திருக்கும் ஒருவரை உனக்குத் தெரியுமா… அவர் சொன்ன ஒரு தன்னம்பிக்கை வார்த்தைகளைக் கேள்…. ‘அறிவியலுக்கு பயம் தெரியாது. வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்குத் துணிவிருந்தால், அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கிருக்கிறது’ – இதை யார் சொன்னது தெரியுமா…
மேகலா : ஏவுகணைகளின் தந்தை டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள்…
கிருஷ்ணர் : இந்தக் கூற்றினை, ஏதோ ஒரு room-ல் உட்கார்ந்து, article எழுதி, மாணவர்களுக்கு செய்தி சொல்லவில்லை. உண்மையிலேயே, விஞ்ஞான வளர்ச்சியுற இளம் மாணவர்களின் பங்களிப்பு அவசியம் தேவை என்பதை உணர்ந்து, மாணவர்களிடையே சென்று, அவர்களுக்குள் ஏவுகலத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்லி, ஒரு புரட்சியையே உருவாக்கினாரா இல்லையா…. இன்று ஒவ்வொரு I. T. office-லயும், ஏதோ ஒரு பொறியாளர், புதுப்புது app கண்டுபிடித்து, தகவல் தொழிலில் கலக்குவதற்கு யார் காரணம்… வெறுமனே டாக்டராக வேண்டும், இஞ்சினியர் ஆக வேண்டும் என்று தன் கல்வியின் இலக்கை சுருக்கி வைத்திருந்த மாணவர்களை…, ’நாம் ஏன் விஞ்ஞானி ஆகக் கூடாது’ என்று சிந்திக்க வைத்தாரா இல்லையா… இன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில், ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருக்கும் இளம் விஞ்ஞானிகளில், பெருமளவில் பெண்களும் தங்கள் பணியைச் செய்து வருகிறார்கள்… இவையெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று… ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே வேறு… விஞ்ஞானம், ஏவுகலம், ஏவுகணை இவையெல்லாம், மாணவர்கள் முயற்சிக்கும், படிப்புக்கும் அப்பாற்பட்டது என்று நினைத்தார்கள்… ஆனால், இன்றைய நிலைமையே வேறு… ஒரு app-ஐ ஒருவன் கண்டுபிடித்தால், அதை spoil பண்ணும் virus உருவாகிறது… அடுத்த நாளே, வைரஸைக் கொல்லும் இன்னொரு சக்தி பிறக்கிறது… Technology-யைப் பார்த்து பயப்படாத மாணவர்கள், விஞ்ஞானத்திற்கே சவால் விட்டு ஜெயிக்கின்றனர்…. சந்தோஷம்.. ஆனால், இதெல்லாம்…, ‘அறிவியலுக்கு பயம் தெரியாது. வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்குத் துணிவிருந்தால், அறியப்படாத விஷயங்களுக்கு சவால் விடும் ஆற்றலும் உங்களுக்கிருக்கிறது’ – என்று யார் மீது நம்பிக்கை வைத்து இந்த படிக்கட்டுக்களை வைத்தாரோ, ஏகப்பட்ட பேர், வித்தியாசமாக சிந்திக்கும் துணிச்சலோடு ஏறி வந்து, ஏவுகலங்களோடு உறவாடுகின்றனர். தானும் உயர்ந்து, மாணவர்களையும் ஏறச் செய்து விட்டார்…. நம்முடைய ‘பாரத ரத்னா’ முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணைகளின் தந்தை டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள்…
மேகலா : கிருஷ்ணா… அப்துல் கலாமின் சிந்தனையை இவ்வளவு பாராட்டிப் பேச, உன்னைத் தவிர யாரால் முடியும் கிருஷ்ணா…. சூப்பர் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சரி…, அதெல்லாம் இருக்கட்டும்… கட்டுரை முடிஞ்சு போச்சு… அடுத்த கட்டுரையில் பேசலாம்… வரட்டா….
மேகலா : கிருஷ்ணா…., கிருஷ்ணா….
(நிறைவு பெற்றது)
Comments
Post a Comment