தன்னம்பிக்கை - பாகம் 3
கிருஷ்ணர் : இந்தியாவின் நட்பு நாடுகள், இந்தியாவின் எதிரியை எதிர்க்க ஒன்று சேர்ந்ததுதான் highlight. இதில், பிரதமரின் நேர்மையான அணுகுமுறை, நாட்டுப்பற்று, தேசத்தின் மீது அக்கறை, இதை செயல்படுத்துவதில் அவருக்கிருந்த துணிச்சல்…, துணிச்சலான குழுத் தலைவர்கள்….
மேகலா : கிருஷ்ணா…, நீ சொல்லச் சொல்ல, அன்று நடந்த நிகழ்ச்சிகள் கண் முன்னே வந்து போகுது கிருஷ்ணா… அதே மாதிரி, article 370 என்ற செயல்முறையும், எத்தனையோ தடைகளை மீறி செயல்படுத்தப்பட்ட அசாத்தியமான துணிச்சலான செயல் கிருஷ்ணா… இதிலும், ஒன்றை நிச்சயம் பாராட்டியே ஆகணும் கிருஷ்ணா…. பாரதப் பிரதமரின், உலக நாட்டுத் தலைவர்களுடன் அவருக்கிருந்த நட்பு…, அதனால் ஏற்பட்ட தொடர்பு, reaction…, இவையெல்லாம் இங்குள்ள பிரச்னையாளர்களை வாயடைக்கச் செய்தது என்பது நிதர்சனமான உண்மை…
கிருஷ்ணர் : ஆமாம்…, நேர்மையும், தைரியமும்…, அதே நேரத்தில், நம்ம நாடு அமைதியாய் இருக்க வேண்டும் என்ற ஆசை, நாட்டு வளர்ச்சி, பாதுகாப்பில் அக்கறை…, இவையெல்லாம், துணிச்சல்…, தான் எடுக்கும் முடிவு தான் சரி என்ற அசாத்தியமான நம்பிக்கையின் வேர்கள்….
மேகலா : கிருஷ்ணா…, இன்னைக்கு நான் ராமாயணம் serial-லில், அனுமானுடைய கதையைப் பார்த்தேன் கிருஷ்ணா…. யாராவது ஞாபகமூட்டினால் தான், அனுமனுக்கு அவருடைய திறமை வெளிப்படும் என்ற கதை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தக் கதையை, எம்பெருமான் பரமசிவனாரும், பார்வதி தேவியாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்…. அப்போ, சிவபெருமான் ஒரு வாசகம் சொல்லுகிறார்…. ’ஒருவருக்கு மனதில் நம்பிக்கை ஏற்பட, ஏற்பட, தான் போகும் வேலைக்குத் தகுந்தபடி, மனதளவில் பெரிதாக வளர்ந்து சாதிப்பார்கள்’ என்று சொல்றார் கிருஷ்ணா… எனக்கென்னவோ, அனுமன் எடுக்கப் போகும் விஸ்வரூபத்திற்காக மட்டும் இந்த வார்த்தையை சொல்லவில்லை… உலகத்து மக்கள் அனைவருக்கும், பொதுவாக சொல்லப்பட்ட வார்த்தையாகத்தான் எனக்குப்படுகிறது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இல்லையா, பின்ன… உலகத்துக்கெல்லாம் தாயானவன்…, தந்தையுமானவன்… ‘நம்பிக்கை, ஒரு மனிதனை எப்படி ஒரு காரியத்தை சாதிக்க வைக்கும் என்றுதானே சொல்லுவார்…, வேறெப்படி சொல்லுவார்…. நீ ஒரு அருமையான சம்பவத்தைத்தான் சொல்லியிருக்கிறாய் மேகலா… பராக்கிரமரான அனுமனுக்கு, தன் பலத்தை மறந்த நிலையில், அவர் பலமும், திறமையும் என்னவென்று, அவருக்கே நினைவூட்டுகிறார் ஒருவர்… இப்பவும், பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்கள், பரீட்சை எழுதத் தயங்கி, பயப்படும் போது, அவர்களோட ஆசிரியரோ…, அம்மாவோ…, அப்பாவோ…, ‘நீ நல்லா படிச்சிருக்கிற…, model exam-ல 100 % mark வாங்குன நீ.., இதே மனநிலையுடன் exam எழுதுனா…, உன்னால் state first எடுக்க முடியும்…, பின்ன ஏன் பயப்படுற? உன்னுடைய hand-writing அடித்தல், திருத்தல் இல்லாமல் தெளிவாய் எழுது… time-க்குள் முடி… உன்னால 1st mark எடுக்க முடியும்..’ என்று சொல்வதை பார்த்திருப்பாய்… இது ஒரு மாணவனை முடுக்கி விடுதல், ஊக்குவித்தல், பயத்தைப் போக்கி, தைரியத்தை வரவழைத்தல், எந்த மனிதருக்கும் தன்னம்பிக்கை வருவதற்கு முன்பு வர வேண்டியது, தைரியம் மட்டுமே…. தன்னம்பிக்கை உள்ள மாணவனும், தான் state first எடுத்து விடலாம் என்பதை விட, portion எல்லாவற்றையும் படிச்சாச்சு…, என்ன கேள்வி கேட்டாலும், அதை தெளிவாக எழுதி விட வேண்டும் என்று பரீட்சைக்குத் தயாராக வேண்டும். அப்பத்தான், கலப்படமில்லாத தன்னம்பிக்கை, அசாத்தியமான தைரியத்தைக் கொடுக்கும். இது மாணவர்களிடம் மட்டுமல்ல மேகலா…., சாதாரண குடிமகனிலிருந்து, பொறுப்பான பதவி வகிக்கும் அதிகாரிகள் வரை, தங்கள் தொழிலில் அவர்களுக்கிருக்கும் திறமையில், ஒவ்வொரு முறை செயல்படும் போதும், அந்த வேலையின் நெளிவு, சுளிவுகளை அறிந்து கொண்டோம்…. பொறுமையாக, சரியாக செய்து முடிக்க வேண்டும் என்று தைரியமாக வேலையைத் துவங்க வேண்டும்….
மேகலா : கிருஷ்ணா…, நீ சொன்னதில் எனக்குப் பிடித்த ஒரு வார்த்தை…, ‘கலப்படமில்லாத தன்னம்பிக்கை’… ஆகா…, ‘தலைக்கனமில்லாத தன்னம்பிக்கை’ என்று சொல்லாமல், இப்படி சொல்லியிருக்கியே…, அதுக்கே ஒரு ‘salute’ கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சும்மா இல்லம்மா… இந்த கலப்படமில்லாத தன்னம்பிக்கை உள்ளவர்கள்…, ஆஞ்சநேயர் மாதிரி…, தனக்கு இந்தத் திறமை இருக்கிறது என்று பறையடிக்க மாட்டார்கள்… அவர்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்று…, எதிராளி அளவிட முடியாத பாவனையோடு இருப்பார்கள்…. ‘சொல்லின் செல்வர்’ என்று பட்டம் கொடுக்குமளவுக்கு, வார்த்தைகளை அளந்து பேசுவார்கள். நம்முடைய ‘பாரத ரத்னா’ – முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்களிடம், அறிவியல், இயற்கை சீற்றம் இவைகளைப் பற்றின கேள்விகளுக்கு, அவர் கூறும் பதில், நீ அறிந்தது தானே… மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, அவர்கள் புரியும் வகையில், தெளிவாகப் பதில் சொல்லுவார். தான் விஞ்ஞானி என்ற கர்வத்தில் பேச மாட்டார். அவர் ஒரு கருத்தைச் சொன்னால், அதுதான் சரி என்று நாம் நம்பும் வகையில் பேசுவார்…. ஒரு முறை, ஒரு மாணவன், ‘உங்கள் கண்டுபிடிப்புகளில், உங்களுக்கு மனநிறைவைத் தந்தது எது’ என்று சினிமாக்காரர்களிடம் கேட்பது போல கேட்க, அவரும் பொறுமையாக, ‘போலியோ attack ஆன சிறுவர்களுக்கு caliper கனமாக, அவர்களால் சுமக்க முடியாதபடி இருந்தது. அதனை, கனமில்லாததாக செய்து கொடுக்கும் பணியை நாங்கள் மேற்கொண்டோம். இதுவரை செய்யப்பட்ட caliper 3 கிலோ எடை கொண்டது. நாங்கள் 300 gm எடையுள்ள இலகுவான caliper – ஐ, successful ஆக செய்து கொடுத்தோம். இது எங்கள் குழுவிற்கு, முழு வெற்றியையும், சந்தோஷத்தையும் கொடுத்தது…’ என்று கண்டம் விட்டுக் கண்டம் பாயும் scud என்னும் ஏவுகணைகளைச் செய்து, உலகத்தையே மிரட்டிய விஞ்ஞானி கூறுகிறார்…. இன்னும் ஒரு முறை….,
(தொடரும்)
Comments
Post a Comment