தன்னம்பிக்கை - பாகம் 4
கிருஷ்ணர் : இன்னும் ஒரு முறை அவரிடம் (டாக்டர் A. P. J. அப்துல் கலாம்), ’சுனாமி வருவதை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியாதா’ என்று கேட்கப்பட்டது… அதற்கு அவர், ‘சுனாமியை இத்தனை ஆண்டுகளுக்குள் அறவே தடுத்து நிறுத்த முடியும்’ என்று சொல்லவில்லை… ’சுனாமி வருவதை, முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்… நாம் தான் பாதுகாப்பான இடத்திற்குப் பெயர்ந்து செல்ல வேண்டும்… இயற்கையின் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது… இயற்கையை அனுசரித்துத்தான் வாழணும்’ என்று எந்த மழுப்பலும் இல்லாமல், தெளிவாகச் சொல்லுகிறார்…. இன்னும் ஒரு முறை, ‘ஜப்பானின், புகுஷிமா என்ற இடத்தில், அணுமின் உலைப்பேரழிவு ஏற்பட்ட சமயத்தில், நம்முடைய கூடங்குளத்திலும், அணுமின் உலை, ரஷ்யாவுடன் கூட்டு முயற்சியில் உருவாகிக் கொண்டிருந்தது. அதனைத் தடுக்கும் முயற்சியில் பலரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, அரசாங்கம்…, நம்முடைய கலாம் ஐயாவை, விளக்கம் கொடுத்து, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டது. அப்பொழுது…, புகுஷிமா உலையை விட, கூடங்குளம் அணுமின் உலை, மின் கசிவு ஏற்படாதபடி, double protection கொடுக்கப்பட்டிருக்கிறது… மின் கசிவு ஏற்பட வாய்ப்பு இல்லை… தேவைகள் பெருகி வரும் நம் நாட்டில், அணுமின் நிலையம் எவ்வளவு அவசியம் என்று எடுத்துச் சொன்னார். போராட்டக்காரர்களைத் தவிர, ஏனைய மக்கள் புரியும்படிக்கு, நாட்டு வளர்ச்சியின் மீது அக்கறையுடன் பேசினார்…. தன்னம்பிக்கை, நேர்மை, மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள், ஒரு விஷயத்தை கையாண்டால்…., தெளிவாக, பொறுமையாக, மக்கள் ஏற்றுக் கொள்ளும்படித்தான் பேசுவார்கள்…. டாக்டர் கலாம்…, தன்னம்பிக்கையின் லட்சணம்….
மேகலா : வாவ்…! சூப்பர்…, சூப்பர், கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : இது மட்டுமல்ல…. தன்னம்பிக்கை உடையவர்கள், இந்த தேசத்தின் மீது…, ஏன், உலகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள்…, மிரட்டுவதைக் கூட, எப்படி மிரட்டுகிறார்கள் என்பதை நீயும் அறிவாய்… நம்முடைய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள்…, தீவிரவாதத்தை எதிர்த்து U. N. O., meeting-ல் பேசிய பேச்சு, உலகப் பிரசித்தம்… ‘தீதும், நன்றும் பிறர் தர வாரா’– என்று புறநானூற்றுப் பாடலைச் சுட்டிக் காட்டி…, அவரவர் வினைக்கு அவரவரே காரணம்…. தீவிரவாதத்தை ஒரு நாடு ஆதரித்தால், அவர்களுக்கு வரும் கேட்டிற்கு, அவர்களே பொறுப்பாவர் என்று, நாசூக்காக மிரட்டினாரா இல்லையா…. இங்கு, தமிழைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கலாம் ஐயா சொல்லவில்லை…. ஆனால், தீவிரவாதத்தைப் பார்த்து, நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று நாசூக்காக மிரட்டுவதற்கு, தமிழ் நச்சுனு உதவியிருக்கு…. தன் பலம் தெரிந்தவன், இப்படித்தான்…, மிரட்டுவதில் கூட, தனிப்பாணி கொண்டிருப்பான்… ஆஞ்சநேயரும், இப்படித்தானே மேகலா…. இலங்கைக்குச் சென்று…, சீதையைப் பார்த்து விட்டார்… இந்தத் தகவலை ராமரிடம் சொல்ல வேண்டும். அதற்கு முன்னால், இலங்கை நகரத்தின் கட்டமைப்புகளைக் கண்டு கொள்வோம். அங்குள்ள போர்வீரர்கள், ராவணன் உள்ளிட்ட அனைத்து அசுரர்களின் பலத்தையும் தெரிந்து கொள்வோம் என்று நினைத்து…, தானே வலியச் சென்று, மரத்தை முறிக்கவும், கட்டிடங்களைத் தகர்க்கவும் செய்தார்…. அவர் எதிர்பார்த்தது போலவே, வீரர்கள் அவரை சிறைப்பிடித்தினர்… சாதாரண வீரர்களின் கட்டுக்குள் அடங்குபவரா, அனுமன். நாம், இதுவரை தெரியாத ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்…, பின்னால் வருவதைப் பிறகு பார்த்துக் கொள்வோம் என்று நினைத்து, துணிச்சலாய் காரியத்தில் இறங்குவது… நம்பிக்கையின் ஒரு அம்சம்… அதனால்தான் ராவணனை சந்தித்தார்… இலங்கைக்குத் தீ வைத்தார்… தன்னால் ராவணனை சந்திக்க முடியும் என்பது அனுமனின் நம்பிக்கை… அதனால் வந்தது…., அசகாய துணிச்சல்…
மேகலா : ஆமாம் கிருஷ்ணா… நீ சொல்லச் சொல்லத்தான் புரிகிறது கிருஷ்ணா… தன் பலம் தெரிந்தவர்கள், பேசும் போதும்…, செயலில் இறங்கும் போதும், அவர்களுடைய சொல்லும் செயலும், அசாத்தியமானதுதான் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : இது மட்டுமல்ல… இன்னொரு சம்பவத்தையும் நீ நன்கறிவாய்… நம்முடைய பாரத தேசத்தின் எல்லைப் புறத்தை ஆக்ரமிப்பவர்கள், முதலில் உள்ளே வருவார்கள்… tent போட்டு தங்குவார்கள்… பிறகு, இது எங்கள் இடம் என்று கூறிக் கொள்வார்கள்… அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும்.. பின் எதிராளியிடம் விட்டுக் கொடுத்து விடும். பல சமயங்களில் இப்படித்தான் நடந்திருக்கிறது…. ஆனால், இன்றையப் பிரதமரிடம் இந்த பாச்சா பலிக்கவில்லை… ஆக்ரமிப்பு செய்த வீரர்களை விரட்டி விட்டது மட்டுமல்ல. எதிரி நாட்டுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தாரே…, அடேங்கப்பா…. ‘இது நில அபகரிப்புக்கான நேரமல்ல…, நாட்டின் வளர்ச்சிக்கான நேரம்…, சிந்தியுங்கள்… நாங்கள் ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறோம். கையில் புல்லாங்குழல் வைத்திருக்கும் கிருஷ்ணன் சொல்லுவது, இதுதான். நட்பு நாடி நீங்கள் வந்தால், நாங்களும் நட்புடன் பழகுவோம்… அதை விடுத்து, நில அபகரிப்பு வேலையில் ஈடுபட்டால், கிருஷ்ணரின் கையில் சக்ராயுதம் ஏந்தியிருக்கிறார்… அறுத்துத்தள்ளி விடுவோம் என்று சொல்லி, தங்கள் நிலைப்பாட்டை விளக்கவில்லையா…. அத்துமீறினால்…, துவம்சம் பண்ணி விடுவோம். பார்த்துக் கொண்டே சும்மா இருக்க மாட்டோம் என்று சொல்லாமல் சொல்லவில்லையா….. நம்பிக்கை இப்படித்தான் பேசும்…. இன்றுவரை, ‘ஆக்ரமிப்பு’ என்ற பெயரில், யாராவது உள்ளே நுழைந்தார்களா… நம்பிக்கை உள்ளவர்கள், சினிமா பன்ச் டயலாக் பேச மாட்டார்கள். ‘இறங்கி அடித்தால், நீ காணாமல் போய் விடுவாய்’ என்று செயலில் காட்டுவார்கள்….
மேகலா : இப்படிப் பேசக் கூட, ரொம்ப தைரியம் வேணும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அப்படித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். இன்றைய நிலைமை, பேசினாலே, பெரும் வீரர்கள் என்று நினைக்கிறார்கள். நேர்மையும், திறமையும் இருப்பவர்கள், வேற எப்படிப் பேசுவார்கள்….
(தொடரும்)
Comments
Post a Comment