பக்குவம் - பாகம் 9 (நிறைவுப் பகுதி)
கிருஷ்ணர் : ‘பிரம்மரிஷி’ என்பது ஒரு நிலை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், இதை விட better-ஆ நாம் நடந்து கொள்ளணும்…, இல்லையென்றால்…, இதை விட உயர்ந்த promotion-க்கு நாம் முன்னேறணும் என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்கும் போது, அவனுடைய பழக்க வழக்கம் நடத்தை மட்டுமல்ல மேகலா…. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய attitude கூட shape ஆக ஆரம்பிக்கும். அதனால் அவன் மனநிலையும் பக்குவமடைய ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில், அறிவில் தெளிவு மட்டுமல்ல, நிதானம், பொறுமை, அடுத்து நடக்கப்போவதில் தீர்க்கம்…, அதற்கான ஆயத்தம்…, தன் திறமையில் நம்பிக்கை…, அதற்கான பணிவு எல்லாம் ஒன்று சேரும் போது, அவன் outstanding personality யாக, தீர்க்கதரிசனமாக தன் மரணத்தைக் கூட தெரிந்து கொள்ளும் தைரியசாலியாக நிற்கும் நிலை வருமல்லவா…, அதுதான் ‘பிரம்மரிஷி’… இதைத்தான் விசுவாமித்திரருக்கு, வசிஷ்டர் சூசகமாகத் தெரிவித்தார். இந்த முயற்சியில் ஈடுபடும் போது, ஆசைப்பட்டாலும், கோபப்பட்டாலும் கூட நம் நிதானம் தவறி விடுகிறது… விசுவாமித்திரருக்கு, மேனகை மீது காதல் வந்ததும்…, திரிசங்கு கேட்டதால், அவனை ஸ்தூல உடம்புடன் சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கத் துணிந்ததும், ‘இவையெல்லாம் நம்மால் முடியாதா’ என்ற கர்வத்தில் விளைந்த செயல். இந்த அனுபவம் தான், அவருக்கு ‘பிரம்மரிஷி’யின் உண்மையான தகுதி என்ன என்பதை உணர்த்தியது… தவம் செய்வது மட்டும் ஒருவருக்கு தகுதி கிடையாது… மனசை பக்குவப்படுத்துதல் மட்டுமே நிதானத்திற்கு வழி வகுக்கும் என்பதைத் தெரிந்து கொண்டார்…. ‘பிரம்மரிஷி’யானார்….
மேகலா : ‘பிரம்மரிஷி’யாவது, விசுவாமித்திரருக்கே tough fight என்றால், எங்களை மாதிரி சாதாரணப்பட்டவர்களெல்லாம் எப்படி கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சாதாரணப்பட்டவர்களுக்குத்தான் இது ரொம்ப easy மேகலா…
மேகலா : என்ன கிருஷ்ணா…., இப்படிச் சொல்லிட்ட…. எப்படி…, எப்படி….
கிருஷ்ணர் : சாதாரணமானவர்கள் என்று நீ சொல்கிறாயே…, அப்படிப்பட்டவர்கள், நல்ல வேலையில் சேர்ந்து, நன்றாக உழைத்து, நல்ல நிலைக்கு வரணும் என்று நினைப்பது சாதாரணமாக நிறையப் பேரிடம் உண்டு. அந்த வேலையில், நல்ல பெயர் எடுத்து, அடுத்த நிலைக்கு முன்னேறணும்… அதற்காக, தன்னால் இயன்றவரை, தன் மனதைக் கட்டுப்படுத்த தயாராகிறான். கோபத்தை அடக்குவதால், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் அபிமானத்தை சம்பாதிக்கிறான்… பொறாமையை அடக்குகிறான்… தனக்கே நல்லவனாகிறான்…. இப்படி, ஆசை, தாபம், என்ற ஒவ்வொரு குணத்தையும் அடக்க, அடக்க சாதாரண மனிதர்கள், மனது லேசாக ஆவதை உணர்கிறார்கள்…. இப்படி, அன்றாட வாழ்க்கையில் பெரும் சுமையான இந்திரியங்களை அடக்கினால் தான் முன்னேற முடியும் என்ற நிர்ப்பந்தம் உடையவர்களுக்கு, மனசைக் கட்டுப்படுத்துவதும், பக்குவப்படுத்துவதும் கட்டாயம் தானே…. அதனால்தான் சாதாரணமானவர்களுக்கு easy என்று சொன்னேன்….
மேகலா : போ கிருஷ்ணா…. சுயநலத்துக்காக சில இடங்களில், அல்லது செல்வம் வரக்கூடிய இடங்களில், மனசை அடக்கலாம்…. ஆனால், பக்குவப்படுவது என்பது, இன்னும் மேன்மையானது இல்லையா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : உண்மைதான்… ‘பக்குவம்’, ‘பக்குவமடைதல்’ என்பது மேன்மையான விஷயம் தான்… ஆனாலும், ‘பக்குவம்’ என்பது, மனித முயற்சிக்கு அப்பார்ப்பட்டதல்ல. அனுபவத்தாலும், கொஞ்சம் யோசித்து செயல்படுவதாலும், நிதானம் வருகிறது. நிதானம் வரும் போது, புத்தி தெளிவாகிறது. ஒவ்வொரு அனுபவத்திலும், கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் நிதானமடைந்து, அவரவர் situation-க்குத் தகுந்த மாதிரி பக்குவமடைகிறான். ‘பக்குவம்’, மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில், சாதாரணமாக புழங்கக் கூடிய…, ஆனால், மேலான பலத்தைத் தரக் கூடிய, அசாதாரணமான வார்த்தையாக நாம் பார்த்தோம்…. சமையலில் பக்குவம், அதன் சுவைக்கு மெருகூட்டும். தாவர வளர்ச்சியில் பக்குவம், வளர்ச்சி, முழுமையாகும்…. ஆறுதலுக்காக, பக்குவம் அனுசரணையாகும்… தளர்ச்சியில், பக்குவம் உந்துசக்தியாகும். காலத்தில் எடுத்துச் சொல்லும் பக்குவம், மனிதனுக்கு ஏற்றம் தரும்… ‘மிகச் சரியான தருணம்’ என்பது பக்குவத்திற்கு ஓரளவு பொருத்தமான அர்த்தமாகும்… இதையெல்லாம் தெரிந்து கொண்டு, முதல் படியாக, நிதானமாய் யோசித்துப் பார்… பக்குவமாய் நடந்து கொள்ளத் தோணும்….. நாம் முதலில் கேட்ட பாடலை மறுபடியும் கேட்கலாம்… எங்கே சொல்லு….
மேகலா : இதோ கிருஷ்ணா….
‘மணப்பாற மாடு கட்டி
மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு
ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி வெதை வெதைச்சி
நாத்து பறிச்சி நட்டுப் போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏத்தம் ஏத்தி எறச்சிப் போடு செல்லக்கண்ணு
கருத நல்லா வெளைய வச்சி
மருத ஜில்லா ஆள வச்சி
அறுத்துப் போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி தோச்சி அளந்து போடு செல்லக்கண்ணு
பொதிய ஏத்தி வண்டியில
பொள்ளாச்சி சந்தையில
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்துப் போட்டு பணத்த எண்ணு செல்லக்கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா
செலவு செய்ய ’பக்குவமா’
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு..
கிருஷ்ணர் : முறையான உழைப்பு, நியாயமான ஊதியம்…, பக்குவமான அணுகுமுறை, எந்த வேலையிலும், எந்த நிலையிலும், ஆற நூறு ஆக்கிவிடும் மேன்மையானது மேகலா… நீ வெள்ளந்தியா இருந்தாலும் சரி…, விவரமாக இருந்தாலும் சரி…, பக்குவமாக நடந்து கொள்…. மேன்மை அடைவாய்….
மேகலா : கிருஷ்ணா…., அவ்வளவுதானா….
கிருஷ்ணர் : பக்குவமா நடந்துக்கோ…, அவ்வளவுதான்….
(நிறைவு பெற்றது)
Comments
Post a Comment