ஆளுமை - பாகம் 1
கிருஷ்ணர் : ஹாய் மேகலா…, என்ன இந்தப் பக்கம்…. இன்று வருவயோ…, மாட்டாயோ…, அப்படீன்னு நினைச்சேன்… நினைச்ச மாத்திரத்தில் வந்துட்டயே….
மேகலா : என்ன கிருஷ்ணா…., ஒண்ணும் மண்ணுமா பழகுறோம்… நீ என்னை நினைப்பது எனக்குத் தெரியும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : வந்து…, என்ன topic-ல பேசலாம்ணு கேட்டு, என்னைத் தொந்தரவு பண்ணுவியே… அத நெனச்சேன்…, வேற ஒண்ணுமில்ல…
மேகலா : கிருஷ்ணா…, நீ என்னைத் ’தொந்தரவு’னு நெனச்சாலும் பரவாயில்ல… என் மனசுக்குள் கோலாகலாமாய் கோலோச்சி நிக்குற கிருஷ்ணா… நான் கோயிலுக்குப் போய், கிடந்த பெருமாளையும், குழலூதும் கண்ணனையும் பார்க்கணும்னு கூட வேண்டியதில்லை கிருஷ்ணா… ‘விடாமுயற்சி’, ‘உழைப்பு’, ‘பக்குவமாதல்’, ‘பக்தி’ என்று ஏதாவது ஒன்றைப் பற்றிப் பேசும் சந்தர்ப்பம் வந்தால், உன் கீதையின் முகமும், குரலும் எனக்குள்ளே வியாபித்து நிற்குது கிருஷ்ணா… நீ சொன்ன வார்த்தைகள் தான், இலக்கணமாய், இலக்கியமாய் எனக்கு உபதேசம் பண்ணுகிறது… ஒண்ணும் வேண்டாம்…, சினிமா பார்த்து, M. G. R – ஐப் பற்றியோ, சிவாஜி பற்றியோ பேசக் கிடைத்தால்…, உடனே என் கிருஷ்ணனின் முகம் தோன்றி…, ‘பார்ரா…, M. G. R. மாதிரி human being உண்டான்னு சொல்லுவியே’ – என்று என்னை நக்கல் பண்ணுவதை நான் ரொம்ப ரசிக்கிறேன் கிருஷ்ணா… அழகை ரசிக்கும் போது, நகைச்சுவையாய் பேசும் போது, ஏதாவது தலைப்பில் யோசிக்கும் போது…, எல்லா சந்தர்ப்பங்களிலும், கிருஷ்ணா…, நீ ஒரு நண்பனாய் என்னோடு பேசி என்னை இயக்கிக் கொண்டு இருக்கிறாய்… நீ என்னை இயக்குகிறாயா, என்னோடு பேசுகிறாயா என்பதை விட…, என்னை முழுசாக ஆக்ரமித்திருக்கிறாய் என்பதுதான் நிஜம்… உன்னுடைய guidance இல்லாமல், என் கட்டுரைகள் இல்லை… உன்னுடைய தாக்கம் இல்லாமல், என்னுடைய ideas கிடையாது… உன்னுடைய ஆதிக்கம், ஆளுமை இல்லாமல்…, என் personal விஷயங்கள் கூட கிடையாது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : சரி…, சரி…, நீ என்ன சொல்ல வர்ற… ‘ஆளுமை’ topic-ல் பேசுவோம்… ரொம்ப interesting ஆக பேசலாம் போல… M. G. R., சிவாஜி பற்றியெல்லாம் புதுப் புதுக் கதைகளாய் உருட்டுவயோ….
மேகலா : ‘ஆளுமை’…. ஓ…. நல்லா இருக்கு கிருஷ்ணா…. ஆனால், உருட்டலாம் மாட்டேன்…
கிருஷ்ணர் : எல்லாம் சரி… ‘ஆளுமை’ என்ற தலைப்பில், ‘ஆக்ரமிப்பு’ பற்றி பேச ஆரம்பிக்காதே…, அது நில ஆக்ரமிப்பு…, இட ஆக்ரமிப்பு என்பதில் தான் முடியும்…
மேகலா : இல்ல கிருஷ்ணா…. ‘ஆளுமை’ உள்ளவர்களால் மட்டும் தான்…, ஆக்ரமிக்கவும் முடியும் கிருஷ்ணா…. உன்னுடைய ஆளுமைதான், என் மனசை மொத்தமாக ஆக்ரமிக்கவும் செய்கிறது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : நீ இப்படியேதான் பேசிக்கிட்டு இருக்கப் போறயா…. ‘ஆளுமை’ங்கிற தலைப்பை நான் சொல்லியிருக்கிறேன்….
மேகலா : நானும் அதைப் பற்றித்தான் பேசப் போகிறேன் கிருஷ்ணா… ‘ஆளுமை’ என்ற வார்த்தையே, ரொம்ப பிரம்மாண்டமாய் இருக்கு கிருஷ்ணா… எனக்குத் தெரிந்து…, ஆளுமையின் மொத்த உருவமே…, என் அப்பா தான் கிருஷ்ணா…. அவர் பேசுவது, யோசிப்பது, பிள்ளைகளுக்கு food கொடுப்பது, வளர்ப்பது…, இவ்வளவு ஏன்…., என் அம்மாவை ‘தாஜா’ பண்ணுவதில் கூட, அட்டகாசமான ஹீரோவாகத்தான் இருப்பார் கிருஷ்ணா…. எல்லோரும் சொல்லலாம்…, ‘அவரவர்க்கு அவங்க அப்பா தான் ‘ஹீரோ’ அப்படீன்னுட்டு’… என் அப்பா அதுக்கும் மேலே…. ஒரு சின்ன நிகழ்ச்சி… நாங்க குழந்தைகளா இருந்த போது…, குற்றாலம் சீசன்ல, சனி, ஞாயிறுனா…, குற்றாலம் கூட்டிச் செல்வார். எந்த falls-ல் குளிக்கப் போகலாம் என்று யாரிடமும் opinion கேட்க மாட்டார். நேராக, ஐந்தருவிக்கு கூட்டிச் செல்வார். கடையிலிருந்து எண்ணெய் வாங்கி வருவார்… ஆங்காங்கே மக்கள் கூட்டம் இருக்கும்… யாரைப் பற்றியும் கவலைப் பட மாட்டார்… எங்களுக்கு, ஜடையெல்லாம் பிரித்து, எண்ணெயை, ‘மொழு மொழுனு’ தேய்த்து விட்டு…, அருவிக்கு அருகில் அழைத்துச் செல்வார். அப்படி கூட்டிச் செல்லும் போது, இரண்டு கைகளையும் சிறகு மாதிரி விரித்து…, கூட்டத்தை விலக்கிக் கொண்டே…, பாதுகாப்பாகக் கூட்டிச் செல்வார். இவர் வருகிறார் என்றால், கூட்டத்தினரும், ஏதோ Prime Minister வருவது போல…, விலகித்தான் நிற்பார்கள் கிருஷ்ணா… குளிக்கும் போது கூட, நாங்களும் எவ்வளவு கூட்டம் இருந்தாலும், எங்க அப்பா பாதுகாப்பில், jollyயா குளிச்சிட்டு வருவோம். எங்களை ஒரு பாதுகாப்பான இடத்தில் நிற்க வைத்து, முடியை இழுத்து towel-லில் கட்டி விட்டுத்தான் அவர் குளிக்கச் செல்வார்… ‘இது ஒரு அப்போவோட கடமைதானே’… அப்படீன்னு நீங்க சொல்லலாம்… யாராவது சொல்லி செய்தால்…, அது கடமை…. பிள்ளைகளை குற்றாலம் கூட்டிப் போய், சந்தோஷமாய் குளிப்பாட்டி, ஹோட்டலில் சாப்பிட வைத்து…, ஒரு இளவரசி மாதிரி அழைத்து வர வேண்டும் என்று நினைப்பது… வேற லெவல்…. ‘என் பிள்ளைகள், என் குடும்பம்’ என்ற நினைப்பில் கொஞ்சம் கூட சுதி குறையாமல் இருப்பது தான், அவரோட ’domestic ஆளுமை’….
கிருஷ்ணர் : Oh! இன்னும் வேற department-ல கூட ’ஆளுமை’ இருக்கா….
மேகலா : சந்தேகமில்லாமல்…. 100% dominating person கிருஷ்ணா…. ‘ஆளுமை’ன்னா என்ன கிருஷ்ணா… எந்த situation-லயும், அந்த situation-க்கு எது சரியென்று படுகிறதோ…, அதை யாரிடமும் கலந்து பேசாமல், தானே முடிவெடுப்பது…. அது மட்டுமல்ல கிருஷ்ணா…. அதுல சாதிச்சும் காட்டுவது… சாதித்ததனால் மட்டுமே, சுற்றியிருப்பவர்கள், எந்தக் கருத்தும் சொல்லாமல், பின் தொடர்வார்கள் என்பது நான் கண்ட உண்மை கிருஷ்ணா…. என் அப்பாவிடம், ‘அப்படித்தான் நினைக்கிறேன்’ என்று சொல்லக் கூடாது… ஏதாவது ஒரு செய்தியைப் பற்றின விவரம் கேட்டால், அதை அறிந்து தெளிவாகச் சொல்லணும்… இல்லாவிடில் ‘தெரியாது’ என்ற உண்மையைச் சொல்லணும்… இரண்டும் இல்லாமல்…, ‘நினைக்கிறேன்’…, ‘அப்படி இருக்குமோ’ என்று மாத்தி மாத்தி யோசித்தால், அவர்களை, ‘சர்வ முட்டாள்’ என்று easy-யாக நிரூபித்து விடுவார்…. ஏதாவது பழமொழி சொல்லணும்னாக் கூட, யாரும் அனுமானிக்க முடியாத பழமொழியைத்தான் சொல்லுவார்….
கிருஷ்ணர் : அனுமானிக்க முடியாத பழமொழியா…. அப்படி என்ன பழமொழி….?
(தொடரும்)
Comments
Post a Comment