Passion - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர் : இது மாதிரி, வயல் வெளிகளில், நாற்று நடும் போதும், களை பறிக்கும் போதும் பாடும் பாட்டு, நாட்டுப் பாடல்கள் தானே… இவ்வளவு ஏன்…., கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ‘கொல்லங்குடி கருப்பாயி’ என்ற ஒரு பாட்டி, நாட்டுப் பாடல்களில், தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கலயா…. தாலாட்டிலிருந்து, ஒப்பாரி வரை, மனித வாழ்வின் நிகழ்ச்சிகளை இசையோடு கலந்து யோசிக்கிறான். எல்லாத் தொழில்களிலும், உழைப்பாளிகள், தங்கள் movement-ஐயே இசையாக வெளிப்படுத்துவார்கள்…. நீ கேட்டதில்லையா… மீனவர்கள் boat ஓட்டும் போது…, ‘ஐலசா…, ஐலசா’ என்று தாளத்தோடு, இசைத்துக் கொண்டு செல்கிறார்கள்… மிகப் பெரிய கல்பாறையை நகர்த்தும் வேலையில் ஈடுபடுபவர்களின், இழுத்து விடும் மூச்சுக் காற்றே, இசையாய் ஒலிக்கும்… இப்படி நாட்டுப் பாடல்கள்…, உழைப்பாளர்களின் ரிதமாய் வெளி வரும் மூச்சுக் காற்று…, இலைகள் அசையும் அசைவுகள்… பறவைகளின் சப்தங்கள்…, குயில் பாடும் பாட்டு…., வண்டுகளின் ரீங்காரம்…, நதிகளின் சலசலப்பு…, அருவி கொட்டும் ஓசை…, இவையெல்லாவற்றிலும்…, இனிமையான ரிதம் இருக்கிறது. இதனை, ‘passion’ என்பதற்குள் கட்டுப் படுத்த முடியாது… இயற்கையோடு இசைந்து வாழ்வது, நம்முடைய பாரதத்தின் கலாச்சாரம் தானே… இவ்வளவு ஏன்…, இன்றைய சினிமாப் பாடல்கள், கர்நாடக சங்கீதத்தின் ராகத்தை வைத்துத்தான் மெட்டமைக்கிறார்கள்… இது எத்தனை பேருக்குத் தெரியும்…. இது என்ன ராகம் என்று தெரியாதவன் கூட, வேலை செய்யும் போது, சினிமாப் பாட்டைப் பாடிக் கொண்டே வேலை செய்கிறான்… சினிமாப் பாட்டை விசில் அடித்துக் கொண்டே வேலை செய்பவருக்கெல்லாம்…, பாட்டு ஒரு passion கிடையாது. அவர்கள் தங்கள் வேலையை உற்சாகமாகச் செய்ய, இசை ஒரு கருவியாகிறது… அதனால் தான், கண்ணனின் கையில் புல்லாங்குழல், வாணியின் கையில் வீணை… இப்பப் புரியுதா….

மேகலா : ரொம்பப் பெருமையாய் இருக்கு கிருஷ்ணா…. புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணரும், வீணையை ஏந்தும் சரஸ்வதியும், நம்முடைய பாரத தேசத்து மக்களின் வாழ்க்கை முறையில், கலாச்சார அடிப்படையில், இயற்கையோடு இசைந்து வாழ்வது, இனிமையான இசைக்கு ஒப்பாகும் என்பதை உணர்த்துகிறார்கள்… இதை, இன்றுதான் நான் புரிந்து கொண்டேன் கிருஷ்ணா… Music மீது பெரும் மரியாதையே வருகிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அதெல்லாம் இருக்கட்டும்… Passion-னு நினைக்காமலேயே, நமக்குப் பிடித்த பல விஷயங்களை அடிக்கடி செய்கிறோம். அதில் ஒண்ணுதான்…, ‘இசை’…. கச்சேரிக்குப் போய், மைக் முன்னாடி உட்கார்ந்து கொண்டு, சுதி பிசகாமல், தாளம் தப்பாமல் பாடணும்னு கிடையாது…. வீட்டில் வேலை செய்யும் போது, bathroom-ல் குளிக்கும் போது, சாமி கும்பிடும் போது…, என்று சங்கீதம் கற்காமலேயே பாட்டுப் பாடலாம்… சந்தோஷம் வந்தால் மட்டுமல்ல, துக்கம் வந்து நம்மை வாட்டும் போது கூட, பாட்டுப் பாடலாம். பாட்டுப் பாடுவது மாதிரி, நாம் relaxed ஆக இருக்கணும் என்பதற்காக, சினிமா போகலாம், வெளியில் ஊர் சுற்றப் போகலாம்…. Gardening உனக்கு passion ஆகக் கூட இருக்கலாம்…. ஆனால், சும்மா garden-ல் பறக்கும் பட்டாம்பூச்சியை ரசிக்கலாம்… வான வெளியில் பறக்கலாம்… இதெல்லாம், passion என்று சொல்லி விட முடியாது…. தஞ்சை பகுதிகளில், காவிரி பாயும் ஊர்களில், வாய்க்கால்கள் ஓடும் அங்கு காவிரி சலசலத்து ஓடும் போது, அந்த ஊரைச் சேர்ந்த சிறுவர்கள், அதில் பாய்ந்து ‘டைவ்’ அடிப்பதும், கர்ணம் பாய்வதும், நீச்சலடிப்பதும் கற்றுக் கொள்வார்கள். கார் டயரைப் போட்டு, அதற்குள் நுழைந்து மிதப்பதும், சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி… விடுமுறை என்றாலே, அந்த ஊர் மக்களுக்கு கொண்டாட்டமாகி விடும்… இதை passion என்று சொல்ல முடியாது… பொழுது போக்காகச் செய்வது வேறு… திறமையாளர்கள், ‘இது என்னோட passion… இதைத் திரும்பத் திரும்ப செய்வதில்தான் என் மகிழ்ச்சியே இருக்கு’ என்று சொல்வது வேறு… ‘என் உயிர் மூச்சு, என் நிம்மதி, திருப்தி.., இது என் வாழ்க்கை.., என் உயர்வு’ என்று நினைப்பவர்கள்…, தன்னுடைய passion என்று நினைப்பதையே…, வாழ்க்கையாக்கி விடுகிறார்கள்… ‘எனக்கு இது ரொம்பப் பிடிக்கும். லீவு விட்டா, உடனே எங்கள் பண்ணைக்கு வந்து, இயற்கையோடு பொழுதைப் போக்குவேன்’ என்று சொல்வது…, பொழுது போக்குவதற்காக…. விரும்பிச் செய்வது…. ‘Passion’ என்பது திறமையாளர்கள் சொல்வது… ‘பொழுது போக்கு’ – விடுமுறை நாளில் enjoy பண்ணுவது… திறமையாளர்களினால் தான், இந்த உலகம் மேன்மையுறுகிறது…. நீ என்ன நினைத்து இந்தத் தலைப்பைச் சொன்னாயோ…, தெரியவில்லை…. ரொம்ப அருமையான தலைப்பு.

மேகலா : என்ன கிருஷ்ணா! முடிவுரை மாதிரி பேசுற….

கிருஷ்ணர் : ஆமாம்… உனக்கு, புதுசு, புதுசா எழுதுவது பிடிக்கும் என்பதற்காக…, ஒரே தலைப்பிலா பேசிக் கொண்டே இருக்க முடியும்… இனி, அடுத்த topic-ல் பேசுவோம்…. வர்ரட்டா….

மேகலா : அவ்வளவுதானா….!

(நிறைவு பெறுகிறது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1