ஆளுமை - பாகம் 2
மேகலா : கிருஷ்ணா…., அமெரிக்க அதிபர் ‘ஜான்சன்’ என்பவர், ‘two at a time’ என்ற அர்த்தத்தில்…., ‘நடந்தா பேச்சு வராது, பேசிக் கொண்டே நடக்கத் தெரியாது’ என்று சொல்லியிருக்கிறார். இதை எங்க அப்பா, ‘கப்பு’னு புடிச்சிக்கிட்டாரு. நாங்க ஏதாவது, இந்த மாதிரி situation-ல மாட்டிக்கிட்டு இருந்தோம்னா…, இந்த பழமொழியைச் சொல்லி, ‘கபகப’ன்னு சிரிப்பாரு… எங்களுக்கு, ‘அமெரிக்க அதிபர்’, அப்பாவோட அதிரடி சிரிப்புலேயே அரண்டு போயிருவோம்…. சொல்ல வந்ததை மறந்தும் போயிருவோம்…
கிருஷ்ணர் : Oh! உங்க யாருக்கும், அமெரிக்க அதிபரைப் பற்றித் தெரியாது… இது ஒரு மாதிரியான தகவல் dominating-காக இருக்கே…
மேகலா : கிருஷ்ணா…., பொய்யான தகவல்கள் அவரிடம் இருக்கவே இருக்காது கிருஷ்ணா… நண்பர்களுக்கு மத்தியிலும், உறவினர்கள், தன் சொந்தப் பிள்ளைகள், அதிகாரிகள் என்று, யார் முன்னிலையிலும், ‘பேசுபவரும்’, தகவல் பரிமாற்றமெல்லாம் கிடையாது. தகவல்களைச் சொல்பவரும் அவர் மட்டுமே…, அவர் மட்டுமே கிருஷ்ணா…. இத்தனைக்கும், ‘தினமணி’ தினசரிப் பத்திரிக்கை மட்டும் தான் வாசிப்பார்…. பின் நாட்களில், ‘துக்ளக்’ வாரப் பத்திரிக்கையும், அரசியல் செய்திகளுக்காக படிப்பார் கிருஷ்ணா… இதில் கொடுக்கப்படும் செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு, அவருடைய அனுபவம், அனுமானத்தையும் வைத்து, தன் மனதில் strong-கான தகவல்களை சேகரித்து வைத்திருப்பார். இதற்கு நேர்மாறாக யாராவது பேசினால், அவர்களை மதிக்கவும் மாட்டார்…, பேசவும் விட மாட்டார் கிருஷ்ணா…. எங்களுக்கெல்லாம், அவருடைய ‘ஆளுமை’ என்பது, இன்று வரையிலும், ஒரு கவசமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதுதான் உண்மை கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அது அப்படித்தான் மேகலா… ஒரு ஆளுமை மிகுந்த திறமையாளன் இருக்கும் போது, அவரைச் சுற்றியுள்ளவர்கள்…, ‘எல்லாம் அவர் பாத்துப்பார்’ என்று நிம்மதியாக இருப்பார்கள்… இப்போ, current situation-ல, பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் போது, அவரைச் சுற்றியிருப்பவர்கள், ‘அண்ணாமலையே, செய்தியாளர்களுக்கு விளக்கம் சொல்லட்டும்’ என்று அமர்ந்திருப்பதை நாம் பார்க்கிறோம்… ஒரு ஆளுமை மிகுந்த திறமையாளன், ஒரு தகவலைக் கொடுக்கும் போது, அந்தத் தகவலின் 100% விளக்கத்தையும்…, ஏன் எதற்கு என்ற காரணங்களையும், அதற்கான ஆதாரத்தையும், தெளிவாகச் சொல்லுவார்கள்…. ’மற்றவர்களுக்குச் சொல்லத் தெரியாதா’ என்பதில்லை…. எடுத்துச் சொல்லும் தகவல்களை, கேட்பவர்கள் மறுத்துச் சொல்ல முடியாதபடி, ஆற்றலுடனும், ஆதாரத்துடனும் சொல்லுவது, ஆளுமையாளர்களின் தனித்திறமை. அதனால், சில ஆளுமையாளர்கள், தலைவர்களாக தலை நிமிர்ந்து, பலர் மனதிலும் இடம் பிடிக்கிறார்கள்….
மேகலா : ஐயோ! 100% நிஜம் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ஒண்ணு நல்லா புரிஞ்சிக்கோ…. Dominating personality என்று உன் அப்பாவைப் பெருமையாய் பேசுகிறாய். உன் அப்பாவுக்கு, தன் குடும்பத்தின் மீதும், தன் நிர்வாகத்தின் மீதும், மிகுந்த அக்கறை… அதனால்தான், எல்லா சந்தர்ப்பங்களிலும் தானே முடிவெடுக்கிறார்…. அது மாதிரி, ஒரு தலைவனுக்கும், ‘தன் மண், தன் மக்கள், தன் தேசம்’ என்ற அக்கறையில், எல்லா தகவல்களையும், தானே விளக்குகிறார்…. எல்லா தவறுகளுக்கும் கொந்தளிக்கிறார். இவர்களுடைய நேர்மையான ஆளுமை, மக்கள் அனைவரும், எந்த உத்தரவாதமும் இல்லாமல், அணி சேருகிறார்கள்…. சுதந்திரப் போராட்டத்தின் போது, , காந்தியின் ஆளுமையை நினைத்துப் பார்த்தாயா மேகலா… இது பிடிவாத குணம் கொண்ட ஆளுமை. அன்றைய காலகட்டத்தில், இவருடைய பிடிவாத குணம், உலகத்துக்கே புதுசு… ‘போராட்டம்’ என்பது, எதிரி ஒரு ஆயுதம் எறிந்தால், போராளி ஒரு ஆயுதம் எறிவான். எதிரிக்கு, அவன் தோற்கும் வரை பிரச்னையே இல்லை…. ஆனால், காந்தி என்ன சொன்னார். ‘அகிம்சை’ என்று சொல்லி, உலகத்தையே ஸ்தம்பிக்கச் செய்தார். 30 கோடி மக்களும், வேறு வழி இல்லாமல், ஆங்கிலேயர்களிடம் அடி வாங்கி, காந்தியின் பக்கம் நின்றார்கள்… பிரிட்டிஷ் அரசாங்கம் திகைத்துப் போனது. உண்ணாவிரதம் இருப்பது, தன்னுடைய ஆடையைத் தானே நெய்வது, சட்டத்திற்குப் புறம்பாக, எந்தச் செயலும் செய்ய மாட்டேன் என்ற பிடிவாதம், நேர்மை, தியாகம்…, இதெல்லாம் பிரிட்டிஷ்காரர்கள், இந்த நாட்டை விட்டுச் செல்ல காரணமாகியது…. இவரைச் சுற்றியிருந்த போராளிகளும், எதிர்த்து சண்டையிடுவதை விட, அமைதியாய் போராடுவது, சுதந்திரத்துக்கு வழி வகுக்கும் என்று புரிந்து கொண்டார்கள். நேர்மையும், எளிமையும், தியாகமும், பிடிவாதமும்…, ஆளுமையாக நின்ற காலம் அது. மகாத்மாவாக உயர்ந்து நின்ற காந்திஜியால், தலைவனாக முடியவில்லை பார்த்தாயா…. ஒரு தலைவன், அடித்து ஆடும் all-rounder ஆக இருக்க வேண்டும். காந்தி ஒரு மகாத்மா….
மேகலா : ஏன் கிருஷ்ணா…., ஆளுமையாளர்கள், அகிம்சையை நேசிக்கக் கூடாதா…. எளிமையான வாழ்க்கை, தலைவனாவதற்கான தகுதி கிடையாதா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அப்படீன்னு யார் சொன்னது…. அடக்கியாள்பவன் தான், ஆளுமை நிறைந்த தலைவன்… அன்பால் அடக்குவது, குடும்பங்கள்ல பொருந்தலாம். அடக்க வேண்டியதை, விட்டுக் கொடுத்து வளர விடக் கூடாது. அடக்கியே ஆக வேண்டும்… ‘வலிமைதான், வலிமையை எதிர்கொள்ள முடியும்’ – என்று யார் சொன்னது….?
(தொடரும்)
Comments
Post a Comment