ஆளுமை - பாகம் 3
மேகலா : இந்த ‘மண்ணின் மைந்தன்’, ‘மாணவர்களின் நம்பிக்கை’, ‘ஏவுகணைகளின் தந்தை’, பாரத ரத்னா, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் A. P. J. அப்துல் கலாம் அவர்கள்…
கிருஷ்ணர் : அவர், எளிமையானவர், நேர்மையானவர்…, அதே நேரத்தில், தீவிரவாதத்தின் வீர்யத்தை உணர்ந்தவர். நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளிடம், அஹிம்சை பேசக் கூடாது… ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ – என்று அந்நிய சக்திகளிடம் சிரித்துக் கொண்டே சொன்னாரா, இல்லையா… ‘பொக்ரான்’ குண்டு வெடிப்புச் சோதனையை நடத்தி…, பாரத நாட்டின் பலத்தைக் காட்டி, பக்கத்து நாடுகளுக்கு கிலியைக் கொடுத்தாரா, இல்லையா… இந்த ஒரு நிகழ்ச்சியினால், பாரத நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மனதிலும் நம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்தாரா, இல்லையா…. அவரைப் பற்றி ஒரு comment-ஐ, நீ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அதைச் சொல்லேன்….
மேகலா : கலாம் அவர்கள் மறைந்த போது, ஒருவர், தன் கடையின் முன்னால் எழுதியிருந்த கண்ணீர் அஞ்சலியா கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ஆமாம்…, அதேதான்…
மேகலா : ‘ஐயா, எங்களுக்கு பெரிய அறிவாளிகளையோ, தலைவர்களையோ தெரியாது… எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், நீங்கள் மட்டும் தான் ஐயா… இனி, அறிவியல் தகவல்களை, யார் எங்களுக்குச் சொல்வார்’ – என்று எழுதியிருந்ததைப் படித்த பின் தான், கலாம் ஐயாவின் மறைவு, என்னைத் தீவிரமாக அழுத்தியது…
கிருஷ்ணர் : ஹும்…, இதுதான்… தன் அன்பையும், அறிவையும் செலுத்தி, தன் தேசத்து மக்களை, தேசியவாளர்களாக்கிய திறமை… ஒவ்வொரு இந்தியர்களின் எண்ணங்களில் ஒளிந்திருந்த வலிமையை வெளிக் கொண்டு வந்த செயல்… இங்கு, அன்பும், அறிவும் வேற லெவல் பலத்தைக் காட்டியதா… ‘அறிவியலுக்கு பயம் தெரியாது… அதை அறிந்து கொள்ளும் திறமை இருந்தால், அறிவியலில் சாதிக்கும் ஆற்றலும் உங்களுக்குள் இருக்கிறது’ – என்ற பேருண்மையை, மாணவர்களிடம் சொல்லும் போது, அத்தனை பேரும், எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்றுக் கொண்டார்களா, இல்லையா… மாணவர்களின் மனதை, சாதாரண இந்தியனின் மனதை ஆளத் தெரிந்தவர்…, எளிமையானவர்…. ஆனாலும், ஏவுகணைகளை ஏவத் தெரிந்த ஆர்றல் மிகுந்தவர்… அமைதியானவர்…. தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வலிமையானவர்… ஆளுமைகள் பல விதம்… அதில் இது புது விதம்… இன்றைய பாரதத்தின் வலிமைக்கு வித்திட்டவர்… இருந்தாலும், உலக மக்களின் மனதில், அரசியல் கட்சி பேதமில்லாமல், வேற்று நாட்டிலும் கூட, முழுதாய், அன்பால், அறிவால் நிறைந்தவர்….
மேகலா : கிருஷ்ணா…, உனக்கு, டாக்டர் கலாமை ரொம்பப் பிடிக்குது…, இல்ல கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இல்லையா பின்ன…. நல்லவர்களை, வல்லவர்களை யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும், அறிவாலும், அன்பாலும், மக்கள் மனதை ஆளுபவர்களை, யார்தான் பிடிக்கலன்னு சொல்வார்கள்…
மேகலா : அப்போ…, அன்பாலும், பிறர் மீதுள்ள அக்கறையினாலும், மக்கள் மனதை ஆளுபவர்களை, நீ எப்படி ரசிப்பாய் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ‘அன்பால்’…, ‘அக்கறையினால்’… ‘ஆளுபவர்’…, ‘ரசிப்பது’… ஓ… நீ M. G. R-ஐச் சொல்லுகிறாயா… நான் கூட, முதலில், ‘கர்ம வீரர் காமாரஜர்’ என்றுதான் நினைத்தேன். அவருடைய ஆளுமையையும், அக்கறையையும், அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் அறியவில்லை… ஆனால், ‘ரசிப்பது’ என்று சொன்னவுடன், புரிந்து கொண்டேன்…, party, M. G. R-ஐச் சொல்லுகிறது என்று…. நானும் மனசுக்குள் நினைத்தேன்… காந்தியைப் பற்றிப் பேசுகிறோம்…, கலாமைப் பற்றிப் பேசுகிறோம்…. 200% ஆளுமைத்திறம் கொண்ட M. G. R-ஐப் பற்றி இன்னும் ஆரம்பிக்கலயேன்னு நினைச்சேன்…, நீ ஆரம்பிச்சுட்ட… நெசம்மாவே, M. G. R., ஒரு ஆளுமையான மனுஷன் தான்… தான் கொண்ட கொள்கையை, தான் கடைப்பிடிப்பது மட்டுமல்ல…, தன்னைச் சுற்றியிருப்பவர்கள்…, தன்னுடன் நடிப்பவர்கள்…, தனக்காக வேலை செய்பவர்கள்…, தன்னை ரசிப்பவர்கள் – என்று எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்… அதற்காக முயற்சியும் எடுப்பவர்…. தன் கொள்கை மட்டுமல்ல, தனக்கு எது சரியென்று படுகிறதோ, அது மட்டுமல்ல, தனக்கு எது பலன் கொடுக்கிறதோ, அதையும் எல்லோரும் பெற வேண்டும் என்று நினைப்பதில், நிச்சயம் அவர் ‘மக்கள் திலகம்’ தான். அதனால், திரையில் அவர் என்ன சொன்னாலும், மக்கள் கண்ணை மூடிக் கொண்டு follow பண்ணினார்கள்…
மேகலா : கிருஷ்ணா…, M. G. R., புதுசா famous ஆகும் நடிகர்களுக்கு அவர் சொல்லும் advice கூட ரொம்ப கெத்தா இருக்கும் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அப்படியென்ன advice…?
மேகலா : நம்மை follow பண்ணும் ஒரு ரசிகன் கூட, நம்மை விட்டு விலகக் கூடாது என்று சொல்லுவாராம் கிருஷ்ணா… அது, ஏன்னு சொல்லு…
கிருஷ்ணர் : ஏதோ ஒரு கவர்ச்சியோ, act-டோ, ‘நல்லவர்’ என்ற image-ஜோ…, அதை வைத்துத்தான் ரசிகர்கள் நம்மை ரசிக்கிறாங்க. அதை முழுசாக, வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும்… அப்பத்தான், எந்த ரசிகனும், நம்மை விட்டு விலக மாட்டான் என்பது அவருடைய கணிப்பு போலும்…. Indirect-ஆகச் சொல்லுவது, சினிமா உலகத்துக்கு வந்து கண்ணியம் தவறி நடந்து விடாதீர்கள். மக்களின் நம்பிக்கைக்குத் தகுந்தபடி இருங்கள் என்று சொல்லிக் கொடுக்கிறார் போலும்… அப்படித்தானே…
மேகலா : நீ சொன்னா, பொய்யா இருக்குமா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நான், M. G. R-ஆரோட ஆளுமைக்கான காரணம், மக்கள் மீது கொண்ட அன்பும், அக்கறையும் என்று சொல்லி விட்டேன். அவர் தன் ஆளுமையை எப்படி செயல்படுத்தினார்… ஏதாவது ஒரு நிகழ்ச்சியைச் சொல்லேன். எனக்கு ரொம்ப நாளா, இந்த மனுசன மட்டும் ஏன் மக்கள் இத்தனை ரசிக்கிறாங்க… இவர் என்ன சொன்னாலும் ‘விசில்’ பறக்குதே… இது எப்படின்னு யாருட்டயாவது கேட்கணும்னு ஆசை… ஏதாவது ஒரு நிகழ்ச்சி சொல்லேன்….
மேகலா : நிறைய சம்பவத்தை சொல்லலாம் கிருஷ்ணா….
(தொடரும்)
Comments
Post a Comment