ஆளுமை - பாகம் 5
கிருஷ்ணர் : உலகம் அப்படித்தான் மேகலா…. ஆளுமை மிகுந்தவன் சொல்லை மற்றவர்கள் ஏன் அனுமதிக்கிறார்கள்…. அவனால் கிடைக்கப் போகும் பலனுக்காகத்தான்… இப்போ, அண்ணாமலை press meet கொடுக்கிறார். அருகில், B.J.P. தலைவர்கள் நிறைய பேர் அமர்ந்திருக்கிறார்கள். செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு அண்ணாமலை மட்டும் தான் பதில் சொல்லுகிறார்… அந்த பதில் மற்றவர்களுக்குத் தெரியாதா…, அவர்களால் சொல்ல முடியாதா…. சொல்ல முடியும்… ஒரு தலைவன் பேசும் போது, சொல்ல வரும் தகவல்களை, முழுசாக, ஆதாரபூர்வத்துடனும், தெளிவாக சொல்லுகிறார். சொல்லும் தகவல், மக்களைச் சென்றடைய வேண்டும். அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிகழ வேண்டும். அதனால், தலைவனின் ஆளுமை மிகச் சரியானதே…. M. G. R – னால் தொழிலாளிகள் பயன் பெறுகிறார்கள் என்றால், அவருடைய ஆளுமையை நானும் ரசிக்கிறேன்…. இன்னும் ஒண்ணு உனக்கு நான் சொல்லியே ஆகணும் மேகலா… மகாத்மா காந்தியோ, பாரத ரத்னா அப்துல் கலாமோ, லார்டு அருணாச்சலமோ, B. J. P. மாநிலத் தலைவர் அண்ணாமலையோ, மக்கள் திலகம் M. G. R-ஓ…, ஏன் ஆளுமை உள்ளவர்களாக இருக்கிறார்கள் தெரியுமா…. ஒரு situation-ல் dominate பண்றவங்க, அந்த இடத்தில் சம்பவம் easy-யாக நடக்க வேண்டும் என்ற அக்கறையில் dominate பண்றாங்க…. உன் அப்பா மாதிரி, அவரவர் குடும்பத்தில் ஆளுமை நிறைந்தவராய் ஏன் இருக்கிறார் என்றால், அந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் நலம், கல்வி, எதிர்காலம், தன்னுடைய வியாபாரம் தான் நினைத்தபடி நடக்க வேண்டும்…, எல்லோருக்கும் எல்லாம் நியாயமாகக் கிடைக்க வேண்டும் என்ற அக்கறையில் dominate பண்றாங்க… மகாத்மா காந்தி மாதிரி உலகத் தலைவர்கள், இரண்டாம் உலகப் போரின் போது, ஏன் அகிம்சையை முன்னெடுத்து, அத்தனை பேரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்கள்… உலகத்தில், தேவையில்லாத போர்…, வெடிகுண்டு கலாச்சாரம்…, மக்களின் நிம்மதியற்ற வாழ்க்கை…, சகிப்புத்தன்மை இல்லாத தன்மை…, இவையெல்லாவற்றையும் எப்படித் தடுக்கப் போகிறோம்…! இன்னும் எத்தனை சீரழிவு உலகம் பார்க்கப் போகிறதோ என்று பயந்து கொண்டிருக்கும் வேளையில்…, தானும் அணுகுண்டைக் கையில் தூக்காமல், அகிம்சையை கையில் தூக்கியதும், உலகம் மலைத்துப் போயிற்று…. அந்தப் போருக்கு நடுவில், யாரோ ஒருவர் சகித்துச் சென்றது…, உலகத்திற்குத் தேவையாக இருந்தது…. அதனால்தான் உலகப் போரை, அகிம்சை தலைமை தாங்கிச் சென்றது… காந்தியின், போர் நிற்க வேண்டும் என்ற அக்கறை…, ஜெயித்து விட்டது… ஆனால், இந்தியாவுக்கு சகிப்புத் தன்மை ரொம்ப நாள் நீடிக்கவில்லை… சீறாத பாம்பை, சின்ன எலியும் கூட சீண்டிப் பார்க்குமாம்… அப்படியானது பாரதத்தின் கதை… தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், ஒருவரை ஏவுகணைகளை ஏந்தச் செய்தது… இப்பவும் உலகமே அவரைக் கொண்டாடுகிறது… 2020-ல், இந்தியாவை வல்லரசாக்குவோம் என்ற வாசகம், பாரத மக்களுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே charge ஏறியது மாதிரி ஆனது… நட்புக்கு நட்பு…, வலிமைக்கு வலிமை என்று சொன்ன ஏவுகணைகளின் தந்தை அப்துல் கலாம் ஐயா அவர்களினால், பாரதம் என்ன பயன் பெற்றது என்பதை நீ அறிவாய்… அவர் உலக மக்களின் மீது கொண்ட அக்கறை என்ன என்பதை, நான் சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை… இன்று வளர்ந்து வரும் நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும், தீவிரவாதிகள் செயலற்றுப் போனதும், ஏவுகணை, ஏவுகலங்களின் ஆளுமையால்தான்… பாரதம், பெருமை மிகு பாரதம் என்ற பலனை அடைய, ஒருவரின் துணிச்சலும், தைரியமும், தன்னம்பிக்கையும் தான் காரணம்…. இன்றைய காலகட்டத்தில், B.J.P-யின் மாநிலத் தலைவர் அண்ணாமலை I.P.S., 100% ஆளுமை மிகுந்தவர் என்பதில், உனக்கு கருத்து வேறுபாடு ஏதாவது உள்ளதா….
கிருஷ்ணர் : ஏன் அப்படிச் சொல்லுகிறாய்…
மேகலா : அவர் speech-ல் இருக்கும் உண்மை…, நியாயம் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ஆளுமை நிறைந்தவன்…, ஒரு கருத்தையோ…, தகவலையோ சொல்லும் போது கேட்பவர், மெள்ள மெள்ள…, முழுசாக அந்தத் தகவலை அறிந்து கொள்ளும் மனநிலைக்கு வந்து விடுகிறான்…. சாதாரணமாக, நீ ஒரு கருத்தை எடுத்துச் சொன்னால், எதிரில் இருப்பவர், பொறுமையாகக் கேட்பார்களா….
மேகலா : எங்க கிருஷ்ணா…. ’மைக்கை முழுங்கியவள் பேச வந்துட்டாளா’ என்பது மாதிரி தான் பார்ப்பாங்க… இல்லாட்டா, நான் பேச ஆரம்பிச்சதும், தூங்க ஆரம்பிச்சிருவாங்க கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ஓ…! இப்படியெல்லாம் கூட நடக்குதா… நீ என்னமோ…, கதை சொன்னேன்…. அப்படி இப்படின்னயே… இது எல்லாமே கதைதானா…. சரி…., உன் கதை இருக்கட்டும்… ஆளுமை மிக்கவர்கள் தகவலைச் சொல்லும் போது…, கேட்பவர்கள் உன்னிப்பாக கேட்கிறார்கள்…. இவர் சொல்லுவதுதான் நியாயம் என்று நம்புகிறார்கள்… ஆளுமை…, ஒரு கூட்டத்தையே, தன் பக்கம் இழுக்க வல்லது… அது நியாயம்…, நேர்மை…, தைரியம்.., என்று நிமிர்ந்து நிற்கும் போது, ஆளுமையாளர்களிடம், மக்கள் தங்கள் நம்பிக்கையை மட்டுமல்ல, எதிர்பார்ப்பையும் சேர்த்துக் கொடுத்து விடுகிறார்கள்… அவரால் எதுவும் சாதிக்க முடியும் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள்… ஒன்றைத் தெரிந்து கொள் மேகலா… இந்த ஆளுமையாளர்கள் எல்லோரும்…, தன்னுடைய கடமையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் போது…, அவர்கள் எல்லோரும் போற்றும் தலைவராகிறார்கள்….
(தொடரும்)
Comments
Post a Comment