Posts

Showing posts from December, 2025

பேச்சுத்தமிழ் - பாகம் 3

கிருஷ்ணர்   : வாவ்! இவ்வளவுதான் பாடலா… ‘திருக்குறள்’ மாதிரி சின்னப் பாட்டு… கண்ணு முன்னே துள்ளிக் குதிக்கும் கன்னுக்குட்டியும், குட்டியை நக்கிக் கொடுக்கும் பசுமாடும், எவ்வளவு அழகாக கண்ணு முன்னே flash ஆகுது… ஆஹா…,   இது பசுஞ்சாணத்தை விட தூய்மையானது…. மாட்டுத் தொழுவத்தை விட அழகாக இருக்கு மேகலா…. மேகலா  : மாடு மேய்க்கும் கண்ணனுக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும் கிருஷ்ணா… இன்னும் ஒண்ணு…  நாட்டுப்புறப் பாடல்கள்…, பேச்சுத் தமிழில், அதுவும் வட்டார வழக்குகளில் பேசப்படும் அழகான தமிழ் இலக்கியங்கள் தானே கிருஷ்ணா…  நாட்டுப் புறப் பாடல்களில், ராமாயணம், மகாபாரதம் கூட பாடப் பட்டிருக்கிறது கிருஷ்ணா… அந்தக் காலங்களில் தெருக்கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு, இவை மூலமாக பாடப்படும் பாடல்கள் அநேகமாக பேச்சுத்தமிழாகத்தான் இருக்கும் கிருஷ்ணா… அதிலும், வில்லுப்பாட்டு…, ஒருவர் கதையையோ, சம்பவத்தையோ விளக்கிச் சொல்லுவார். பின்னாடி ஒருவர் ஒத்து ஊதுவது மாதிரி…, ஆமாம்…, ஆஹா…, என்று சொல்லுவார். விளக்கிய பின்பு, அதையே எல்லோருமாக, வில்லின் இசையோடு சேர்ந்து பாட்டாகப் பாடுவ...

பேச்சுத்தமிழ் - பாகம் 2

மேகலா  : அப்படித்தான் போல கிருஷ்ணா…. இந்தப் பழமொழி மாதிரி பேச்சுவழக்குப் பழமொழி நிறைய இருக்கு கிருஷ்ணா… அதை விட இன்னும் ஒரு ஆச்சர்யமான விஷயம் இருக்கு கிருஷ்ணா… நீ கேட்டா அசந்து போயிருவ கிருஷ்ணா… கிருஷ்ணர்  : என்னது…, அசந்து போற அளவுக்கு… பேச்சுத் தமிழில் அப்படி என்ன இலக்கியம் புதைந்து போயிருக்கு…. மேகலா  : நாட்டுப் பாடல்கள் கிருஷ்ணா… இந்த நாட்டுப் பாடல்கள் எல்லாம், யாரோ ஒருவர் தன்னை மறந்து இட்டுக்கட்டிப் பாடியதுதானே… அப்படி ஒரு கிராமவாசி…, தன்னுடைய தேசபக்தியை எப்படி…, அதிலும் நக்கலாக வெளிப்படுத்துகிறார் பார் கிருஷ்ணா… 18-ம், 19-ம் நூற்றாண்டுகளில், கிராமப் பகுதிகளில் மக்களிடையே, ஆங்கிலேயர்களுக்கு எதிரான புரட்சிகரமான எதிர்ப்பு அவ்வளவாகக் கிடையாது என்றுதானே நினைத்தார்கள்… இந்தப் பாட்டைக் கேள்… ‘ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் மட்டும் வெள்ளரிக்கா காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளத்துரை’ என்ற இந்த நாடோடிப் பாடலைக் கேட்டாயா கிருஷ்ணா… கிருஷ்ணர்  : யாரு வீட்டுத் தோட்டத்துல விளைஞ்ச வெள்ளரிக்காய்க்கு, யாரு bill போடுறது… இது யாரு எழுதியது மேகலா…, சரியான நக்க...

பேச்சுத்தமிழ்

மேகலா   : கிருஷ்ணா…, நான் வந்துட்டேன்… எங்க இருக்கிற கிருஷ்ணா…. கிருஷ்ணர்  : யப்பா…, என்ன சத்தம்… இத்தனை நாளா ஆளையே காணோம்… எங்கோ தலைமறைவாகிட்டயோ…, அப்படீன்னு கூட பயந்துட்டேன்… மேகலா  : நான் ஏன் தலைமறைவாகணும்… யாரையாவது கஷ்டப்படுத்தியிருக்கிறேனா.. தப்புத் தண்டா பண்ணியிருக்கேனா… என் உலகம்…, என் கடவுள்…, என் தர்மம், நியாயம் என்று சூசுவான்னு இருக்கேன்… என்னைப் போயி, தலைமறைவாகியிருப்பேனோ என்று எப்படி நினைத்தாய்… கிருஷ்ணர்  : அது என்ன புது வார்த்தை…, ‘சூசுவான்னு’… மேகலா  : அதுவா…, ‘சிவசிவான்னு’ சொல்வோமில்ல…, அதுதான்…. மருவி, பேச்சுவழக்குல ‘சூசுவான்னு’ வந்திருக்கு… கிருஷ்ணர் :  Oh! இது நல்லா இருக்கே… பேச்சு வழக்குல உள்ள வார்த்தைகளையே எடுத்துப் பேசலாம் போலயே… மேகலா  : பேசலாம் கிருஷ்ணா… ஆனா, அதுக்கு ‘topic’ என்ன சொல்லுவ… கிருஷ்ணர்  : ‘பத்திரமா’…, ‘சூதானமா’… இப்படி வச்சுக்கலாமா…. மேகலா  : Great கிருஷ்ணா…. நான் கூட என்ன தலைப்புல பேசலாம்னு ரொம்ப தவிச்சிக்கிட்டு இருந்தேன்… எனக்கு பிடிச்ச மாதிரி topic-ஐயே குடுத்திட்ட கிருஷ்ணா… கிருஷ்ணர்  :  பேச்...