வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 4
மேகலா : முழுவதுமாக இருள் சூழும் நேரம் வந்ததும்…, காத்திருந்த மின் விளக்குகள் பளிச்சென்று வெளிச்சத்தை வாரியிறைத்தது…. இந்த சமயத்தில், ஒண்ணே ஒண்ணுதான் எனக்குப் பிடிக்கவில்லை கிருஷ்ணா…. கிருஷ்ணர் : ஹேங்…. இத்தனை உணர்வுபூர்வமாக சொல்லுற… என்ன பிடிக்கல…. மேகலா : இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் கிருஷ்ணா… ‘போவதும், வருவதுமாக’…, அது மட்டும் தான் பிடிக்கவில்லை…. கிருஷ்ணர் : அதுவா… உன்னைப் போல நடக்க முடியாதவர்கள்… taxi மாதிரி bike-ல் செல்வார்கள்… மேகலா : அது எங்களுக்கு அன்று தெரியவில்லை கிருஷ்ணா… ‘ஜானகி ஜூலா’ல செல்லும் போது தான் தெரிந்து கொண்டோம்…. ஆனால், நாங்கள் நடக்கத்தான் செய்தோம் கிருஷ்ணா… மெள்ள மெள்ள நடந்து, இக்கரையின் சமவெளிக்கு வந்து விட்டோம் கிருஷ்ணா…. இரவு நேரம் கூட, மின்னொளியில் கங்கை வனமோகினியாக ஓடி வருவதைப் பார்க்க பரவசமாக இருந்தது கிருஷ்ணா… அதே சிலிர்ப்புடன், இன்று இவ்வளவு போதும் என்ற அளவில், room-க்குத் திரும்பலாம் என்ற போதுதான், வயிற்றில் ‘நம நம’ என்று ஏதோ செய்தது… கிருஷ்ணர் : என்ன…, பசியா…. மேகலா : எல...