Posts

Showing posts from July, 2026

கதை கதையாம் காரணமாம் - பாகம் 12

கிருஷ்ணர் : அப்போ…, நீ…, அடுத்து ‘உத்தங்கர்’ கதையைச் சொல்லப் போகிறாய்…, right…? மேகலா : Yes, Krishna… கிருஷ்ணா…, உத்தங்கர், தன் வாழ்நாள் முழுவதும் தவம் செய்து, தன்னை தூய்மைப்படுத்தியவர். எல்லோரும் நல்லா இருக்கணும் என்று விரும்புபவர்… உத்தங்கர், பாலைவனப் பகுதிகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது, அந்த வழியாக ஸ்ரீகிருஷ்ணர், அஸ்தினாபுரத்தில் தருமனுக்கு பட்டாபிஷேகம் செய்து முடித்து விட்டு, துவாரகை திரும்பிக் கொண்டிருந்தார்… உத்தங்கர், ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து விட்டார். மனமகிழ்வுடன், கிருஷ்ணா! என்றழைத்து, ’உன்னைப் பார்த்து எத்தனை நாளாயிற்று’ என்று குசலம் விசாரித்து, நலம் விசாரித்தார். ‘கிருஷ்ணா…, உன்னுடைய நட்பால் பாண்டவர்களும், கௌரவர்களும் தங்களுடைய பகையை மறந்து, அஸ்தினாபுரத்தை சிறப்புடன் ஆண்டு வருகிறார்கள் என்று நம்புகிறேன். பீஷ்மர் நலமாக இருக்கிறாரா? திருதராஷ்டிரன் சந்தோஷமாக இருக்கிறாரா? துரியோதனன் நலமா? என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டார்… குருக்ஷேத்திரத்தில் போர் நடந்தது உலகமே அறியும்… உத்தங்கருக்குத் தெரியலயா…, என்று ஆச்சரியத்துடன் பார்த்த ஸ்ரீகிருஷ்ணர், ‘என்ன உத்தங்கரே,...