வாழ்க்கையில் ஒருமுறையாவது... - பகுதி 4

மேகலா : முழுவதுமாக இருள் சூழும் நேரம் வந்ததும்…, காத்திருந்த மின் விளக்குகள் பளிச்சென்று வெளிச்சத்தை வாரியிறைத்தது…. இந்த சமயத்தில், ஒண்ணே ஒண்ணுதான் எனக்குப் பிடிக்கவில்லை கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஹேங்…. இத்தனை உணர்வுபூர்வமாக சொல்லுற… என்ன பிடிக்கல….

மேகலா : இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் கிருஷ்ணா… ‘போவதும், வருவதுமாக’…, அது மட்டும் தான் பிடிக்கவில்லை….

கிருஷ்ணர் : அதுவா… உன்னைப் போல நடக்க முடியாதவர்கள்… taxi மாதிரி bike-ல் செல்வார்கள்…

மேகலா : அது எங்களுக்கு அன்று தெரியவில்லை கிருஷ்ணா… ‘ஜானகி ஜூலா’ல செல்லும் போது தான் தெரிந்து கொண்டோம்…. ஆனால், நாங்கள் நடக்கத்தான் செய்தோம் கிருஷ்ணா… மெள்ள மெள்ள நடந்து, இக்கரையின் சமவெளிக்கு வந்து விட்டோம் கிருஷ்ணா…. இரவு நேரம் கூட, மின்னொளியில் கங்கை வனமோகினியாக ஓடி வருவதைப் பார்க்க பரவசமாக இருந்தது கிருஷ்ணா… அதே சிலிர்ப்புடன், இன்று இவ்வளவு போதும் என்ற அளவில், room-க்குத் திரும்பலாம் என்ற போதுதான், வயிற்றில் ‘நம நம’ என்று ஏதோ செய்தது…

கிருஷ்ணர் : என்ன…, பசியா….

மேகலா : எல்லோருக்கும் ‘பசி’ எட்டிப் பார்க்கவும், ஹரி, வழியில் சுடச் சுட வேர்க்கடலை வாங்கினான். அந்த நேரத்தில் அதிக சுவையாகத் தெரிந்த வேர்க்கடலையைக் கொறித்துக் கொண்டே, car-ல் ஏறி, ‘hotel’-க்குப் போகலாம், இன்று நாம் அங்கேயே dinner சாப்பிடலாம்’ என்று ஹரி சொன்னதும், hotel-க்குத் திரும்பினோம். வழியில், நிறைய கடைகள் roti, பன்னீர் என்று இருந்தாலும்…, சுவை எப்படி இருக்குமோ என்று ஹரி யோசித்தான் கிருஷ்ணா….. உனக்கு ஒண்ணு தெரியுமா…., ‘ஹரித்துவார்’, ‘ரிஷிகேஷ்’ இரண்டு நகரங்களிலும் ‘லிக்கர்’ கிடையாது, சிகரெட் கிடையாது…, non-veg கிடையாது…

கிருஷ்ணர் : ஐயோ…., தெய்வமே…. நீ என்ன சாப்பிட்ட……

மேகலா : ஏன் கிருஷ்ணா…., நான் நாள்தோறும், மூன்று வேளையும் N. V. சாப்பிடும் ஆளா.. அதுவும், புனித பூமிக்கு வந்து திரும்பும் வரையில் non veg சாப்பிடுவதில்லை என்று விரதம் எடுத்து வந்திருக்கிறேன்… என்னைப் போல இங்கு வருபவர்களும், இந்தப் பூமியின் புனிதம் கருதி, non veg சாப்பிட வேண்டாம் என்று மக்களே முடிவெடுத்து தவிர்த்து இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறேன்….

கிருஷ்ணர் : நான்…. ச்சும்மா…, உன்னைக் கலாய்ச்சேன்….

மேகலா : அன்று எங்களுடைய முதல் நாள் பயணம் சிலிர்ப்போடும், அதிசய அனுபவத்தோடும், வட இந்திய உணவோடும் நிறைவு பெற்றது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன…., இத்தோடு முடிச்சிட்ட…. serial பார்க்கலியா… பார்க்கணுமே…..

மேகலா : கிருஷ்ணா…., T. V -யில் எல்லா சேனலும் இருக்க, சன் T. V. மட்டும் எடுக்கல கிருஷ்ணா…. அதனால், அப்படியே சுவையான அனுபவத்தை rewind பண்ணிப் பார்த்து, அலுப்பில் படுத்து விட்டேன்…

கிருஷ்ணர் : Oh….! நன்றாக rest எடுத்தீர்களா… எனக்கு.., எப்பவுமே…, நீ எங்காவது tour சென்று வந்து பேசினாயானால்…, ஒவ்வொரு சம்பவத்தையும்…, நீ ரசித்ததையும்…, துளித்துளியாய் சொல்லும் விதத்தை உற்றுக் கேட்பேன்… தமிழில் இருக்கும் அழகான வார்த்தைகளைப் போட்டு நீ சொல்லுவதை ரசித்துக் கேட்பேன். ஆனால், இந்த முறை…, நீ உணர்ச்சி வசப்பட்டு சொல்லுவதைக் கேட்கும் போது…, ரிஷிகேஷ், ஹரித்துவாரின் புனிதத்தன்மையின் அற்புதத்தை நீ எப்படி அனுபவித்தாய் என்பது புரிகிறது மேகலா… சரி…., இரண்டாம் நாள் எங்கு சென்றீர்கள்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1