Posts

Showing posts from June, 2026

கதை கதையாம் காரணமாம் - பாகம் 11

கிருஷ்ணர் : விசுவாமித்திரரின் கதையில் இருந்து நீ என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறாய்? மேகலா : கிருஷ்ணா…, புனிதமான வேதங்களை உச்சரிக்கும் முனிவர்களைக் கண்டு, ஒரு மன்னனுக்கு பக்தியும், பணிவும் வருமென்றுதான் நாம் படித்திருக்கிறோம். தெய்வீக தேஜஸுடன் விளங்கும் வசிஷ்டரைப் பார்த்து, கௌசிக மன்னனுக்கு பொறாமை வருவதாகக் கூறப்பட்டிருக்கிறதே…. இது எப்படி கிருஷ்ணா…. கிருஷ்ணர் : இது…, பொறாமை என்று சொல்ல முடியாது… கேட்பதையெல்லாம் கொடுக்கும் காமதேனுப்பசு…, ஒரு சன்யாசிக்கு எதற்கு? நம் நாட்டிற்கு அழைத்துச் சென்றால், நாட்டு மக்களுக்கு பசுவிடமிருந்தே கேட்டுப் பெற்றுக் கொடுக்கலாமே…, என்று யோசிக்கிறான். எந்த மதிப்பு வாய்ந்த பொருட்களும்…, அரசனுக்குத்தான் சொந்தம் என்ற கர்வத்தினாலும்…, ‘முனிவர்’தானே…, அவரிடம் என்ன பலம் இருக்க முடியும் என்ற அலட்சியத்தினாலும் வந்த விளைவு…. என்ன இருந்தாலும்…., அவன் ஒரு நாட்டின் மன்னன் தானே… அவனுக்கு மஹரிஷிகளின் ‘வலிமை’ பற்றித் தெரியாது… சாபம் கொடுத்து விடுவாரோ என்ற பயமாவது இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் மீறி…, தன் பலத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை…. மேகலா : கிருஷ்ணா…., ஒரு மன்னன...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 10

மேகலா : அவ்வளவுதான்…. நந்தினி, வலிமையாக நிமிர்ந்து நின்று உறுமியது. ஆயிரக்கணக்கான படை வீரர்களை ஆயுதங்களுடன் உற்பத்தி செய்தது… அந்த வீரர்கள், மன்னனுடனும், அவர் பரிவாரங்களுடனும் போர் செய்யத் தொடங்கினர்…. மன்னனுக்கு எதுவும் தெரியாமல் திகைத்துப் போனான்… பசுவோ, அத்தனை பேரையும் காட்டை விட்டே விரட்டியடித்தது…. அவமானம் தாங்காத கௌசிக மன்னன், இந்த நிகழ்ச்சியை மறக்க முடியாமல், வசிஷ்டரை வென்றே தீருவது…, ’ஒரு காட்டில் வசிக்கும் சன்னியாசிக்கு இத்தனை உறுதியா… வசிஷ்டரும் தவம் செய்து பெற்றதுதான் இந்த வலிமையா… இதை எப்படி முறியடிப்பது…. நாமும் காட்டிற்குச் சென்று தவமிருந்து கடவுளிடம் வரம் பெறுவோம்… அப்புறம் ஒரு கை பார்க்கலாம்…, இந்த வசிஷ்டரை…’ என்று முடிவு செய்து, தன் நாட்டை பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து விட்டு, காட்டிற்குச் சென்று தவம் செய்யப் புறப்பட்டார்…. மன்னன், தன் மனதை ஒருமுகப்படுத்தி, பரம்பொருள் பரமசிவனாரை நினைத்து கடுமையான தவம் மேற்கொண்டார்…. மன்னனுடைய தவத்தால் மனம் மகிழ்ந்த பரமசிவனாரும், மன்னனிடம், ‘கௌசிகா, உன் தவத்தால் மனம் மகிழ்ந்தோம்… நீ வேண்டும் வரம் கேள்’ என்று கேட்டார். மன்னனும், ‘இறைவா, ...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 9

  கிருஷ்ணர் : சரி…., அடுத்த கதை….? மேகலா : ‘பிரம்ம ரிஷி’ என்றால் என்ன கிருஷ்ணா….? ஏதாவது பதவியா கிருஷ்ணா….? கிருஷ்ணர் : யார் சொன்னது? ஒருவர்…, தன் முயற்சியினாலும், தவத்தாலும், தன் மனதை ஒருமுகப்படுத்தி, புலன்களை அடக்கி…, உணவு, உடை, உறவு என்ற எந்த ஆசையும் இல்லாமல், இறைவனின் நாமத்தை ஜெபித்துக் கொண்டு, தன் குணங்களை மென்மையாக்கி…, எல்லா மக்களையும், உயிர்களையும் ஒரே சமமாகப் பாவித்து, பிறர் நன்மையையே, தன் கருத்தாகக் கொண்டு, தன் வாழ்க்கையை பிறருக்காகவே வாழ்வது…, என்று தன்னை உயர்ந்த தகுதியுடையவராக்கியவர்தான் ‘பிரம்ம ரிஷி’… உலகப் பற்றைத் துறந்த மகரிஷி, மூன்று காலங்களையும் அறிந்தவர்கள் ஆவார்கள். தெய்வ குணங்கள் நிறைந்த இவர்கள் நினைத்தாலே போதும், கடவுள் இறங்கி வருவார்… ஆமாம்…, ஏன் இந்தக் கேள்வி…? விசுவாமித்திரர் கதையைச் சொல்லப் போகிறாயா….? மேகலா : ஆமாம் கிருஷ்ணா…. விசுவாமித்திரர், பிரம்ம ரிஷி ஆன கதையைச் சொல்லப் போகிறேன் கிருஷ்ணா…. கிருஷ்ணர் : Very good… சொல்…, கேட்க ஆவலாக இருக்கிறேன்…. மேகலா : கௌசிக நாட்டின் மன்னன், ‘கௌசிகன்’… தன் நாட்டை நீதிநெறி தவறாமல் ஆண்டு வந்தான்… ஒரு முறை…, மன்னன் த...

கதை கதையாம் காரணமாம் - பாகம் 8

மேகலா : கிருஷ்ணா…, மனிதன் பிறந்த நாளிலிருந்து, above the power ஆகத்தான் கடவுளைப் பார்ப்பதாக நான் நினைக்கிறேன். இந்தக் கதையில், பஸ்மாசுரன், ‘கடவுள்’ என்பதை ஒரு பதவியாகப் பார்க்கிறான்… எப்படி அவனால் இப்படி பார்க்க முடிகிறது… கிருஷ்ணர் : நீ வேற…, இப்போ…, இங்க உங்களில் நிறையப் பேர்…, ஏன் 95% மக்கள், கடவுளை வியாபாரியாகப் பார்க்கவில்லையா… அவர்கள் தெரிந்தா பேசுகிறார்கள்… முழுக்க முழுக்க கடவுளிடம், ‘நாம் கேட்டால் கொடுப்பார்…, பதிலுக்கு நாம கடவுளுக்கு ஏதாவது கொடுத்திரலாம்’ என்றுதானே நினைக்கிறார்கள்… அந்த ரகம் தான் பஸ்மாசுரனும்… இங்கு இருப்பவர்கள் நினைக்கவில்லையா… கொஞ்சம் அசந்தால், கடவுளையே உண்டு இல்லை என்று பார்ப்பதில்லையா… கடவுளிடம் challenge விடுவதென்றால், மனுஷர்களுக்கு ரொம்ப பிடிக்கும். எப்போ கடவுள் ’அசருவார்’ என்று காத்திருப்பார்கள்…. கடவுளின் பதவியை காலி பண்ண நினைத்த பஸ்மாசுரனின் ‘mind voice’, அவனுக்கே கேட்குமோ என்னவோ தெரியாது… கடவுளுக்கு துல்லியமாகக் கேட்டு விடும்… அவன் பாட்டுக்கு அடுத்தடுத்த வேலைகளில் இறங்க வேண்டியதுதான். ஆனால் கடவுளோ, ஆரம்பம் முதலே வலையை விரிக்கத் தயாராகி விடுவார். அத...