வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 1
கிருஷ்ணர் : என்ன மேகலா....? ஒரு வாரம் ஆயிருச்சி.... வள்ளுவர் சிலையை சேதப்படுத்துகிறார்கள்.., உன்னைக் காணோம்....! வள்ளுவர் படத்துக்கு ‘காவி’ dress போட்டு, ருத்ராட்சம் அணிவித்து வேடிக்கை பார்க்கிறார்கள்: உன்னை ஆளையே காணோம். தாய்லாந்தில், உன் மனம் கவர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறள் புத்தகத்தை வெளியிடுகிறார். ‘ கிருஷ்ணா....கிருஷ்ணா.... என்று திரும்பத் திரும்ப சொல்லிச் சொல்லிக் கூத்தாடுவியே...., எங்கு சென்றாய்....? மேகலா : என்ன கிருஷ்ணா.....? ரொம்ப கோபமா இருக்கிறியா....? கிருஷ்ணர் : நாட்டுல என்னவெல்லாமோ நடக்குது... இதெல்லாம் பத்தாது என்று...., நம்ம திருவள்ளுவரையும் பந்தாடத் துணிஞ்சிட்டாங்களே என்று நானே கடுப்புல இருக்கேன்....., சரி, இதன் விவரங்கள் என்னண்ணு நீ சொல்லுவியே என்று பார்த்தால், உன்னை ஆளையே காணோம்.... மேகலா : திருவள்ளுவர் என்ன எழுதியிருக்காரு, குறளின் மேன்மை என்ன என்று தெரியாதவர்கள் எல்லாம், ‘வள்ளுவருக்கு விபூதி பூசி சாமியாராக ஆக்குறாங்க’ என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறாங்க, கிருஷ்ணா.... இதன் உச்சக் கட்டம் என்ன தெரியுமா, கிருஷ்ணா? B. J. P - யின் official twitter