வயசானாலும், சின்னச் சின்ன ஆசைகள், நம்மைச் சிறகடிக்க வைக்கும் - பகுதி 1

கிருஷ்ணர் : என்ன மேகலா....? ஒரு வாரம் ஆயிருச்சி.... வள்ளுவர் சிலையை சேதப்படுத்துகிறார்கள்.., உன்னைக் காணோம்....! வள்ளுவர் படத்துக்கு ‘காவி’ dress போட்டு, ருத்ராட்சம் அணிவித்து வேடிக்கை பார்க்கிறார்கள்: உன்னை ஆளையே காணோம். தாய்லாந்தில், உன் மனம் கவர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, திருக்குறள் புத்தகத்தை வெளியிடுகிறார். ‘கிருஷ்ணா....கிருஷ்ணா.... என்று திரும்பத் திரும்ப சொல்லிச் சொல்லிக் கூத்தாடுவியே...., எங்கு சென்றாய்....?

மேகலா : என்ன கிருஷ்ணா.....? ரொம்ப கோபமா இருக்கிறியா....?

கிருஷ்ணர் : நாட்டுல என்னவெல்லாமோ நடக்குது... இதெல்லாம் பத்தாது என்று...., நம்ம திருவள்ளுவரையும் பந்தாடத் துணிஞ்சிட்டாங்களே என்று நானே கடுப்புல இருக்கேன்....., சரி, இதன் விவரங்கள் என்னண்ணு நீ சொல்லுவியே என்று பார்த்தால், உன்னை ஆளையே காணோம்....

மேகலா : திருவள்ளுவர் என்ன எழுதியிருக்காரு, குறளின் மேன்மை என்ன என்று தெரியாதவர்கள் எல்லாம், ‘வள்ளுவருக்கு விபூதி பூசி சாமியாராக ஆக்குறாங்க’ என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறாங்க, கிருஷ்ணா.... இதன் உச்சக் கட்டம் என்ன தெரியுமா, கிருஷ்ணா? B. J. P - யின் official twitter handle-ல்,
‘யாகாவாராயினும், நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு’ - என்ற இந்தத் திருக்குறளை, தப்பு இல்லாமல் ஒரு முறை வாசித்துக் காண்பித்து விடு, பார்ப்போம்’ என்று சவால் விட்டிருந்தார்கள், கிருஷ்ணா..... அந்த நேரத்தில்தான், நமது பிரதமர் தாய்லாந்தில், அவர்கள் மொழியில் (’தாய் மொழி’) மொழி பெயர்க்கப்பட்ட நமது திருக்குறளை வெளியிடுகிறார். நம்ம ஆளுங்க, இதப்பத்தி மூச்சு விடக் காணோம்; வெட்கக்கேடு..... ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம், ஒன்று புரிகிறது, கிருஷ்ணா! தமிழ்நாடாகட்டும், காஷ்மீராகட்டும்...., இனி இந்த ‘ஜிகினா’ அரசியலெல்லாம் பண்ண முடியாது.... ‘தமிழு’..... ‘வள்ளுவர்’ என்று வாய்வார்த்தையால் பேசும் அரசியல் இங்கு செல்லுபடியாகாது.

கிருஷ்ணர் : சரி, அவங்க எப்படியோ போகட்டும்..... இன்று என்ன topic-ல் பேசலாம்....?

மேகலா : நீயே தலைப்பு குடு, கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : என்ன மேகலா.... இன்று என்ன விசேஷம்....? உன் தலை ‘திருக்கோஷ்டியூரில்’ தெரிந்ததே..... பிள்ளையார்பட்டி வந்திருந்தாயா? என்ன விஷயமாய் வந்திருந்தாய்.....?

மேகலா : கொஞ்சம் யோசிச்சுச் சொல், கிருஷ்ணா.....

கிருஷ்ணர் : ம்.....ம்..... calendar வாங்கியிருக்கிறாய்..... November மாசம்....ம்.... புதுச் சேல..... ஆர்த்தி சாப்பாடு...... Now I got it....... Happy anniversary, Mekala.... எத்தனாவது வருஷம்....?

மேகலா : நாற்பத்தி..... அஞ்சு.....

கிருஷ்ணர் : ஏ.....யப்பா..... திருக்கோஷ்டியூரில் உன்னைப் பார்த்ததுமே, புரிஞ்சி போச்சி.... அம்மையார்...... கல்யாண நாளைக் கொண்டாடுகிறாள் என்று..... Anyhow, வாழ்த்துக்கள், மேகலா.....

மேகலா : திருக்கோஷ்டியூரில் (சௌம்ய நாராயணப் பெருமாள் கோவில்) cleaning வேலை நடந்து கொண்டிருந்தது கிருஷ்ணா.... அது ஒரு பக்கம் நடந்தாலும், நாங்கள் முதலில், தங்கக் கண்கள் மலர்ந்து சிரிக்கும் கம்பீரமான அன்னை திருமாமகளைத்தான் தரிசனம் செய்தோம், கிருஷ்ணா..... அன்னையைப் பார்த்த அந்தக் கணத்தில், இந்த உலகமே சுருங்கி என் உள்ளங்கைக்குள் சுருண்டு விட்டதாய் உணர்ந்தேன். கழுத்தில் தொங்கிய திருமாங்கல்யம், என்னை இழுத்து, தன் கழுத்தோடு என்னைச் சேர்த்துக் கொண்டது. இந்த நாளுக்கு இந்த சந்தோஷம் போதும் என்று மனம் நிறைந்தது. அம்மாவின் கண்காணிப்பில் இருந்த படிக்கட்டு அழைத்துச் சென்ற இடம் நோக்கி ஏறினேன். மாடிப்படி ஏற ஏற, ஒரு புது உலகத்தின் வெளிச்சம், சொர்க்கம் இதுதான் என்று காட்டியது, கிருஷ்ணா! அந்த உணர்வை நான் எப்படிச் சொல்வேன்! மலர்ந்த விழிகள் வான் நோக்கிப் பார்க்க, பரந்த மார்பு, இந்த உலகத்தையே தாங்கும் கம்பீரத்தில் விரிந்து கிடக்க, ஸ்ரீ தேவியும் பூமாதேவியும் பாதத்தின் அருகில் அமர்ந்திருக்க, வெள்ளை வேட்டி இத்தனை வெளிச்சம் கொடுக்குமா....? புரியாத சந்தோஷத்தில், நான் திகைத்துப் போக...., கிருஷ்ணா...., அந்த அற்புதக் கணங்களில் கிடந்த பெருமாளைப் பார்த்த என் தேகமெல்லாம் சிலிர்த்துப் பூரித்துப் போனது. கண் நிறைந்த அழகை என் மனசெல்லாம் நிறைத்துக் கொண்டேன். என் தலையில் ‘சடாரி’ வைத்தார்கள். இறைவன் திருவடி தீண்டியதாய் குழைந்து போனேன். நெருக்கியடிக்கும் கூட்டமில்லை! அலுப்பாய் ஆரத்தி எடுக்கும் பூசாரி இல்லை! அமைதி இல்லாத பரபரப்பும் இல்லை! பக்திமணம் இதமாய்ப் பரவ, இசைவான நேரம். பெருமாளை என் மனசு பூராவும் நிறைத்துக் கொண்டு, அங்கிருந்து திரும்பினேன்.
கிருஷ்ணர் : கீழே யாரோ ஒருவர் உன்னிடம் குசலம் விசாரித்தார்களே; உனக்குத் தெரிந்தவர்களா....?
மேகலா : பார்த்துட்டியா....! ஹி....ஹி.... கோயில் வாசலில், படிக்கட்டு தாண்டி நான் வெளியேறும் நேரம், நல்ல இதமான அழகில், நிறைந்த மனசாய் ஒரு பெண், சிரித்துக் கொண்டே உள்ளே வருவதைப் பார்த்தேன். அவர் சிரித்த சிரிப்பு, என்னையும் தொற்றிக் கொண்டது. காரணமில்லாமல் சிரித்தோமோ என்று நினைத்துக் கொண்டே, அவரைக் கடக்கப் போனேன். இதமாய் என் கையைப் பற்றிக் கொண்டு, ‘உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன்; T. V-யில் வருவீர்களா....?” என்று கேட்டவுடன், எனக்குப் புரிஞ்சி போச்சி. ‘நீங்க YouTube பார்ப்பீர்களா’ என்று கேட்டு, நான் ’சிவகாசி சமையல்’.... என்று சொல்ல ஆரம்பித்தவுடனேயே, ‘ஆமாம்...., நீங்கள் YouTube-ல் வருபவர் தானே..... உங்களை நிறைய பார்த்திருக்கிறேன். நான் தினமும் உங்கள் சமையல் video-வைப் பார்ப்பேன்’ என்று கூறிவிட்டு, ‘சந்தோஷம்மா...., உங்களைப் பார்த்தது’ என்று சொன்னாரா......; மேலே அமர்ந்திருக்கும் திருமாமகள் எனக்கு வாழ்த்துச் சொல்லியதாய் மனம் மகிழ்ந்தேன், கிருஷ்ணா!

கிருஷ்ணர் : ஏன்....? நான் வாழ்த்துச் சொல்லியதாய் நினைக்க மாட்டாயாக்கும்?

மேகலா : நீதான்..., அந்தத் திருமகளை நெஞ்சிலேயே சுமந்து கொண்டிருக்கிறாயே..... அப்படீன்னா...., நீயும் சொன்னதாகத்தானே அர்த்தம்....

கிருஷ்ணர் : என்னவோ...., போ. பேசத் தெரிந்தவள்.....

மேகலா : இல்லை கிருஷ்ணா.... உன் மீது பாசம் கொண்டவள்......

கிருஷ்ணர் : வள வளன்னு பேசாத....., அடுத்து அப்படியே பிள்ளையார்பட்டி சென்றாயா....? ஏன் மேகலா..., நீ வந்த நேரம் காலை 10.45; அப்படியே பட்டமங்கலம் சென்று, இறைவனைத் தரிசித்திருக்கலாமே....

மேகலா : ஊருக்குத் திரும்பும் போது, நானும் இதைப் பற்றி யோசித்தேன் கிருஷ்ணா. ஒவ்வொரு முறையும், நடை சாத்திருமோ என்ற பதை பதைப்போடு திருக்கோஷ்டியூர் தரிசனம் முடிந்து, பிள்ளையார்பட்டிக்கு ஓடுவேன். இந்த முறை சீக்கிரம் கிளம்பி, சீக்கிரம் தரிசனம் பண்ணினாலும், பழக்க தோஷத்தால், பட்டமங்கலம் போக நினைக்கவில்லை. அடுத்த தடவை, பிள்ளயார்பட்டி program போடும் போது, பட்டமங்கலம் தரிசனத்தையும் உத்தேசித்து கிளம்புவதாக முடிவெடுத்திருக்கிறேன், கிருஷ்ணா. அதற்கு நீதான் அருள் புரிய வேண்டும், கிருஷ்ணா....

கிருஷ்ணர் : very good.... Very good.....கோயிலுக்குச் செல்வதற்கு என் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு மேகலா..... சரி, பிள்ளையார்பட்டியில் தரிசனம் எப்படி இருந்தது?

மேகலா : பிள்ளையார்பட்டி தரிசனத்தைப் பற்றிய விவரங்களோடு அடுத்த பகுதியில் சந்திக்கலாம், கிருஷ்ணா.....

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2