ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 76
மேகலா : ‘நாராயணாஸ்திரம்’ ஏவப்படப் போகிற நிலையில் சென்ற பகுதியை நிறைவு செய்திருந்தோம்..... தொடர்வோம்... நாராயணாஸ்திரம் ஏவப்பட்டது மேகலா : துரோணர் கொல்லப்பட்டவுடன், பயந்து யுத்த களத்தை விட்டு ஓடத் தொடங்கிய கௌரவப்படை வீரர்கள், திடீரென்று உற்சாகத்துடன் யுத்த களத்திற்குத் திரும்பிய காட்சியைப் பார்த்த தருமபுத்திரன், திகைத்தான். இந்த வீரர்களுக்கு மறுபடியும் உற்சாகத்தைக் கொடுத்த வீரன் யார் என்று புரியாமல் தவித்தான். ஒரு வேளை, இந்திரனே கோபம் கொண்டு, துரியோதனனுக்கு உதவி செய்ய வந்து விட்டானோ என்ற அச்சத்தில் தவித்தான். அவன் தவிப்பைப் பார்த்து அர்ஜுனன் சொன்னான், 'கௌரவர் தரப்பிற்கு மீண்டும் நம்பிக்கையை உண்டாக்கி இருப்பவர் யார் என்று எனக்குப் புரிகிறது. அந்த மனிதர் மிகப் பெரிய வீரர். தவறு செய்வதில் வெட்கம் கொள்பவர். வீரத்தில் இந்திரனுக்கும், கோபத்தில் எமனுக்கும், அறிவில் பிரஹஸ்பதிக்கும் நிகரானவர். அவர்தான் துரோணரின் மகன் அஸ்வத்தாமா’. இவ்வாறு கூறி, தருமபுத்திரரின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தான், அர்ஜுனன். மேலும் தொடர்ந்த அர்ஜுனன், ‘நிஷ்டையில் அமர்ந்திருந்த துரோணரின் சிகையைப் பிடித்து