ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 98
துரியோதனன், பீமனின் ‘கதை’யால் தொடையில் தாக்கப்பட்டு, பூமியிலிருந்து சிரமப்பட்டு எழுந்து கிருஷ்ணரைப் பார்த்துக் கடுமையாக பேசத் தொடங்கினான் என்று சென்ற பகுதியின் இறுதியில் பார்த்தோம். மேகலா : என்ன பேசப் போகிறானாம் கிருஷ்ணா? இவர்கள் தர்மம் மீறி சண்டை போடும் போது, யாரும் வசனம் பேசவில்லை. இன்று கொல்லப்பட வேண்டிய துரியோதனனைக் கொல்லும் போது மட்டும், பலராமர் சொல்லுவாராம், ‘துரியோதனன் ரொம்ப...... நல்லவனென்று’. துரியோதனனும், முக்கி..... முணங்கி, எந்திரிச்சி, கிருஷ்ணரைப் பார்த்து, கடுமை.......யான வார்த்தைகளால் பேசப் போகிறானாம். என்ன.... நடக்குது.... கிருஷ்ணா, இங்க. பீமனைக் கொல்லுவதற்கு துரியோதனனுக்கு இப்ப வேணா motive இருக்கலாம். சிறு பிராயத்திலிருந்தே, அவனைக் கொல்வதற்காகவே மாமன் சகுனியைக் கூடவே வைத்து, ப்ளா....ன் பண்ணி, சதி பண்ணினானே.... அவன் தர்மம் தெரிந்தவனா.....? தர்மாத்மா என்று பலராமர் கூறுகிறாரே....., என்னால் சகிக்கவே முடியவில்லை. மேலே எழுந்து, ’கதை’யால் தாக்க வந்தவனிடம் அடி வாங்கி, கீழே விழ வேண்டுமா....? தப்பாக அடித்தாலும் தான் என்ன? துரியோதனனைக் கொல்ல வேண்டும். அதுதான் தர்மம். இந்த