வாகனங்கள் பலவிதம் - பகுதி 6
கிருஷ்ணர் : சரி….! இந்த ‘கார்’ – இதைப் ப்ற்றிய உன்னுடைய அனுபவங்களைச் சொல்லு மேகலா….
மேகலா : கிருஷ்ணா! இப்போ….. நம்ம நாட்டுல car கம்பெனிகள் எத்தனை இருக்கு தெரியுமா கிருஷ்ணா! ஒவ்வொரு கம்பெனியும், தன்னுடைய படைப்புகளாக, ஒவ்வொரு வருஷமும் புதுசு, புதுசா நிறைய கார்களை தயாரித்துக் கொண்டே இருக்கின்றன.
கிருஷ்ணர் : என்னென்ன கார் கம்பெனிகள் இருக்கின்றன மேகலா?
மேகலா : மாருதி, TATA, ஹோண்டா, ஹூண்டாய், மஹேந்திரா, SKODA என்று ஏகப்பட்ட கார் கம்பெனிகள் இருக்கின்றன….. இந்த மாருதி கம்பெனியின் car models, 800, Alto, Wagon R, Swift, Desire, Baleno என்று ஒவ்வொரு வருடமும் புதுப்புது வாகனங்களை release பண்றாங்க…. ஒவ்வொன்றும் ஒரு rate…. ஒவ்வொரு rate-க்கும், advanced வசதிகள் என்று சொகுசுகளும் மக்களைக் கவரும் விதமாகத்தான் இருக்கும். எத்தனை வசதிகள் செய்து தரப்பட்டாலும், மக்கள் உட்கார்ந்து செல்வது என்பது, front seat-ல், driver + 1 seat, பின்னாடி 2 seats அவ்வளவுதான் உட்கார முடியும்….. அப்படி உட்காரும்படிக்குத்தான், seats-ம் வடிவமைக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணா…..! 20 லட்ச ரூபாய் கார் என்றாலும், நான்கு பேர் தான் உட்கார முடியும்.
கிருஷ்ணர் : 6 பேர் ஒரு வீட்டில் இருந்தால்….?
மேகலா : Driver + 6 seats car-தான் வாங்கணும் கிருஷ்ணா….. அந்தக் காலத்து Ambassador car-ல நாங்க எங்க வீட்டுப் பட்டாளம் அத்தனை பேரும் travel பண்ணுவோம் கிருஷ்ணா! Seat arrangements-ம் ஒரு ஆளுக்கு 1 seat என்ற மாதிரியெல்லாம் இருக்காது. ‘திவான்’ மாதிரி நீளமாக ’seat’ இருக்கும். உட்காரும் போது, நெருக்கிப் பிடித்து, நான்கு பேர் உட்கார்ந்து விடுவோம். பின்னால் seat-க்கு மேலே இருக்கும் place-ல எல்லாம், நான் படுத்து வந்திருக்கிறேன். அது மாதிரி, கால் வைக்கும் இடத்தில் எல்லாம், சின்னப் புள்ளைகள உட்கார வச்சு…..
கிருஷ்ணர் : கார…., ஒரு லாரி லெவலுக்கு ‘use’ பண்ணி இருக்கீங்க…. ஆமாம்….. இன்றைய cars என்னென்ன range என்று உனக்கு ஏதாவது தெரியுமா….?
மேகலா : ‘Audi’ car, 40 லட்சத்திற்கும் மேலேயாம் கிருஷ்ணா…..! நான் பார்த்தது கூட இல்லை…. 5 seated car-ல…., நான் பார்த்து வியந்து போனது….. Toyota-வின் Innova car தான் கிருஷ்ணா . அது கூட 20 லட்சத்துக்கும் மேலே, கிருஷ்ணா! அந்தக் காலத்தில் Impala என்ற ஒரு கார் இருந்தது. அது வீட்டின் முன்னால் நிற்பதே பெருமையாக நினைக்கும் காலம் இருந்தது. கதை எழுதுபவர்கள், தெருவை அடைத்து, படகு மாதிரி மிதந்து வந்த ‘Impala car’ என்று special ஆக எழுதுவார்கள், கிருஷ்ணா.
இன்னும் ‘சார்லி சாப்ளின்’ படங்களில், சாப்ளின் ஓட்டி வருவது போல ஒரு கார் வரும். காருக்கு horn என்பது வலது கைப்பக்கமாக கையால் அழுத்தி ஒலி எழுப்பும் ஒரு horn இருக்கும். நிறைய பஸ்களில் கூட அந்த மாதிரியான horn இருக்கும் கிருஷ்ணா….. சாப்ளின் கார் ஓட்டி வரும் பொழுது, பின்னாடி புகையாக வரும்…. சாப்ளின் வண்டியை நிப்பாட்டி, engine-ஐ open பண்ணி, அப்படி…., இப்படி என்று பார்ப்பார். Radiator சூடாக இருக்கும். அதன் மூடியைத் திறப்பார்; கை சுட்டுக்கும்….. வண்டி கிளம்பாது. ஒரு ‘rod’ மாதிரி இருப்பதைக் கொண்டு, engine-க்குள் சொருகி, சுத்தி சுத்தி start பண்ணிப் பார்ப்பார். இவையெல்லாம் வசனமே இல்லாமல் பண்ணும் போது, நமக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடும். சாப்ளின் காலத்து car model-கள் எல்லாம் இன்று மியூசியத்தில் தான் இருக்கிறது, கிருஷ்ணா…. இன்னும் இதை 40 அடி, 50 அடிக்கு என்றாவது ஒரு show-வில் ஓட்டத்தான் செய்கிறார்கள் கிருஷ்ணா.
கிருஷ்ணர் : பழைய காலத்து கார், என்னென்ன என்று உனக்குத் தெரியுமா மேகலா…?
மேகலா : எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும் கிருஷ்ணா. ‘Fiat’ என்று ஒரு car இருந்தது கிருஷ்ணா. அந்தக் காலத்தில், self driving-க்காகவே வடிவமைக்கப்பட்டது கிருஷ்ணா…. பின்னாளில் அதன் பெயரை ‘Premier Padmini’ என்று மாற்றி விட்டார்கள். ‘Volks Wagen’ என்று ஒரு car இருந்தது. ‘Standard’ என்று ஒரு car இருந்தது. நான் college-ல் படிக்கும் போது, எங்க அப்பா Jeep ஒன்று வைத்திருந்தார். அது car மாதிரி இருக்காது. Front seat-ம், பின் seat-ம் எதிரும் புதிருமாகவும், இடையில் சாமான்கள் வைக்கவும் இடம் இருக்கும். இந்த Jeep-ஐ ghat section-க்கு ஓட்டிச் செல்ல என்றுதான் வடிவமைத்திருக்கிறார்கள். இப்போ, தனியார் யாரும் இப்படிப்பட்ட Jeep-ஐ உபயோகிப்பதில்லை. ஏனெனில், ‘Police jeep’ மாதிரியே தான் இது இருக்கும். பின் seat-ல் எத்தனை பேர் வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளலாம். எத்தனை சாமான் என்றாலும் ஏற்றிக் கொள்ளலாம் கிருஷ்ணா.
கிருஷ்ணர் : பின் ஏன் இன்று இந்த மாதிரியான Jeep புழக்கத்தில் இல்லை…?
மேகலா : இன்று ‘police’ மட்டுமே இந்த Jeep-ஐ வைத்திருக்கிறார்கள் கிருஷ்ணா…. Police கூட, இப்பல்லாம் travelers வண்டி மாதிரிதான் வச்சிருக்காங்க போல.. அந்தக் காலத்தில், ‘Plymouth’ என்று ஒரு car இருந்தது கிருஷ்ணா…. Impala car மாதிரிதான் இதுவும். இந்தக் காரை வைத்திருப்பதையே கௌரவமாக நினைத்தவர்கள் உண்டு கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : உங்க அப்பா, இந்தக் கார் வைத்திருந்தாரா, மேகலா…?
மேகலா : ‘அம்பாசிடர்’ car என்பது, அந்தக் காலத்து இந்திய ரோடுகளில் ஓடும் வலிமையை உடைய நல்ல brand car கிருஷ்ணா….. Capacity-யும் அதிகம்; எத்தனை பேர் வேண்டுமானாலும் உட்காரலாம். ‘டிக்கி’ capacity பெருசு. அதனால், எங்க அப்பா, ‘அம்பாசிடர்’ தவிர வேறு எதுவும் வாங்க யோசிக்கக் கூட மாட்டார். Self driving-க்காக, Fiat car-ம் வாங்கினார்.
கிருஷ்ணர் : உங்க அப்பாக்கு, உன்னை மாதிரி car driving தெரியுமா மேகலா….?
மேகலா : கிருஷ்ணா…., அவர் தான் original; நான் ‘xerox’ தான். Car ஓட்டுவாரா என்றா கேட்டாய்….? ’சகல கலா வல்லவன்’, கிருஷ்ணா! On the road-ல் driver ஏதாவது தப்புப் பண்ணினால், அல்லது குறுக்க குறுக்க பேசினால், அங்கேயே இறக்கி விட்டு விட்டு, காரைத் தானே எடுத்து வரும் அளவுக்கு car நன்றாக ஓட்டுவார்….
கிருஷ்ணர் : பின் ஏன் driver வைத்திருந்தார்….?
மேகலா : எங்க பட்டாளம் மொத்தம் 9 பேர்…. எங்க ஒவ்வொருவருக்கும் school-க்குப் போக, சினிமா போக என்று கார் வேணுமில்ல…. எங்க அப்பாவோ, busy-யான ஆளு…. எங்க தேவைக்கு கட்டாயம் driver வேணுமில்ல…. அதுக்குதான் driver….
கிருஷ்ணர் : ஓஹ்….ஹோ….!
(மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்…..)
Comments
Post a Comment