வாகனங்கள் பலவிதம் - பகுதி 8
கிருஷ்ணர் : நாங்கள் Niagara Falls இருக்கும் Buffalo நகருக்கு train-ல் சென்ற அனுபவம் பற்றிக் கேட்டாயல்லவா? நாங்கள் train-ல் போன அந்தப் பயணமே ரொம்ப சுவாரஸ்யமானது…… இங்கெல்லாம் train-ல் seat No.-லாம் தருகிறார்கள் அல்லவா…. ஆனால், நாங்கள் சென்ற train-ல் seat No.-லாம் கிடையாது…
மேகலா : Oh! Unreserved-ஆ….?
கிருஷ்ணர் : என்ன…, unreserved-ஆ என்று அசால்ட்டா கேக்குற… நாங்க railway station-க்குப் போனோம்ல… எங்கள் ticket-ஐக் காண்பித்து, luggage எல்லாவற்றையும் check பண்ணி, train-ல் ஏற்றி விட்டார்கள்..
மேகலா : கையோடு நீங்கள் எடுத்துச் செல்லவில்லையா….?
கிருஷ்ணர் : No…… Flight-ல் முதலில் luggage-ல் tag கட்டி, எடுத்துச் செல்வார்கள்-ல, அது மாதிரி இங்கயும், station-ல் வைத்தே luggage-ல் tag கட்டி கொண்டு செல்லப்பட்டது. பரபரப்பான அந்த station-ல் எங்கள் train-க்கான waiting room-ல் நாங்கள் காத்திருந்தோம். அப்போ, ஒரு lady, ‘T.T.R’ மாதிரி, அங்கு வந்து, எங்களுக்கான ‘boarding pass’-ஐ, announce பண்ணினார்கள்.
மேகலா : Boarding pass-ஐ, announce பண்ணினார்களா…..?
கிருஷ்ணர் : நாங்கள் அன்று சென்ற train-ல், எங்கள் compartment-ல், மொத்தம் 25 பேராவது travel பண்ணியிருப்போம். அங்கு train-ல் compartment foot-step-ல் ஏறியவுடன், இருக்கும் seat-ல், disabled உட்காருவதற்கு வசதி செய்யப்பட்டது. அதன் பிறகு, single seat, double seat, அதன் பிறகு family seat; அதன் பிறகு ‘baby with mother seat’ என்று இருக்கும். அதனால், T.T.R. முதலில் கேட்ட question என்ன தெரியுமா…? Big family – more than 5 seats – அவங்க யாரு என்று கேட்டார்கள்…. நாங்கள் யாராயிருக்கும் என்று சுற்று முற்றும் பார்த்தோம். சற்று நேரம் கழித்து, T.T.R…… ‘Hari’ என்று சொன்ன பிறகுதான், நாங்கள் எங்களை எண்ணிப் பார்த்தால்……, we are 6 members. நாங்க ஒரேயடியாக குதூகலித்தோம். T.T.R. lady…. ‘wow’ take your seat Hari; happy journey!’ அப்படீன்னு கை குலுக்கினாங்களா….
மேகலா : போதும் கிருஷ்ணா…; எனக்குத் தெரியும்; நானும் தான அந்த train-ல் வந்தேன். நீ என்னோட நிழலாயிருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்; நான் எங்கு சென்றாலும், என்னுள்ளே என்னை இயக்குபவனாய் இருக்கிறாய் என்பதும் தெரியும். U.S.A-யில் நான் சென்ற train அனுபவத்தை நீ மட்டுமே சென்றதாக என்னிடமே காது குத்துகிறாயே; இது ரொ…..ம்ப ஓவர்….
கிருஷ்ணர் : எது வரைக்கும் போகுதுண்ணு பார்ப்போம் என்று நினைத்தேன்…. இருந்தாலும், நானும் தான உன் கூட travel பண்ணினேன். இன்னும் கொஞ்சம் தான் இருக்கிறது. அதற்குள் குறுக்கே பேசி காரியத்தைக் கெடுத்துட்ட….
மேகலா : நீயே சொல்லு கிருஷ்ணா…. என் குடும்பத்துள் ஒருவனாக, எங்கள் கூடவே வருவதாக நீ சொல்வது, நான் செய்த பாக்கியம்…. continue, Krishna….
கிருஷ்ணர் : அந்த T.T.R. அம்மா, ஹரியைக் கை குலுக்கி, big family-க்கான, boarding pass-ஐக் கொடுத்ததும் நாங்கள், காத்திருந்த train-ல் ஏறுவதற்கு குடுகுடுவென ஓடினோம். நாங்க ஏறுவதற்கு comfortable ஆன steps-ல் ஏறி, train-ல் நுழைந்து பார்த்தால்….. ‘வாவ்’, ஒரு aeroplane-க்குள் நுழைவது மாதிரி இருந்தது மேகலா…. அதுவும் எங்களோடது, baby தூங்குவதற்கு வசதியான family coach என்பதால், ரொம்ப சௌகர்யமாக இருந்தது. நாங்கள்…., ’ரொம்ப வசதியாகவும்’; அந்த travel-ஐ ரொம்ப ரசித்தோம். நாங்கள் சென்றது இரவு நேரப் பயணம். அதனால் இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியவில்லை. காலை விடிவதை நான் ஆவலோடு எதிர்பார்த்துத் தூங்கவேயில்லை, மேகலா! நீ நம்ப மாட்டாய்…. ரயில் ஓடுகிறது. ஓட…. ஓட…. உலகத்திற்கே அதிசயக் கனவாக…., நாகரீகத்தின் உச்சமாக மின்னும் ‘நியூ யார்க்’ நகரம், என் கண்ணில் ஒரு மின்னலைப் போல மின்னி கடந்து கொண்டிருந்தது, மேகலா….. இந்த New York நகரத்தை செய்திகளில் பார்த்திருப்பாய்…. சினிமாவில் பார்த்திருப்பாய்…. சீரியலில் கூட பார்த்திருப்பாய்; நேரில் பார்த்திருக்கிறாயா….. நான் பார்த்தேன். சினிமாவில் காட்டியபடி வானுயர்ந்த கட்டிடங்கள். வைகறை இன்னும் விடியாத காலையின் இதமான வெளிச்சத்தில், படகுக் கார்கள் நீந்திய தெருக்களை, கண்களால் அளந்து பார்க்கும் முன், ரயில் வண்டி, ‘Buffalo’, அதாவது நயாகரா நீர்வீழ்ச்சி விழும் நகரத்தை வந்தடைந்தது….. Buffalo ஒரு சின்ன நகரம்…. அந்த நகரத்திற்கான அமைதியான அழகோடு, railway station இருந்தது. Railway station-க்கே உரித்தான, வரிசையாய் நட்டிய கம்பங்களாலான boundary சுவர். அதை ஒட்டிய பசுமைச் செழிப்பு. உள்ளே சென்றதும், passengers அமர்வதற்கான benches… அமைதியான coffee shop….., அதில் கண்ணாடி box-ல் நிறைந்திருக்கும் flavored chips. அதன் அருகில் A.T.M. machine மாதிரி ஒரு box. காசு போட்டு button-ஐ அழுத்தினால், chips, cool drinks எது வேண்டுமானாலும் கிடைக்கும். இப்படி அச்சு அசலான, பழமை மாறாத railway station! அதன் பிறகு rental car எடுத்தோம்; room, book பண்ணினோம். நயாகரா நீர்வீழ்ச்சி பார்த்தோம்….. etc… etc…. etc…..
மேகலா : மறக்க முடியுமா…. ’U.S.A. trip-ஐ’; எனக்குள் உறைந்து போயிருந்த காட்சிகளை ஞாபகப்படுத்தி விட்டாய் கிருஷ்ணா…. ‘சிக்கு….புக்கு…..சிக்கு…. புக்கு ரயிலே’ – என்று பாட்டுப் பாட வைத்து விட்டாய் கிருஷ்ணா! ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதற்கு இந்த ரயில் எவ்வளவு வசதியாகிறது கிருஷ்ணா. உட்கார்ந்து கொண்டு செல்லலாம்; நடந்து கொண்டே பயணிக்கலாம்; படுத்துக் கொண்டும் செல்லலாம்; Jolly-யாக அரட்டை அடித்துக் கொண்டே செல்லலாம்; சாப்பிட்டுக் கொண்டே செல்லலாம். நீண்ட தூரம் பயணம் என்றால், bathroom கூட உள்ளேயே இருக்கிறது. அதையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இத்தனை சௌகர்யம், இன்னொரு வாகனத்தில் இருக்குமா…. சந்தேகம் தானே கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஏன் aeroplane இருக்கே… நீ சொல்லும் அத்தனை சௌகர்யங்களும், aeroplane-ல் உண்டு தானே….. இன்னும் ஒரு வசதி…. speed…. கண்டம் விட்டு கண்டம் செல்வது கூட, சில மணி நேரங்களில் சாத்தியமாகிறதே….
மேகலா : அட…., ஆமாம்…. நான் எப்படி மறந்தேன்….?
கிருஷ்ணர் : நீ இப்போ complete-ஆ U.S.A-வில் train-ல் travel பண்ணிக் கொண்டிருக்கிறாய்….! திரும்ப வா…. நீ துபாய்க்குச் சென்றது…., 4 மணி நேரப் பயணம்…. ஆனால், U.S.A-க்குச் சென்றது …. டெல்லியிலிருந்து 18 மணி நேர travel. Train வசதிகள் அத்தனையும், விமானத்திலும் இருந்தால் தான், அமெரிக்காவுக்குச் செல்ல முடியும்.
மேகலா : விமானத்தைப் பற்றியும், அதில் செய்யும் பயணம் பற்றிய அனுபவங்களுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம் கிருஷ்ணா….
Comments
Post a Comment