வாகனங்கள் பலவிதம் - பகுதி 9

 மேகலா : விமானத்தைப் பற்றி இப்போது பேசலாம் கிருஷ்ணா! படுக்கை வசதி கிடையாது…, மற்றப்படி, பேப்பர் படிப்பது, நடப்பது, சாப்பிடுவது எல்லாமும் விமானத்திலும் செய்யலாம். Train-ல் station-ல் இறங்கிப் போய், சாப்பிட வாங்கி வர வேண்டும். ஆகாய விமானத்தில், 1 மணி நேரத்திற்கு ஒரு தடவை, station-லாம் வராது. விமானத்துக்குள்ளேயேதான் சாப்பிடக் கொடுப்பாங்க…

கிருஷ்ணர் : ஏன் மேகலா…. எல்லா வாகனத்திலும், பழைய வடிவம், புதிய வடிவம் என்று இருப்பது போல, விமானத்திலும் இருக்கோ….?

மேகலா : வடிவத்தில் எனக்கு பெரிய வித்தியாசம் தெரியல, கிருஷ்ணா…. ஆனால் வசதிகளில் நிறைய மாற்றம் இருக்கணும் கிருஷ்ணா…. எனக்கு, ஆரம்ப காலத்து விமானம், தற்போதைய விமானம் என்றெல்லாம் சொல்லத் தெரியல கிருஷ்ணா. Jet plane, Concord plane என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். சின்ன வயசுல, plane பறக்குது என்று யாராவது சொன்னாலும் போதும், உடனே அண்ணாந்து பார்த்து, அதிசயப்பட்டு வியந்திருக்கிறேன். அப்பல்லாம், இந்த விமானத்தில் நானும் பறப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை கிருஷ்ணா. அப்பல்லாம் நான் நினைப்பதுண்டு; ‘இத்தனை பெரிய விமானம், மனுஷங்களைத் தூக்கிக்கிட்டு எப்படி பறக்குது’ என்று நான் யோசிப்பேன். ‘எங்கேயாவது கீழே விழுந்திருமோ….’ என்றும் நினைப்பேன்.

கிருஷ்ணர் : பட்டிக்காடு…… பட்டிக்காடு……

மேகலா : பட்டிக்காடு இல்ல கிருஷ்ணா…. ‘சின்னப்புள்ள’

கிருஷ்ணர் : Oh! ஆமாம்….

மேகலா : முதன் முதலில் நான் துபாய்க்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்ததுல்ல…. அப்ப ஒரு கனவு வந்தது; நான் பூமியில் நின்றிருக்கிறேன். அப்பொழுது, ‘ஓர் அமானுஷ்யம்’ நான் எவ்வளவோ உறுதியாக நின்றும் கூட, என்னை பலவந்தமாய்த் தூக்கி வேறு ஓர் இடத்திற்கு காற்றாய் கொண்டு போய்ச் சேர்க்கிறது. இந்தக் கனவு வந்தவுடன், எனக்கு தூக்கம் போய் விட்டது. அதன் அர்த்தம் விளங்கவில்லை. அதன் பிறகு, ஷீத்தல் என்னைத் துபாய்க்கு வரச் சொன்னாள். சந்தியா பிறந்தாள்; பாஸ்போர்ட் கைக்கு வந்தது; flight ticket வந்தது; நானும் கிளம்பி விட்டேன். வயிற்றில் ஒரு மின்னல் தோன்றி, தோன்றி என்னை நெளியச் செய்தது. அன்றைய விமான நிலையம் கூட சின்னதுதான். விமானத்தில் ladder-ல் ஏறும் போது, தடுமாறி கீழே விழுந்திரக் கூடாது என்று alert ஆக இருக்க வேண்டி இருந்தது. இன்றைய விமான நிலையத்தில், ticket-ஐக் காண்பித்து விட்டு, நேரே விமானத்தினுள் சென்று அமர்ந்து கொள்ளலாம். ஆனால், அன்று, ஏறுவது விமானத்தில் என்றாலும், International Airport-ல் கூட, local விமானத்தில் ஏறுவது போல, சிறிய ஏணியில் ஏறித்தான் விமானத்திற்குள் நுழைந்தேன்….. ‘வாவ்’…..குளிரூட்டப்பட்ட விமானம், சில்லென்ற குளிரையும், மெதுவாகக் காலை உள்ளே வைக்கும் போது, மெத்து மெத்தென்ற உணர்வையும், ‘நமஸ்காரம்’ என்ற கனிவான உபசரிப்பையும் தந்து, என்னை ஒரு பாமரனாக்கி வரவேற்றது கிருஷ்ணா…. உள்ளே நுழைந்ததும், இரண்டாவது seat-லேயே என் இருக்கையைக் கை காட்டி air hostess என்னை அமரச் செய்தாள்.

கிருஷ்ணர் : இத்தனை வாய் பேசும் நீ ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி முழிச்சயா….?

மேகலா : அப்படித்தான் முழிச்சேன் கிருஷ்ணா… நான் பறக்கப் போகிறேன் என்ற எண்ணத்தைக் காட்டிலும், நான் இதுவரை பார்க்காத சூழலுக்குத் தகுந்த மாதிரி dignified ஆக நடந்து கொள்ளணுமே என்று யோசிக்கும் போதே, belt-ஐ மாட்டச் சொன்னாங்க…. எப்படி இழு…த்….து மாட்டினாலும், என்னோட அப்பாவித்தனம் தான் வெளிப்படுகிறதே தவிர, belt….. மாட்ட மாட்டேன் என்று அடம் பண்ணியது கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : பிறகு எப்படி மாட்டினாய்….?

மேகலா : Air hostess தான் மாட்டி விட்டாள் கிருஷ்ணா….. belt மாட்டப்பட்டது…. Pilot announce பண்ணுகிறார். Plane கொஞ்சம் right-ல் turn ஆகுது; நீண்ட runway….., விமானம் மெதுவாக ஓட ஆரம்பிக்கிறது. என் உறுப்புகள் சகலமும் அமைதியாகி, இதயம் மட்டும் ‘தட தட’வென ஓட ஆரம்பிக்கிறது. என் மனமோ, ஆழ்ந்து பார்த்து அளவெடுத்து, நெஞ்சில் அழுத்தமாக பதிய வைக்கிறது. மெதுவாய் நகர்ந்த விமானம், தடதடதடதடவென வேகம் பிடித்து, அசுர வேகத்தில் ஓடுகிறது……. அப்படியே மேலெழுந்து, கொஞ்சம் மேலே…., இன்னும் மேலே என்று பறக்கப் பறக்க, காதுக்குள் ‘ஜிவ்’வென்று அடைக்கிறது. ‘நிஜமாகத்தான் பறக்கிறோமா….. இன்று வரை அண்ணாந்து பார்த்த விமானத்துக்குள் தான் இருக்கிறோமா என்பது புரியாமல், கொஞ்சம் மயங்கிய நிலையில், மங்கிய வெளிச்சத்தில், பயணம் போகிறது…..

விமானப் பணிப் பெண் கொடுத்த juice, அதிக சுவையைக் கொடுத்தது, பருகியது விமானத்தில் வைத்து என்பதால்….., கொறித்த வேர்க்கடலை ருசியாக இருந்தது, வெகு உயரத்தில் பறந்து கொண்டே கொறித்ததால்; சாப்பிட்ட உணவு, ருசியே இல்லாமல் ருசித்தது…, விமானப் பயண உணவு என்பதால்; துபாய் airport வந்தது. விமானப் பயணத்தின் போது கெத்தாக அமர்ந்திருந்த பயணிகள், விமானம் தரை இறங்கும் அறிவிப்பு வெளியானதும், நாம் தான் முதலில் வெளியேற வேண்டும் என்ற அவசரத்தில் பாமரரானார்கள் கிருஷ்ணா…. உண்மையிலேயே பாமரனாகிய நான், எல்லோரும் வெளியேறும் வரை காத்திருந்து, மெதுவாக வெளியேறினேன். வெளியில், ஏ….யப்பா….. இத்தனை பெரீய்…..ய விமான நிலையமா…….? இவ்வளவு பணக்காரத்தனமான விமான நிலையத்தை அன்றுதான் முதன் முதலாகப் பார்த்தேன் கிருஷ்ணா….!

கிருஷ்ணர் : உன்னுடைய விமானப் பயணத்தை share பண்ணியிருக்கிறாய். O.K. நீ helicopter-ல் பறந்திருக்கிறாயா….?

(தொடரும்…..)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2