தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் - பகுதி 5 (நிறைவு)

மேகலா : நான் ‘குடுகுடு’வென ஓட நினைத்து, மெதுவாக நடந்து, தாயார் சன்னதிக்குள் நுழைந்தேன் கிருஷ்ணா…. கூட்டத்துக்குள் முண்டியடிச்சு முன்னாலே போய் நின்று கொண்டேன் கிருஷ்ணா. பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து இருப்பவன் இறைவன் என்பது நம்முடைய நம்பிக்கை…. இங்கு திரை விலகிய நேரம் தொட்டு, பார்க்கும் கண்களை விலக்காமல், இமைக்காமல் பார்க்கச் செய்வதுதான் அன்னையின் பேரழகு போல கிருஷ்ணா…. அத்தனை அழகு…. நீண்ட நெடும் கண்களில் ஒளி தெறித்தது. மூக்குத்தி மின்னிய நாசியில் காற்று புகுந்து, உலகத்துக்கே உயிர் கொடுத்தது. வெண் பட்டாடையின் அலங்காரத்தில், மொத்தக் கூட்டமும் சிலிர்த்துப் போய் நின்றது கிருஷ்ணா…. அப்போது பூசாரி, தீபக் கரண்டியை ஜோதி மயமாக்கி, உலகத்துக்கே வெளிச்சத்தைக் கொடுக்கும் தாயாரின் முகத்தில் காட்டி, விளக்கின் ஒளியில், தங்கத் தாரகை அன்னையின் அழகைப் பேரழகாக்கினார் கிருஷ்ணா…. தீபாராதனை காட்டும் போது, பூசாரி பேசியதுதான் highlight கிருஷ்ணா. இந்தக் கோயிலுக்குப் போவதற்கே பிராப்தம் இருக்கணும் என்று ராணிமா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை கிருஷ்ணா!

கிருஷ்ணர் : சில நேரங்களில், பூசாரி பேசுவது கூட, கடவுள் வார்த்தைகளாக வெளிப்படும் மேகலா…. அதனால் தான் கடவுள் சன்னிதானத்தில், பூசாரி மட்டுமல்ல, யாராயிருந்தாலும் positive ஆக மட்டுமே பேசணும்; ஏன் பிரார்த்தனை கூட, positive ஆக இருப்பது நல்லது…., ஏன் பூசாரி என்ன சொன்னார்…?

மேகலா : முதலில் ஒரு தகவல் சொல்லி விடுகிறேன் கிருஷ்ணா. இந்த ‘கொரோனா’ காலத்தில், பக்தர்களுக்காக திறக்கப்படாத தாயார் சன்னிதானம், அன்று தான் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டு, சர்வ அலங்கார தேவதையாக, பக்தர்கள் முன்னிலையில், அன்னை கோலாகலமாகக் காட்சி தருகிறார். அதனால் பூசாரி, ‘நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின்பு, இன்று அன்னை பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். அன்னையும், பெருமானும் மிகுந்த சந்தோஷத்தோடு பக்தர்களுக்கு அருள் தருவார்கள். அவரவர் வேண்டுதலை அன்னையிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அன்னை, ‘கல்யாண சௌந்திரவல்லித் தாயார்’, உங்கள் வேண்டுகோளை ஐயாவிடம் எடுத்துச் சொல்வார்கள். எம்பெருமானிடம் நேரிடையாகக் கேட்பதைக் காட்டிலும், அம்மாவிடம் கேட்டால், எம்பெருமான் சந்தோஷமாகவும், விரைவாகவும், நம் குறைகளைத் தீர்த்து வைப்பார். முதலில் நாட்டுக்காக வேண்டிக்கோங்கோ…, அடுத்து அவரவர் சொந்த வேண்டுகோளையும் கேட்டுக்கோங்கோ’ என்று உணர்வுபூர்வமாகச் சொன்னாரா…, அந்த நேரத்தில் அன்னையின் கம்பீர அழகு, பல மடங்கு ஜொலிப்பதாக எனக்குத் தோணுச்சு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ என்ன வேண்டிக்கிட்ட….?

மேகலா : தமிழ்நாட்டுக்கு எனக்குப் பிடிச்ச மாதிரி, நல்ல government அமையணும் என்று வேண்டிக் கொண்டேன். அப்புறம், எல்லாப் புள்ளைங்களும் நல்லபடியா, கடவுள் அருளோடு வாழணும் என்று வேண்டிக் கொண்டேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ரொம்ப நாள் கழிச்சு பக்தர்களுக்கு வரம் தர வந்திருக்கும் தாயாரின் காதில் உன்னுடைய வேண்டுதல் தான் முதல் குரலாகக் கேட்டிருக்கும் மேகலா… நீ வேண்டியது பலிக்கட்டும்…

மேகலா : Thank you…., thank you…., கிருஷ்ணா…. அப்போ, பூசாரி, ‘எல்லோரும் கண்ணை மூடாமல், திறந்து வைத்து தாயாரின் அழகைப் பார்த்து வழிபடுங்க’ என்றாரா…, நான் அங்குள்ளோர் எல்லோரையும் பார்த்தேன்…. எல்லோரும் கண்ணை இமைக்கக் கூட மறந்து போய், தாயாரின் அழகில் சொக்கிப் போய் தான் நின்றார்கள். கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்ய யாருக்கும் தோணவேயில்லை. அங்கு நின்றிருந்தோரில் ஒரு குடும்பத்தார், தட்டில் தேங்காய், பழம் எடுத்து வந்து தாயாருக்கு special நைவேத்தியத்திற்கு பூசாரியிடம் கொடுத்திருந்தனர். பூசாரியும், நிறைந்த மனதுடன் அன்னைக்குப் படைத்தார். அப்போது, தீபத்தட்டை ஏந்தி மற்றொரு பூசாரி அருகில் வர, கண்களில் ஒற்றி, மறுபடியும் அன்னையின் அழகை ரசிக்க ஆரம்பித்தேன். அந்த நேரம், அங்கு குழுமியிருந்தோர் மனமில்லாமல் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். அப்போது, நைவேத்தியம் படைத்த பூசாரி, தட்டை எங்கள் அருகில் கொண்டு வந்து, பிரசாதம் கொடுத்தவர்களுக்கு, தேங்காய், எலுமிச்சம்பழம் என்று கொடுத்தார். இப்படி பிரசாதம் கொடுக்கும் போது, நான் நினைப்பதுண்டு, ‘இந்தப் பிரசாதம் நமக்குக் கிடைத்தால், இன்று கடவுளுயுடைய முழு ஆசிர்வாதம் நமக்குக் கிடைத்ததாக இருக்குமே’ என்று நினைத்துக் கொள்வேன். அன்றும் அப்படித்தான், ஒரு வேண்டுதலோடு, அன்னையின் முகத்தைப் பார்க்க, பூசாரி என்னை நோக்கி தேங்காய் பிரசாதத்தை நீட்டினார்.

கிருஷ்ணர் : வாழ்க…., வளர்க…..

மேகலா : கிருஷ்ணா…! இந்த நிமிஷம் என்னை ‘செத்துப் போ’ என்று சொல் கிருஷ்ணா! மகிழ்ச்சியுடன் செத்துப் போவேன். இதோ இந்த நிமிடம், பூரிப்பாக பிரசாதம் கிடைத்த கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ, ‘வாழ்க…, வளர்க’ என்று சொல்லியது எனக்கு மூச்சு முட்டுமளவுக்கு மகிழ்வாயிருக்கு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பேச்சை ‘track’ மாத்தாதே…. கதையைச் சொல்லு…

மேகலா : கண்களில் நீர் தளும்பியது கிருஷ்ணா…. உலகத்திலேயே நான் தான்…. நான் மட்டும் தான் அம்மாவின் அன்புக்குப் பரிபூரணமானவள் என்று நினைத்துப் பூரித்துப் போனேன். என்னைச் சுற்றி இருப்பவர்களை மறந்து போனேன் கிருஷ்ணா…. சந்தோஷத்தில் மடை திறந்த மாதிரி பேசுவது ஒரு ரகம்; நான் அன்று வாயடைத்துப் போனேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : பாத்தும்மா…. பல்லு சுளிக்கிக்கப் போகுது…. ரொம்ப சந்தோஷமோ….!

மேகலா : ரொம்ப…. ரொம்ப, ரொம்ப…. நெறஞ்ச மனசோடு…. மறுபடியும், கால பைரவர் சன்னிதானத்துக்குச் சென்று, சாமியைக் கும்பிட்டு…., ஒரு bye சொல்லிட்டு, மசால் தோசை சாப்பிட கிளம்பி விட்டோம் கிருஷ்ணா!

கிருஷ்ணர் : அதான…. என்னடா…. இன்னும் சாப்பாட்டு section-க்கு வரலியேண்ணு பார்த்தேன். என்ன மேகலா…, திண்டுக்கல்லுக்கு வந்திருக்க….. ‘தலப்பாக்கட்டி பிரியாணி’, ‘பொன்ராம்ஸ் பிரியாணி’-ண்ணு வாசம் வரலியா….! ‘சப்’புன்னு மசால் தோசைன்னு சொல்லிட்ட….

மேகலா : கிருஷ்ணா…. ரொம்ப நாள் கழிச்சி, கல்யாண வீட்டிற்கு வந்திருக்கேன். இந்த மாதிரி travel time-ல, Non-veg சாப்பிடணும்னு நெனக்கல கிருஷ்ணா…. நான் plan போடும் போதே, பூரி சாப்பிடணும், மசால் தோசை சாப்பிடணும்னுதான் யோசிச்சேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : கோயிலுக்குப் போகணுமென்று சொல்வதற்கு ஒரு ஆள் தேவையாயிருக்கு. வீட்டை விட்டு வெளியே போகணுமென்றால்…., பூரி, மசால் தோசை மட்டும் தான் ஞாபகம் வரும் போலயிருக்கு… சரி… உனக்கும் ஒரு change தேவையில்லையா….மசால் தோசை நல்லாயிருந்துச்சா…?

மேகலா : வழக்கம் போல இருந்தது கிருஷ்ணா… இங்கு சாப்பிட்டதை விட, Temple City-யில் breakfast super-ஆயிருந்தது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அன்றாட வேலையிலிருந்து, ஒரு நாள் விடுமுறையை, உன் மனம் போல enjoy பண்னியிருக்கிறாய்…. ரொம்ப சந்தோஷம் மேகலா…. வேற ஏதாவது special…..?

மேகலா : மறுநாள் கல்யாணத்துக்குப் போனோம். அங்கு ஒரு special incident நடந்தது. என்னண்ணு சொல்லு பார்ப்போம்…

கிருஷ்ணர் : என்ன பெருசா ஃபிலிம் காட்டுற…. என்ன…, யாராவது உன்னிடம் வந்து, உங்க channel-அ நான் பார்க்கிறேன். நீங்க ரொம்ப நல்லா சொல்லிக் குடுக்கிறீங்க என்றார்களா….? அதான்… உன் மூஞ்சிய பார்த்தாலே தெரியுதே….

மேகலா : பாத்தியா….; நான் மறுபடியும் ‘சர்வேஸ்வரன்’, ‘சர்வமும் அறிந்தவனிடம்’ பேசுகிறோம் என்பதையே மறந்து பேசுகிறேன்…!

கிருஷ்ணர் : நீ எதையும் மறக்க வேண்டாம். உன் மூஞ்சி எந்த நேரம் எப்படி எப்படி ‘பல்பு’ காட்டும் என்பது எனக்கு அத்துப்பிடி. சரி சொல்லு…., என்ன ஆச்சு…?

மேகலா : நாங்க கல்யாண வீடு attend பண்ணி விட்டு ஊருக்கு கிளம்புவதற்காக காரில் ஏறப் போனோம். அப்ப ஒரு family, இரண்டு பேரும் வேகமாக வந்து, என் பக்கத்தில் நின்று, ‘மேடம், உங்கள பார்ப்போம்னு நினக்கவேயில்ல….. உங்களோட ஒரு photo எடுக்கணும்’ என்று சொல்லி. photo-வும் எடுத்துக் கொண்டார். அந்த அம்மாவோட வீட்டுக்காரர், ‘சமையல்னா அவங்களுக்கு ரொம்ப interest’-னு சொல்லி, ரொம்ப சந்தோஷமா feel பண்ணாங்க. எங்க அண்ணா, ‘ஏ…யப்பா…. வைரம் ரொம்ப famous ஆயிட்டா’…. என்றார். எங்க கண்ணா…. ‘இவங்க எங்க அக்கா’…. என்றானா….எனக்கு ரொம்ப happy-யாயிருச்சி கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரியாப் போச்சி…. உன்னுடைய தாடிக்கொம்பு பிரயாணம் ‘success’….

மேகலா : நீ இப்படி கிண்டல் பண்ணுவ தெரிஞ்சிதான், இதச் சொல்லத் தயங்கினேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : கிண்டல்லாம் ஒண்ணும் இல்ல…. எப்படியோ நீ சந்தோஷமா இருந்தா…., நான் சந்தோஷமா இருந்த மாதிரி…. அடுத்த trip எங்க….? எப்போ….?

மேகலா : தெரியலயே கிருஷ்ணா…..

(நிறைவு பெற்றது)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1