அரசியல் அதகளம் - பகுதி 1
அரசியல் அதகளம் – பகுதி 1
மேகலா : கடவுளே…, கடவுளே…, கடவுளே…, எங்க தமிழ்நாட்ட காப்பாத்துங்க கடவுளே….
கிருஷ்ணர் : என்ன…., இது…. நம்மள யாரோ கூப்பிடற மாதிரி இருக்கே… இந்தக் குரல் கூட…, கேட்ட குரல் மாதிரி… அட…ட…டா…. என்ன மேகலா…., தனியா இங்க உக்காந்து, தமிழ்நாட்டக் காப்பாத்தச் சொல்லி, கடவுள் கிட்ட மனுப் போட்டுகிட்டு இருக்க….
மேகலா : உனக்கென்ன கிருஷ்ணா…. நீ எங்கள ஆட்டுவிக்கிறவன்; நாங்க அவஸ்தைப்படறவங்க…. எங்க தனிப்பட்ட பிரச்னைணா…., கடவுள் கிட்ட அழுது புரண்டு, ஒப்பாரி வச்சுனாலும், கேட்டு வாங்கி சமாளிச்சிருவோம். தமிழ்நாட்டு தலையெழுத்த மாத்தக் கூடிய election பிரச்னைணா, என்ன பண்றது…. அதான்,,, இப்பவே கடவுள் கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கேன்…
கிருஷ்ணர் : சரி…. election தான் வரப் போகுதுல; அரசியல் பார்வை தெளிவா இருக்கும் நீ எதுக்கு இவ்வளவு புலம்பற…. தமிழ்நாட்டுக்கு தலைமை வகிக்க யாருக்கு தகுதி இருக்கு என்று நீ நினைக்கிறாயோ…, அவங்களுக்கு ஓட்டு போட்டு select பண்ண வேண்டியதுதானே….
மேகலா : கிருஷ்ணா! என்ன சொல்ற நீ…? நான் ஒருத்தி ஓட்டு போட்டா, தமிழ்நாட்டு தலைமையை தீர்மானிச்சிர முடியுமா… அப்படி ஒரு வரம் எனக்கு நீ கொடுத்தால், நான் இப்படிப் புலம்பவே மாட்டேனே….
கிருஷ்ணர் : சரி…. என்ன பிரச்னை…. நீ சொல்லு…, என்ன செய்யலாம்ணு பார்க்கலாம்…
மேகலா : உனக்குத்தான் தெரியுமே கிருஷ்ணா…. கடந்த பத்து ஆண்டுகளாக ADMK government தான் ஆட்சி நடத்துகிறது. வருகிற April மாசம் election நடக்க இருக்கிறது. ADMK, DMK அல்லாத வேறு யாரையும் மக்கள் இன்னும் நம்பத் தயாராக இல்லை. எல்லை பிரச்னையாகட்டும், விவசாயப் பிரச்னையாகட்டும், மீனவப் பிரச்னையாகட்டும், மாணவர்களுக்கான NEET exam ஆகட்டும், அபிநந்தனின் சாகசமாகட்டும், கொரோனா பிரச்னையாகட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாகட்டும், கைலாயத்துகுச் செல்லும் வழி அமைப்பதிலாகட்டும், காஷ்மீரை நிறம் மாற்றுவதாகட்டும், மத்திய அரசு எது செஞ்சாலும், அதைத் தமிழக மக்களிடம், தப்புத்தப்பாகவே எடுத்துச் சொல்லி, மத்திய அரசு மீது ‘காவிச் சாயம்’ மட்டுமே பூசத் தயாராகும், இந்தத் தமிழக அரசியல்வாதிகளும், அவர்கள் கைப்பாவையாக மட்டுமே பரப்புரை செய்யும் ஊடகங்களும், தமிழக மக்களை எதையும் யோசிக்க விடாமலேயே செய்து, மூன்றாவது ஒரு நபரை அல்லது party-யை, இவ்வளவு ஏன், பிரதம மந்திரியைக் கூட தமிழகத்திற்கு எதிரியாகவே சித்தரித்து வைத்திருக்கிறார்கள் கிருஷ்ணா. அதனால், தமிழகத்திற்கு புதிய தலைமை இல்லாமல், மக்களும் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அரசாங்கத்தின் மீது அலுப்புத் தட்டியதால், மிச்சமிருக்கும் கட்சியை தேர்ந்தெடுத்து விடுவார்களோ என்று பயமாக இருக்கு கிருஷ்ணா…. எனக்கு என்னென்னவோ பயமெல்லாம் வருது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : ஊழல் பயமா….?
மேகலா : அது கிடக்கட்டும் கிருஷ்ணா…. ‘பவர் கட்’; 10 மணி நேர பவர் கட்டில் தமிழகமே இருளில் கிடந்ததே, மறந்துட்டயா கிருஷ்ணா…? அடுத்து, எல்லை தாண்டி வந்தார்கள் என்று, தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் சிறைபிடிப்பதும், உயிர்க்கொலை செய்வதும் மறுபடியும் தொடருமோ என்று பயமாக இருக்கிறது. காவிரி பிரச்னையில், உணர்ச்சிகளை மட்டுமே பேச விட்டு, தண்ணீரைக் கூட அரசியலாக்கிய கொடுமை ஞாபகம் வந்திருச்சி கிருஷ்ணா…. ‘தமிழன்’, ‘தமிழன்’ என்பார்கள்…. ஒரு திருக்குறள் கூட சரியாய் சொல்லத் தெரியாத நபர்கள் கையில் தமிழகமா…. தமிழே தெரியாத நம் பாரதப் பிரதமர், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்று வரிகளை ‘கணியன் பூங்குன்றனார்’ என்று எழுதிய புலவர் பெயரைச் சொல்லி பெருமைப்படுகிறார். இங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர், அதே வரிகளைத் திருக்குறள் என்கிறார். ஒரு ‘வாசகத்தை, ‘நிகழ்ச்சியை’ விமர்சித்து பேசும் பொழுது, சரியாகக் குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூடத் தெரியாத தலைவர்களிடம் நாடு சிக்கி விடுமோ என்று பயமாக இருக்கிறது கிருஷ்ணா…. இப்படியெல்லாம் எனக்கு பயம் ஒரு பக்கம் இருந்தாலும், ‘social medias’-களில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில், அவர்கள் கொடுக்கும் யூகங்கள் வேறு என்னை மேலும் பயங்காட்டுகிறது கிருஷ்ணா…
கிருஷ்ணர் : சரி…. நீ நினைப்பது மாதிரிதானே மற்ற மக்களும் நினைப்பார்கள். பின்ன, நீ பயப்படுகிற மாதிரி எப்படி நடக்கும்…?
மேகலா : ஐயோ…, கிருஷ்ணா! பத்து வருஷம் ஒரு government நடக்குது.., bore அடிக்குது… வேறு கட்சிக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாங்க போல கிருஷ்ணா….. புதுசா ஒரு candidate…., தேசப்பற்று உள்ள ஒரு தலைமை இன்னும் தமிழ்நாட்டில் மக்களால் கண்டறியப்படவில்லை போல கிருஷ்ணா…! சரி…, அதுவரைக்கும் மக்களுக்காக ’வேலை செய்யும்’ அரசாங்கத்தையே தேர்ந்தெடுப்போம் என்பதில்தான் மக்களுக்கு குழப்பம் இருக்கிறது போல. அதனால்தான்…, எனக்கு பல பயங்கள் வரிசை கட்டி நின்று என்னை குழப்புகிறது….
கிருஷ்ணர் : சரி…. இந்த பயத்தையெல்லாம் ஒதுக்கி வை…. இல்லை…. இந்தப் பிரச்னையை என்னிடம் விட்டு விடு…, நான் பார்த்துக்கிறேன். நாம ஒரு சின்ன கலாட்டா பண்ணலாமா…?
மேகலா : என்ன கிருஷ்ணா…. தேர்தல் நெருங்கும் சமயத்துல… ‘மீம்ஸ்களாலும்’…., ‘trolls’-களாலும் தமிழ்நாடே கலாட்டாவாகிக் கிடக்குது… நீயும் கலாட்டா பண்ணலாமா என்கிறாய்…. காமெடி பண்றியா….?
கிருஷ்ணர் : மேகலா…. பிரச்னை பெருசா நம்மை நெருங்கி வந்து பயப்படுத்தும் போது, அதை கலகலப்பாய், கலாட்டாவாய் எதிர்கொண்டால், பிரச்னையை சுல..பமாய்…. cross பண்ணிரலாம்.
மேகலா : எல்லாம் தெரிந்தவன் நீ…. ஏதோ சொல்லுகிறாய்… கேட்டுக்கிறேன்… நீ என்ன சொல்லுகிறாய் கிருஷ்ணா…?
கிருஷ்ணர் : இந்தத் தேர்தலையொட்டி…. கட்சிகளும் விமர்சகர்களும் செய்யும் அலப்பறையை அலசலாம்…; செம ஜாலியாய் இருக்கும்….
மேகலா : அப்படீங்கிற….
கிருஷ்ணர் : ஆமாங்கிறேன்….
(தொடரும்)
Comments
Post a Comment