ஒரு selfie எடுக்கலாமா....? - பகுதி 6 (நிறைவு)
கிருஷ்ணர் : நெசம்மாவே, பழமையான valuable கதையெல்லாம் வச்சிருக்க போலயே…. சரி….. இந்த camera இன்னும் function ஆகுமா….. நீ photo எடுத்துப் பார்த்தியா மேகலா….?
மேகலா : இல்ல கிருஷ்ணா…. இது ‘old camera’….. activate ஆகுமா, ஆகாதா என்றெல்லாம் நான் யோசிக்கவேயில்லை…. இதில் பொருத்தக் கூடிய film, இத்யாதி எல்லாம் இப்போ market-ல் கிடைக்குமான்னு தெரியாது…. நிச்சயமாக function ஆகாது என்று முடிவே பண்ணிட்டேன் கிருஷ்ணா…
கிருஷ்ணர் : உன் அப்பா ‘பாவம்’ மேகலா…. ஆள் தெரியாமல் கொடுத்து விட்டார்…..
மேகலா : நான் பத்திரமா வைத்திருப்பேன் என்று தான் கொடுத்தார் கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : சரி, பத்திரமாதான வச்சிருக்க…. வேற ஏதாவது camera வச்சிருக்கிறயா மேகலா…?
மேகலா : இப்ப தான் எல்லோரும் smart phone-ஐ கையில் வைத்துக் கொண்டு, பார்ப்பதை, பார்த்ததில் பிடித்ததை, அசைவது, அசையாதது எல்லாவற்றையும் photo எடுக்கிறார்கள் அல்லவா? எடுப்பது மட்டுமல்லாமல், ‘whatsapp group’-ல் போட்டு, தங்கள் ரசனையை, அல்லது திறமையை வெளிப்படுத்துகிறார்கள். ஒன்றுமே photo எடுக்கவில்லையென்றாலும், ‘selfie’-யாவது எடுத்து தங்கள் ஆசையை செயல்படுத்துகிறார்கள். 1970-களில் அப்படியெல்லாம் கிடையாது கிருஷ்ணா. வீட்டுக்கு ஒரு camera இருக்குமா….. என்றால், சந்தேகம் தான் கிருஷ்ணா…. யாராவது ரொம்ப ஆசைப்பட்டு camera வாங்கினால், தீபாவளி, பொங்கல் என்று, குடும்பத்தில் அத்தனை பேரும் சேர்ந்திருக்கும் நாட்களில் கண்டமேனிக்கு photo எடுத்துத் தள்ளுவார்கள்.
கழுத்தில் மாலையாகத் தொங்கும் camera; தோளில் சுமக்கும் camera; தனி track-ல் நகர்ந்து, சுற்றிச் சுற்றிப் படமெடுக்கும் camera; மேலும் கீழுமாய் ஏறி இறங்கும் camera; helicopter போல் பறந்து, மேலிருந்த வண்ணமாய், கீழே நடப்பதைப் படமெடுக்கும் camera; என்று பல camera-க்கள் photographer கையில் இருந்தாலும், இன்று எல்லோர் கையிலும் smart phone என்ற பெயரில் கையில் camera இருப்பது நிஜம் கிருஷ்ணா….
அப்பல்லாம், ‘Kodak’ camera-தான் famous கிருஷ்ணா. அதற்கான விளம்பரமே சிறப்பாய் இருக்கும் கிருஷ்ணா….. என்னிடம் ஒரு Kodak camera இருந்தது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : நெசம்மாவா….? இன்னும் வச்சிருக்கயா…?
மேகலா : இங்க உள்ளதான் இருக்குன்னு நினைக்கிறேன். நான் கோயம்பத்தூர்ல இருக்கும் போது, Bajaj company dealer ஆக இருந்த போது கிடைச்ச ஒரு சின்னப் பரிசு கிருஷ்ணா. அதை வச்சு நிறைய photos எடுத்திருக்கோம். அதுக்குப் பிறகு, அந்த camera-வை நினைக்கக் கூட முடியாமல், ஸ்ரீவி வந்து சேர்ந்தோம். ஷீத்தல் கல்யாணம், ஹரி படிப்பு என்று வாழ்க்கை வேறு திசையில் போனது. Photo, சந்தோஷம், ரசனை என்பதெல்லாம் ஒதுங்கி இருந்த நேரத்தில், ஷீத்தல் துபாயிலிருந்து ஒரு video camera கொண்டு வந்தாளா…., நான் வேடிக்கை பார்த்தேன் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : ஏன் வேடிக்கை பார்த்தாய்….?
மேகலா : Photo-வின் clarity அப்படி கிருஷ்ணா…. இது வரைக்கும், photos, photo-வாகத்தானே இருக்கும்…. இந்த camera-வில் photo எடுக்கும் போது, அதில் சிரித்தபடி ‘pose’ கொடுத்திருந்தால், photo-வே சிரிக்கும்! ஏதாவது நிகழ்ச்சியாக இருந்தால், அந்த நிகழ்ச்சியைக் கண் முன்னே கொண்டு வரும். படத்தின் clarity என்னை மலைக்க வைத்தது கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! இப்போ…. நீ, technology பேசுகின்ற காலத்துக்குள் அடியெடுத்து வைத்து விட்டாய். மேகலா, அன்றிலிருந்து இன்று வரைக்கும் ‘camera’, phone-ஓடு சேர்ந்த camera இவற்றின் வளர்ச்சி அபாரமானது. இப்போ, still photo மட்டும் எடுக்கும் camera பார்ப்பதே கஷ்டம்…!
மேகலா : Photo studio, photographer கிட்ட இருந்தாலும் இருக்கலாம் கிருஷ்ணா…. அனாலும், இன்று 4000 ரூபாய் smart phone கூட, photo எடுப்பதில் ‘கில்லி’யா இருக்கு கிருஷ்ணா….
கிருஷ்ணர் : அதெல்லாம் 2G, 3G, 4G-யின் மகிமை மேகலா…
மேகலா : இன்று smart phone இல்லாதவர்களே கிடையாது என்றாகி விட்டது கிருஷ்ணா. ஒரு phone கையில் இருந்தால் போதும் கிருஷ்ணா – still photo எடுக்கலாம்…., video எடுக்கலாம்…., cooking channel-க்கு program எடுக்கலாம். எங்காவது tour போயிருக்கோமா, அங்கு நடக்கும் சம்பவத்தை, on-the-spot video எடுக்கலாம். கொஞ்ச நாளைக்கு முன்பு, சாக்கடையில் வீசியெறியப்பட்ட குழந்தையின் சப்தத்தை, ஒரு பெண்மணி கேட்க, சாக்கடையை உற்றுப் பார்த்து, அதில் பிறந்த குழந்தை கிடக்க, அதை வெளியில் எடுக்கிறாள். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், அதை video எடுத்து, social media-வில் upload பண்ண, உலகமே அந்தப் பெண்ணைப் பாராட்டி மகிழ்கிறார்கள். இன்று, இந்த phone-க்குள் camera-வை நம்பி, எத்தனை social media – facebook, instagram, whatsapp என்று செயல்படுகிறது கிருஷ்ணா! கோயிலுக்குள் camera கொண்டு செல்ல அனுமதி கிடையாது. ஆனால், சாமி ஊர்வலமா, கூட்டமே camera-வைத் தூக்கிக் காட்டி, ‘பளிச் பளிச்’னு photo எடுக்கிறார்கள். பொதுவாக ஊருக்குள் கூட்டம் கூடினால் போதும், அதில் பாதி பேர் கையில் cellphone, camera-வாக செயல்படுகிறது. சிலர், சென்ற இடத்தில் எடுக்கும் ‘video’-வை ‘vlog’ ஆக upload செய்கிறார்கள். நம்ம ஊரு ‘பெருசுக’ photo எடுத்தால் ஆயுசு குறையும் என்று சொல்வார்கள். இன்று photo எடுப்பது ஒவ்வொரு மனிதனுடைய ‘life-style’ ஆகி விட்டது. இன்னொரு விஷயம் தெரியுமா கிருஷ்ணா! மக்கள் தொகை அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், மக்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க பொது இடங்களில், CCTV Camera பொருத்தப்படும் கலாச்சாரம் பெருகி விட்டது கிருஷ்ணா…. அதனால் எத்தனை விஷயங்களுக்கு அது evidence ஆக இருக்கு. சில இடங்களில் குற்றங்கள் கூட தடுக்கப்படுகிறது. மீறி நடந்தால், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் முடிகிறது.
கிருஷ்ணர் : ‘வாவ்’…., ஒவ்வொரு மனிதன் கையிலும் camera; ஒவ்வொருவரும் cameraman. ஒவ்வொருவரும் தங்கள் மகிழ்ச்சியை, நட்பை, உறவை, அற்புதத் தருணத்தை தங்கள் camera-வில் பதிவு பண்ணி மகிழ்கிறார்கள். இந்தப் பரிணாம வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி எப்படி போகிறது என்பதை காத்திருந்து பார்க்கலாம்.
மேகலா : அவ்வளவுதானா….? மசால் தோசை கிடையாதா…? முடிஞ்சிருச்சா கிருஷ்ணா…?
கிருஷ்ணர் : என்னோட friend சிவகாசி சமையல் chef நல்லா மசால் தோசை பண்ணுவாங்க…, அவங்க கிட்ட சொல்லிட்டுப் போறேன்… bye….. வர்ட்டா….?
(நிறைவு பெறுகிறது)
Comments
Post a Comment