Posts

Showing posts from April, 2021

வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 1

கிருஷ்ணர்   : ஹாய்! மேகலா…..! என்ன, உன் முகத்தில் எந்த விதமான பாவமும் இல்லையே…. அடுத்து, என்ன தலைப்பில் எழுதலாம் என்று ரொம்ப யோசிக்கிறயோ….? மேகலா  : ஆமாம் கிருஷ்ணா…. என் புத்திக்கு, நல்ல நல்ல விஷயங்கள் வத்திப் போச்சோ என்று பயமா இருக்கு கிருஷ்ணா! கிருஷ்ணர்  : அம்மா! நீ சிந்திக்க மறுக்கிறாய்…. எல்லாம் உன் சோம்பேறித்தனம் தான் காரணம்.  அறிவு என்பது வத்திப் போகிற சமாச்சாரம் இல்லை…  யோசி…. நல்ல தலைப்பை முடிவு செய்…. ஆம்மாம்…., நீ மறுபடியும் தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமான் கோயிலுக்குப் போயிருந்தாயோ…. மேகலா  : ஆமாம் கிருஷ்ணா! ஷீத்தல் வந்திருந்தால……. அவதான் கூட்டிப் போகச் சொன்னா…. இத நான் உங்கிட்ட சொல்லலியா கிருஷ்ணா….? கிருஷ்ணர்  : எங்க….? இப்பல்லாம் எங்கிட்ட முக்கியமான விஷயங்களைச் சொல்றதேயில்லை. ஷீத்தல் வந்ததைச் சொல்லல….  ஆமாம், எதிலயாவது ‘lock’ ஆகியிருக்கயா…. இப்படி மறக்கிற….? மேகலா  : Lock ஆகல கிருஷ்ணா…. Commit ஆகியிருக்கேன்… கிருஷ்ணர்  : ‘Commit’ ஆகியிருக்கயா….. எனக்குத் தெரியாமல், எதில் commit ஆகியிருக்கிற…. மேகலா  : எல்லாம் உனக்குத் தெரிந்ததுதான் கிருஷ்ணா! கதை சொல்லப் போகிறேன். கிருஷ்ண

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 132

மேகலா   : இந்தக் காட்சியை முழுவதுமாக, பாண்டவர்களும் பார்த்தார்கள்; கௌரவர்களும் பார்த்தார்கள். கௌரவர்களைப் பெற்ற காந்தாரிக்கும் இது தெரியும். இவள், கிருஷ்ணருக்கு எதிரியும் கிடையாது; பெரிய நட்பும் கிடையாது. ஆனாலும், கிருஷ்ணரின் மகிமை தெரியும். அவர், பாண்டவர்களுக்கு சகாயம் செய்பவர் என்று தெரியும்.   கிருஷ்ணர் இருக்கும் பக்கமே, உண்மை இருக்கிறது, வெற்றியும் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியும். துரியோதனனைக் கட்டுப்படுத்த அவளால் முடியவில்லை.  துரியோதனன் தர்மம் தவறுகிறான் என்று தெரியும். திரௌபதியை அவமானப்படுத்தியது தெரியும்.  பாண்டவர்களை அவமானப்படுத்திக் காட்டுக்கு அனுப்பியதும் தெரியும். யுத்த பூமியில், துரியோதனன் வீழ்ந்து விட்டான். கௌரவர்கள் தோற்றுப் போனார்கள் என்று தெரிந்த பின், யுத்த பூமிக்கு வருகிறாள். அங்கு, கௌரவர்களின் மனைவிமார்கள், தங்கள் கணவன்மார்களை இழந்து அழுவதைப் பார்க்கிறாள். தன் மகன் இறந்து விட்டான் என்ற நிலையில், அவள் அடிவயிற்றிலிருந்து பீறிட்டு வரும் துக்கத்தை அடக்க முடியாமல், ஆத்திரத்துடன், கிருஷ்ணரிடம் பேசுகிறாள். ‘கிருஷ்ணா! உனக்கே இது நியாயமா? கௌரவர்கள் ஒருவர் கூட மிஞ்சாமல்,

அரசியல் அதகளம் - பகுதி 7 (நிறைவுப் பகுதி)

கிருஷ்ணர்   : சினிமா shooting-ஆ….? மேகலா  : ஆமாம்…. Hyderabad Film City-யில் shooting எடுக்கையில் வேற team யாரையும் enter பண்ண விடவில்லை. Team மொத்தப் பேருக்கும் medical check-up கொடுத்து, tight security கொடுத்து shooting எடுத்தும், அந்த team-ல நாலு பேருக்கு ‘கொரோனா’ attack ஆயிருச்சி கிருஷ்ணா… கிருஷ்ணர்  : அடப் பாவமே…..!  Kidney transplant operation-ஐயே மறைக்கத் தெரிந்த நடிகருக்கு, இப்ப நடக்கிற எந்த incident-ஐயும் மறைக்க முடியலயே….  அவருக்கு ஒண்ணும் ‘கொரோனா’ attack ஆகலியே… மேகலா  : அதெல்லாம் இல்லை கிருஷ்ணா…. இருந்தாலும், அலுப்பு காரணமாகவோ, மனத்தளர்ச்சி காரணமாகவோ, Hyderabad hospital-லில் ஒரு வாரம் rest எடுக்க வேண்டும் என்று doctors ஆலோசனை சொல்ல, hospital-லில் admit ஆகி விட்டார்.  இங்கு தமிழ்நாட்டில் செய்தி சேகரிப்பாளர்களும், செய்திகளை யூகிப்பவர்களும், ரசிகர்களும், இந்தக் கண்ணாடிப் பாத்திரத்தைக் கையில் எடுத்து ஆராய ஆரம்பித்து விட்டார்கள்….. கிருஷ்ணர்  : எனக்கு ஒரு சித்தர் பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது. ‘நந்தவனத்துல ஒரு ஆண்டி வெகு நாளாகக் குயவனை வேண்டி கொண்டு வந்தாண்டி ஒரு தோண்டி அதக் கூத

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 131

மேகலா   : துரியோதனனுக்கு படைபலம் பிடித்திருந்தது. கிருஷ்ணரின் பெருமைகளைத் தெரியவில்லை. அர்ஜுனனோ,   ‘நீர் ஆயுதம் ஏந்த வேண்டியதில்லை; நீர் ஒருவர் என் பக்கம் இருந்தால் போதும்; தைரியலட்சுமியும், விஜயலட்சுமியும் கூடவே வருவர்’   என்று கூறினானே. அடா…, அடா…, அடா…. இந்த சம்பவத்தை எத்தனை முறை படித்தாலும், பேசினாலும், எழுதினாலும், எனக்கு மெய் சிலிர்த்துப் போகும்.   கிருஷ்ணரின் பெருமைகளை அர்ஜுனன் அறிவான். அவர் வந்து நின்றாலே போதும்; வெற்றித் திருமகள் கை கட்டி நிற்பாள்  என்று நம்பியிருக்கிறான். அந்த நம்பிக்கை கிருஷ்ணரைச் சரணடையச் செய்திருக்கிறது. ‘பணிந்தும், பணிவிடை செய்தும் நீ இதைக் கேட்பாயாக’ என்று கீதையை எடுத்துரைக்கிறார். பணிகிறான்; அவர் சொல்லிய அத்தனை ஆலோசனைகளையும் மறுவார்த்தை கூறாமல் கேட்கிறான். பரமசிவனாரிடமிருந்து பாசுபதா அஸ்திரம் கற்று வருகிறான். பீஷ்மரை எதிர்க்க சிகண்டியை முன்னிறுத்துகிறான். பகதத்தனின் தலைக் கட்டை அஸ்திரத்தால் அறுத்து எறிகிறான். பூரிசிரவஸின் ஓங்கிய கையில், அஸ்திரத்தைப் பாய்ச்சுகிறான். தன் அஸ்திரத்தினால் ஜயத்ரதனின் தலையை அறுக்கிறான். அத்தலையை, அப்படியே வெட்ட வெளியில் நிறுத்

அரசியல் அதகளம் - பகுதி 6

கிருஷ்ணர்   : ரஜினிகாந்த் matter’-ஆ மேகலா….? ஆமாம், என்ன தான் நடந்தது? எனக்கு, அவர் கட்டாயம் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்று நல்லாவே தெரியும்…. அதனால், அந்த news-அ ரொம்ப கண்டுக்கல…. ஆமாம், என்ன நடந்துச்சி….. மேகலா  : கிருஷ்ணா…. அவருக்கு மக்கள் மீது பெருசா அக்கறையெல்லாம் கிடையாது. அப்பப்போ… அவர் படம் release ஆவதற்கு முன்னால்….’, ’நான் எப்போ வருவேண்ணு தெரியாது…. ஆனா வர வேண்டிய நேரத்துல கட்டாயம் வருவேன்’ னு டயலாக்கெல்லாம் பேசி, அவரோட ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து விடுவார். படம் release ஆனவுடன், போஸ்டருக்கு ‘பாலாபிஷேகம்’ என்ன…., ‘தலைவா, வருங்கால முதலமைச்சரே!’ என்ற அலப்பறை என்ன…., படம் release ஆகி, collection கோடி கோடியாய் கொட்டும். அத்தோட, அந்த ‘டயலாக்’க மறந்துட்டு, அடுத்த படத்திற்கு ’commit’ ஆகி, ‘சிங்கம், சிங்கிளாத்தான் வரும்’ என்ற அடுத்த ’பன்ச் டயலாக்’குக்கு மாறிருவார்…. கிருஷ்ணர்  : ம்…. அப்படியா…. பரவாயில்லையே…. பார்த்தியா…. மேகலா…..marketing-ல இது புது மாதிரி technic-ஆ இருக்கே….! மக்களோட அபிமானத்தை எவ்வளவு சாதாரணமா use பண்ணியிருக்காங்க…. மேகலா  : கிருஷ்ணா….. இந்த drama கடந்த 2

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 130

மேகலா   : நம்முடைய வாழ்க்கையில் கூட, அப்படித்தானே…. அம்மா, குழந்தைகளைக் கல்வி கற்க வைக்கும் போது, home work எழுதச் செய்வாள்; exam-க்குத் தயார்ப் படுத்துவாள்; சோர்வுற்றிருக்கும் போது, உற்சாகப்படுத்துவாள்; களைப்பாகும் போது விசிறி விடுவாள். இப்படியெல்லாம் குழந்தைகளை, பரீட்சை எழுதவும், கல்வியை அறியவும் உதவுவாளே தவிர, தான் போய் பரீட்சை எழுத மாட்டாள்.   அப்படித்தானே கடவுளும்; தாயுமாகி, யாதுமாகியவன் கடவுள்.   தன் நண்பன் என்று, தானே படைத் தளபதியாகவில்லை; ஆயுதம் ஏந்தவில்லை. ஆனாலும், எதிரிகளைப் பந்தாடச் செய்ததில் கிருஷ்ணரின் பங்குதான் பாண்டவர்களை வெற்றியின் சமீபத்திற்கு அழைத்துச் சென்றது. இவ்வளவு ஏன்? அர்ஜுனன், தன் தயக்கத்தை உதறி யுத்தம் செய்ததே கிருஷ்ணரின் ஊக்கத்தினால் மட்டுமே. பூரிசிரவஸை வலுவிழக்கச் செய்ததாகட்டும், ஜயத்ரதன் வதத்தில் தந்திரத்தைக் கையாண்டதாகட்டும், துரோணருக்கு எதிராக தருமனை பொய் சொல்லத் தூண்டியதாகட்டும், கர்ணன் எய்த அஸ்திரம், அர்ஜுனனை நோக்கி வரும் பொழுது, தன் கட்டை விரலால் தேரை அழுத்தி, பூமியில் பதியச் செய்த ராஜ தந்திரமாகட்டும்,   ஒரு தேர்ந்த ராஜதந்திரியாகவும், கம்பீரமான தலைவராக

அரசியல் அதகளம் - பகுதி 5

கிருஷ்ணர்   : மக்களிடம், தான் ஒரு விவசாயி அல்லது சாமான்யன் என்று பெயர் வாங்கணும் என்ற நல்ல எண்ணம் தானே…. இதிலென்ன தப்பிருக்கு….. மேகலா  : தப்பேயில்லை கிருஷ்ணா….. கர்மவீரர் காமராஜர் தன்னுடைய எளிய உடையாலும், தேசத்தின் மீது கொண்ட அக்கறையாலும், மக்களிடம் குறை கேட்கும் எளிமையாலும், அவரை, ‘சாமான்யன்’, ‘சாணக்கியன்’ என்று சொல்ல நான் தயாராக இருக்கிறேன். எனக்கு ஒரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வருகிறது கிருஷ்ணா. 1964-ஆம் ஆண்டு, சைனா போர் நடந்த சமயம், முதலமைச்சராக இருந்த கர்மவீரர், ஊர் ஊராகச் சென்று நிதி வசூலித்து வந்தார்; எங்க ஊருக்கும் வந்தார். எங்கள் பள்ளி வளாகத்தில் வைத்துத்தான் இந்த நிகழ்ச்சி நடந்தது. நாங்க ஒவ்வொருவரும் ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரத்தை, முதலமைச்சர் கையில் கொடுத்து, ‘photo’ எடுத்துக் கொண்டோம். அப்போ எனக்கு 10 வயசு. மேடையில் எப்படி நடப்பது என்று கூடத் தெரியாது. முதலமைச்சர் ‘டவாலி’யை மேடையின் கீழே இறங்கச் சொல்லி விட்டார். அரசாங்கப் பாதுகாப்புத் தேவையில்லை. ஊர்ப் பெரியவர்கள்தான் மேடையில் முதலமைச்சருடன் அமர்ந்திருந்தனர். வரும் சின்னக் குழந்தைகளை, முதலமைச்சரே கையைப் பிடித்து, தன் பக்க

ஸ்ரீ கிருஷ்ணரும் மேகலாவாகிய நானும் - மகாபாரதம் - பகுதி 129

மேகலா   : இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பாண்டவர்கள் வனவாசம் நிறைவு பெற்று, ஓராண்டு அஞ்ஞாத வாசமும் முடிவுக்கு வருகிறது. துரியோதனன், பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த விராட தேசத்திற்கு போர் புரிய வருகிறான். அப்பொழுது, அர்ஜுனன் தன்னை வெளிப்படுத்தி கௌரவர்களுடன் போர் புரிகிறான்.   பீஷ்மர் உள்ளிட்ட கௌரவர்களைத் தோற்கடித்து, போர் என்று வந்தால், தன்னை ஜெயிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்று செயலால் நிரூபிக்கிறான். நியாயமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டிய ராஜ்ஜியத்தில் ஊசி முனை அளவு கூட கொடுக்க முடியாது என்ற துரியோதனனின் எகத்தாளத்தை நேரில் சந்தித்து, தர்மத்தை எடுத்துரைக்க, பாண்டவர்களின் நியாயத்தை எடுத்துரைக்க, அஸ்தினாபுரத்திற்கு தூதுவனாகச் சென்றார் கிருஷ்ணர். வந்த இடத்தில், கிருஷ்ணரையே கட்டிப் போட்டு விடுவதாக துரியோதனன் முயற்சி செய்கிறான்.  உலகத்தின் ஒரு மூலையில், ஊசி முனையளவு இடத்தில் இருக்கும் துரியோதனன் எங்கே…., உலகத்தையே தன்னுள் ஓர் அங்கமாக அடக்கியிருக்கும் அந்த ‘பரம் பொருள்’ எங்கே…?  தனக்குள்ளே உலகத்தையே அடக்கி விஸ்வரூபம் காட்டினார். அந்தக் காட்சியை திருதராஷ்டிரனும் கண்டான். அந்தக் காட்சியைக் கண்ட பி