அரசியல் அதகளம் - பகுதி 4

கிருஷ்ணர் : ‘குவார்ட்டரா….’, இது ஒரு வகையான லஞ்சம் தானே…..

மேகலா : எல்லாக் கட்சிக்காரங்களுக்கும் இது பொதுவான விதி; Opposite கட்சி செஞ்சால், இது லஞ்சம்…! சமயத்தில், சில தலைவர்களுக்கு, தானாகக் கூட்டம் சேர்வதும் உண்டு….. அதுவும், மக்கள், ‘எப்படா ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என்று தவிக்கும் போது, ‘இவர் வந்தால் நமக்கு நல்லது நடக்கும்’ என்று நம்பும் ஒரு தலைவர், மக்களைச் சந்திக்க வரும் போது, மக்கள் கூட்டம், கடல் அலையெனத் திரண்டு, நாளை நடக்கப் போகும் வெற்றியை இன்றே கட்டியங்கூறுவார்கள். உடனே, இவர்களும், தங்கள் கூட்டத்திற்கும், மக்கள் அலையெனத் திரள வேண்டும் என்று ஆசைப்பட்டு, ‘அலையெனத் திரண்டு வாரீர்; ஆதரவைத் தாரீர்’ என்று முழங்குவார்கள். வராவிட்டால் என்ன செய்வது என்று முன்யோசனையாக, வெளியூரிலிருந்து லாரி மூலம் ஆட்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இப்போ, இந்த நடைமுறை ரொம்ப முன்னேறியுள்ளது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : என்ன முன்னேற்றம்…?

மேகலா : கூட்டத்தில் இருப்பவர்களில் ஒருவர் எழுந்து என்ன கேள்வி கேட்கணும், அதற்கு எப்படி பதில் சொல்லணும்…., தலைவருடன் யார் நலம் விசாரித்து பேசணும்…., யார் மனு கொடுக்கணும் என்பதெல்லாம் ஏற்கனவே plan பண்ணிட்டு, ஆட்களையும் set பண்ணி கூட்டத்துக்குப் போவது தான் superior கெத்து….

கிருஷ்ணர் : அது சரி…. அநாவசியமான…. ‘தள்ளு முள்ளு’ வேண்டாம் என்று நினைக்கலாமில்ல….!

மேகலா : தள்ளு முள்ளா…. முதல்ல….. plan பண்ணி எழுதி மனப்பாடம் பண்ணிய script-லயே ஆயிரம் உளறல்…. பதவியில் இருக்கும் போது, மக்களையும், மக்களின் தேவைகளையும் நினைக்கவே செய்யாதவர்கள், பதவியை அடையப் போராடும் போது, script எழுதி வச்சி மனப்பாடம் பண்ணுவதும், தொகுதி தொகுதியாக அலஞ்சி திரிஞ்சி, மக்களின் தேவைகளை அலப்பறை கூட்டுவதும்…., அடேயப்பா…. இதற்கு, பதவியில் இருக்கும் போது, மக்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறையாக இருந்திருக்கலாம்….

கிருஷ்ணர் : பார்த்தியா; மக்கள் மீது அக்கறை இருப்பதால் தானே, தொகுதி தொகுதியாக மக்களை சந்திக்க வருகிறார்கள். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக வாக்குறுதி கொடுப்பதாகச் சொல்வதை, social media-வில் channel நடத்துபவர்களும், கண் கொத்திப் பாம்பாய் watch பண்ணுபவர்களும், ‘note’ பண்ணத்தானே செய்கிறார்கள். தவறான தகவல்களைக் கொடுக்கும் போது, ‘பிலு பிலு’-வென பிடிப்பவர்கள், வாக்குறுதி நிறைவேறாவிட்டால், சும்மாவா விடுவார்கள்…?

மேகலா : என்ன செய்ய முடியும் கிருஷ்ணா…. தமிழ்நாட்டை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ‘லீஸ்’சுக்கு எடுத்து விட்டால், அட, ‘social media’ என்ன, பொதுமக்களும் தான் என்ன செய்ய முடியுங்கிறேன். கிருஷ்ணா! நாம் ஆரம்பத்தில் சொன்னது மாதிரி, இதெல்லாம் தேர்தல் நேரத்து அலப்பறைகள் மட்டும் தான். இந்த ‘வாக்குறுதி’, ‘தொகுதி தொகுதியாக அலைவது’, இவ்வளவு ஏன், press meet-ஐ சந்தித்து மக்களுக்கு நன்றி சொல்லக் கூட வர மாட்டார்கள் கிருஷ்ணா. அதனால் தான், லஞ்சம் வாங்கினால் கூட பரவாயில்லை, மக்களுக்கு வேலையைச் செய்யும் அரசாங்கமே வரட்டும் என்று நான் நினைக்கிறேன்.

கிருஷ்ணர் : சரி…. சரி…. பேச்சு மறுபடியும் serious ஆக போகிறது…. election நேரத்தில் நடக்கும் வேற காமெடிகளைச் சொல்லு மேகலா….

மேகலா : கிருஷ்ணா…. ‘canvas’ பண்றதுங்கிறது பல விதம்; மேடைப் பேச்சு… போஸ்டர் தாக்குதல் என்று அந்தக் காலத்து வழிமுறைகள், நமக்கெல்லாம் தெரிந்தது தான். இந்தக் காலத்து ‘technology war’-ஐயும், நடைமுறையில் பார்த்துக் கொண்டு தான் இருக்கோம்… இன்னும் ஒரு முறை இருக்கு கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : அது என்ன…. ? வீடு வீடாகச் செல்வார்களா….?

மேகலா : அதெல்லாம், தேர்தலுக்கு 3 நாள், 4 நாள் முந்தி, தொண்டர்கள் செய்யும் வேலை. மறைமுகமாக, ஒரு வோட்டுக்கு இவ்வளவு என்று கையில் அழுத்துவார்கள்….! இது வேற மாதிரியான attack. அதாவது, தலைவர்கள், பொதுமக்களை நெருங்கி வந்து, (அதாவது, பாதுகாப்பு வளையத்தை விட்டு விலகி வந்து), சிலர் சைக்கிள் ஓட்டுவார்கள்; சிலர் ரோட்டோர டீக்கடையில் ’டீ’ குடிப்பார்கள்; Metro train-ல் கூட travel பண்ணுவார்கள்; சிலர் வயலில் இறங்கி, அதுவும், ‘தலப்பா’ கட்டிக் கொண்டு, tractor ஓட்டுவர்கள்; Tractor-ல் chair போட்டு உட்கார்ந்து போவார்கள்; முடிந்தால், மாட்டு வண்டி கூட ஓட்டுவர்கள்; அதுவும் இப்ப சமீபத்தில் நடந்தது. Cooking channel shooting நடக்கும் இடத்திற்குப் போய், அவர்களுக்கு help பண்ணுதல். எந்தத் தொண்டனாவது தலைவரை நெருங்கி வந்து selfie எடுக்க முயற்சித்தால், கீழே தள்ளி விடுதலும் நடக்கும்!

கிருஷ்ணர் : Oh! அதாவது, பொதுமக்களை, ’நானும் உங்களில் ஒருவன் தான்’ என்று impress பண்ணுவது….

மேகலா : அதே தான்…. அதே தான்…. அதிலும், ஒரு தலைவர், ‘தலப்பா’ கட்டி, tractor ஓட்டினால், மறுநாளே இன்னொரு தலைவர், ‘தலப்பா’ கட்டி, செருப்புக் காலோடு வயலில் இறங்கி, தன்னைச் சுற்றிலும் camera-க்களை பளிச்சிடச் செய்து, தாங்கிப் பிடிக்க, ‘அள்ளக் கைகளை’ கூட்டிச் சென்று…., இவர்கள் பண்ணும் அலப்பறை இருக்கே…. மறு நாள், social medias, total-ஆ அதகளப்பட்டுரும் கிருஷ்ணா. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ‘வயக்காடு’ ரொம்ப சேறாக இருக்கு என்று நினைத்து, தலைவரால் கீழே விழாமல் நடக்க முடியுமோ என்று பயந்துட்டாங்கன்னா, வயல் வெளியிலேயே, temporary-யா ரோடு போட்டிருவாங்க…. பார்க்கும் எங்களுக்கு நல்ல நகைச்சுவை விருந்தாக இருக்கும் கிருஷ்ணா….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1