வாங்க, கொஞ்சம் ‘பொய்’ பேசுவோம் - பகுதி 7

மேகலா : என்ன கிருஷ்ணா…? நீயே இதற்கான காரணமாக இருந்து விட்டு, நீயே என்னிடம் கேட்கிறாயா…? நீ சொல்லிக் கொடுத்த பொய்யைச் சொல்லியதால் தானே, துரோணர் யுத்தத்தில் தன் ஆயுதங்களைத் துறந்தார். அவர் ஆயுதங்களைத் துறந்து, தன் உயிரை விட்டு விடத் துணிந்தது, கௌரவர்களுக்குத் துன்பத்தைக் கொடுத்தது….. அன்றைய யுத்தத்தில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.

கிருஷ்ணர் : உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று test பண்ணினேன். சரி…., துரோணாச்சாரியாரிடம் என்ன பொய்யைச் சொன்னார்கள்; யார் சொன்னார்கள்? அந்தக் கதையைச் சொல்லேன்….

மேகலா : கிருஷ்ணா! பாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. யுத்த களத்தில் பீஷ்மர் சாய்ந்த பின்பு, துரோணர் தலைமையில், கௌரவர் படை, பாண்டவர்களை எதிர்த்துப் போரிட்டது. அன்றைய யுத்தத்தில் துரோணருடைய வீரம், அர்ஜுனனால் வெல்ல முடியாததாகவே இருந்தது. துரோணரை வென்றால் மட்டுமே, பாண்டவர்கள் படை சிதறாமல் இருக்கும் என்ற நிலை இருந்தது. இது வேலைக்காகாது என்று யோசித்த ஸ்ரீ கிருஷ்ணர், துரோணரை மனதளவில் கலங்கச் செய்தால் மட்டுமே, அவர் வேகம் குறையும் என்று யோசித்து, தருமரிடம், துரோணரின் நம்பிக்கைக்கு உரிய ஒருவர், ஒரு பொய்யைச் சொன்னால், துரோணரின் வேகம் குறையும் என்று சொன்னார். தருமரோ, பொய்யே சொல்லத் தெரியாதவர். ஸ்ரீ கிருஷ்ணரின் வற்புறுத்தலாலும், பீமனின் தூண்டுதலாலும், தருமரும் பொய் சொல்ல ஒத்துக் கொண்டார்.

கிருஷ்ணர் : என்ன பொய்யோ….?

மேகலா : ஹை! தெரியாத மாதிரி கேக்குற…. அதான்….. ‘அஸ்வத்தாமா (என்ற யானை) இறந்து விட்டது’ என்று பொய் சொன்னது….

கிருஷ்ணர் : எப்படி…. எப்படி….?

மேகலா : ‘அஸ்வத்தாமா’ துரோணாச்சாரியாரின் மகன். அஸ்வத்தாமா என்ற யானை ஒன்று அன்றைய போரில் இறந்தது. யாரும் கேட்டால், ‘அஸ்வத்தாமா இறந்தது’ என்று சொல்லணும், ’யானை தான் இறந்தது’ என்று சொன்னோம் என்று சொல்லி விடலாம் என்பது அவர்கள் திட்டம். தருமருக்கு, எதையாவது சொல்லி, துரோணரை வெற்றி கொள்ள வேண்டும் என்ற நிலைமை…., அதனால் ஒரு பொய்யைச் சொல்லத் துணிந்தார்…… சொல்லியும் விட்டார். அவ்வளவுதான். பொய்யே அறியாத தருமர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள், துரோணரைக் கலங்கச் செய்தது. ஆயுதம் துறந்தார். தேர்த்தட்டில் நிஷ்டையில் அமர்ந்தார். திருஷ்டத்யும்னன், அவரை வாளால் வெட்டினான். பீமன் உற்சாகமானான். கௌரவர்கள் நிலைகுலைந்தார்கள். ஒரு பொய்…. பாண்டவர்களுக்கு வெற்றியை சமீபமாக்கியது. கௌரவர்கள் பிடி சற்று நழுவியது. அஸ்வத்தாமாவோ ஆவேசமானான்.

கிருஷ்ணர் : பொய்யின்னா…, பொய்யி…. இது பொய்யி…! போரின் வேகத்தைக் குறைத்த பொய்…. ஆமாம்…, உன்னிடம் ஒன்று கேட்கணும்னு நினைச்சேன். நீ ஏதாவது புதுசா channel ஆரம்பிச்சிருக்கியா….?

மேகலா : கிருஷ்ணா! நான் உன்னிடம் சொல்லலியா கிருஷ்ணா…

கிருஷ்ணர் : எங்க நீ சொல்லுற….. ஆனா, தினமும் என் பெயரைச் சொல்லி கதை சொல்லுற…; shooting எடுக்கிற…. ஒரு நாள், மகாபாரதத்தில், கிருஷ்ணரின் பசி என்கிறாய்…. இன்னொரு நாள், தாயுமானவரின் தாய்மையைச் சொல்லுகிறாய்…. முழுசா மகாபாரதமும் இல்லை…., முழுசா திருவிளையாடல் புராணமும் இல்லை…. என்ன நடக்குது என்று நானே முழிச்சிப் போயிட்டேன்…

மேகலா : உன்னை நம்பித்தானே கிருஷ்ணா start பண்ணியிருக்கேன்…. 2-வது கதையே, ‘பார்த்தசாரதி’யின் பெயர்க் காரணத்தைச் சொன்னேன், கிருஷ்ணா…. இத்தனை நாள் கதை சொல்லச் சொல்லி என்னை ஊக்குவித்த என் தயாபரனே… என் கதைக் களமே…., கதையின் நாயகனே…., என் ஊற்றுக்கண்ணே…. நீயின்றி எனக்குக் கதையே இல்லை… இந்த channel-க்கு என்ன ஆதரவு கிடைக்கும் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. Sheethal ஆரம்பிப்போம் என்று சொன்னவுடன், பூஜை room-க்குப் போனேன்; பிள்ளையாருக்கு உக்கி போட்டேன். Camera முன்னால நின்று introduction பேச ஆரம்பித்து விட்டேன். அதன் பிறகு, busy-யாக shooting-கும் எடுக்க ஆரம்பித்து விட்டேன். நான் ஏற்கனவே, லக்ஷ்மி நரசிம்மரிடம் petition போட்டிருந்தேன். Camera முன்னாடி நின்றதும், ‘சாமி உத்தரவு கொடுத்திருச்சி’ என்று நினைத்து விட்டேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : சரி… சரி… என்னை ஒதுக்கிட்ட…; ஆனா, எங்கிட்டயே வம்பளக்கிற…! ஜகஜ்ஜாலக் கில்லாடி தான் நீ….

மேகலா : கிருஷ்ணா…., ஒதுக்கினேனா…; அதுவும் உன்னையா…. என் உயிரை ஒதுக்கி வைத்து என்னால் கதை சொல்ல முடியுமா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ரொம்….ப…. நடிக்காத…. சரி…, பொழச்சிப் போ….! அடுத்த பொய்யை அவுத்து வுடு.

மேகலா : நான்….நான்…. பொய் சொல்றேனா கிருஷ்ணா…?

கிருஷ்ணர் : ‘பொய்’ கதையை அவுத்து வுடு….ண்ணேன்….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 5

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1