அழகு - பகுதி 3

மேகலா : கிருஷ்ணா…, நீ என்ன சொன்ன…. ‘அழகு’, தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் போது, மேலும் அழகாகி விடும்’ என்றாயல்லவா… ‘correct’ கிருஷ்ணா… அழகிப் போட்டியில் கலந்து கொள்பவர்கள், தங்களை எவ்வளவு அழகுபடுத்திக் கொள்கிறார்கள் தெரியுமா கிருஷ்ணா… ‘fitness’, ‘dressing’, ‘cat walking’…. சிரிப்பைக் கூட, கண்ணாடியைப் பார்த்து சிரிக்கக் கற்றுக் கொள்வது…, தலைமுடியை சிலுப்பிக் கொள்வது என்று பார்த்துப் பார்த்துத் தயாராகித்தான் உலக அழகியாகிறார்கள் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு இத்தனை தயாராகணுமா…. நான் நெனச்சேன், கண்ணாடியைப் பார்த்து அழகாயிருப்பவர்கள், போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று…

மேகலா : நாம நினைக்கிற பேரழகிகளெல்லாம் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது கிருஷ்ணா… என்னைப் பொறுத்த வரை…, கொஞ்சம் பூசின மாதிரி உடல்வாகு இருக்கணும்…, கணகள் நட்சத்திரமாய் மின்னணும்…. எப்பவுமே சிரிச்சிக்கிட்டே இருக்கணும்…. தலைமுடி அடர்த்தியாகவும், கொஞ்சம் சுருளாகவும், கொஞ்சம் நீளமாகவும் இருக்கணும். இப்படி இருந்தாலே அழகுதான்…. இங்கு அழகுப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஒவ்வொருவரும் 40 kg கூட இருக்க மாட்டாங்க கிருஷ்ணா… அழகை maintain பண்றதுல முக்கியமான பங்கு – உடம்பு, weight போடாமல் இருப்பது கிருஷ்ணா…. ஒடிஞ்சி விழுற மாதிரி உடம்பு, கெத்தான நடை, அழகைத் தூக்கிக் காட்டும் உடை…, இவைதான் உலக அழகிக்கான தகுதி… இல்லையென்றால் தேர்வாகவே முடியாது…

கிருஷ்ணர் : Oh! ஆனா…., குழந்தைங்க, குண்டு குண்டா…, கன்னத்தைப் பிடித்து கிள்ளணும்னு தோண்ற மாதிரி இருப்பதுதானே எல்லோருக்கும் பிடிக்கும்; அதுதானே பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்….

மேகலா : அது குழந்தைங்க கிருஷ்ணா… குழந்தைகளுக்கு…, பார்த்து பார்த்து food கொடுக்கிறோம்….. எது சாப்பிட்டா குழந்தை ஆரோக்யமாய் இருக்கும் என்று அம்மா பார்த்து, மெனக்கெட்டு செஞ்சு குடுக்கிறா…. ஆரோக்யமான குழந்தை, சுறுசுறுப்பான குழந்தையைப் பார்த்தவுடனேயே முத்தம் கொடுக்கத் தோணுமில்ல…. மொத்தத்துல, குழந்தையே அழகுதான் கிருஷ்ணா… பிறந்தவுடன் கண் சிமிட்டும் குழந்தை, சப்புக் கொட்டும் போது, குப்புற விழுந்து குரல் கொடுக்கும் போது…, தவழும் போது, தையா தக்காவென்று நடக்கும் போது…, தா…, தையென்று பேச முயற்சிக்கும் போது…, கடவுளே இறங்கி வந்து நமக்கு கருவறை தரிசனம் குடித்தது மாதிரி கிருஷ்ணா…

கிருஷ்ணர் : ஆமாம் மேகலா… குழந்தையே, தெய்வமாகக் கொண்டாட வேண்டிய அழகுதான்….. கள்ளம் இல்லாத…, கபடம் தெரியாத குழந்தையல்லவா… அது அழகா இல்லாமல் எப்படி இருக்கும்….

மேகலா : நீ சொன்னதை யோசித்துப் பார்க்கும் போதுதான் நல்லா புரியுது கிருஷ்ணா… தன்னை அழகுபடுத்தத் தெரியாதவங்க கூட, கள்ளங்கபடமில்லாமல் சிரிக்கும் போது, அது குழந்தையின் சிரிப்பு மாதிரி வசீகரமாய் இருக்கும் கிருஷ்ணா… அப்ப…, அழகு என்பது முகத்தைப் பொறுத்தது இல்லை…, மனசைப் பொறுத்தது…. ஆஹா! பொதுவா நல்ல மனசுடையவங்ககிட்ட தான் நட்புடன் பழகத் தோணும். அழகா இருக்கிறவங்க பேசணும்னு கூட இல்லை கிருஷ்ணா…, கர்வமா ஒரு பார்வை பார்த்தால் கூட போதும்… அவங்க கிட்ட போகவே பிடிக்காது. அந்த அழகு நமக்குப் பிடிக்காமல் தான் போகும்….

கிருஷ்ணர் : இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் மேகலா….. பொதுவா, மனுஷங்க ’அழகு’ பார்த்து யாருடனும் பழகுறதில்லை… நம்ம மனசுக்குப் பிடிச்சிருக்கா…., பிடிச்சவங்க கூட பேசுவதில் தான் மனுஷனுக்கு ஒரு சௌகரியம், சந்தோஷம் எல்லாமே கிடைக்கும். பழகிய பின்னே சண்டை வந்தால் கூட, அது செல்லச் சண்டையாய் இருக்கும் பட்சத்தில், அந்த சண்டையே கூட, அது நட்போ, காதலோ, அழகான உறவின் அடையாளமாகத்தான் தெரியும்…. இங்கு, அழகு என்பது, கண்களின் காட்சி மட்டுமல்ல…, மனதின் சந்தோஷம்…

மேகலா : Correct கிருஷ்ணா… மனுஷங்களில் யாரோ ஒரு சிலர் தான்…, பார்த்தவுடன் காதல்…, அழகாய் இருப்பதால் காதல் என்று காதலில் விழுகிறார்கள். நிறையப் பேர் முதலில் நட்புடன் பழகி…, ஒருவர் இல்லாமல் இன்னொருவர் வாழவே முடியாதோ என்று தோன்றும் போது…, காதல்…, கல்யாணம் என்று அடுத்த step-க்கு போகிறார்கள். பெரும்பாலோருக்கு, காதலில் அழகை விட, நட்புதான் முதன்மையாக இருக்கிறது என்று நினைக்கிறேன்….

கிருஷ்ணர் : நீ சொல்வது ஓரளவு உண்மைதான் மேகலா…. பொதுவாக.., மனிதர்கள், சக மனிதர்களிடம் நட்பின் அடிப்படையில் தான், அவர்களுடைய அழகையும் ரசிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு, தான் சொல்ல வரும் கருத்தையோ, தகவலையோ, அழகாக, தெளிவாக, தங்கு தடையில்லாமல் சொல்லுபவர்களை ரொம்பப் பிடிக்கும்…. இப்போ…. பட்டிமன்ற பேச்சாளர் நம்ம சாலமன் பாப்பையா இருக்காருல்ல… அவருடைய பேச்சுக்கு தமிழ்நாட்டுல எத்தனை ரசிகர்கள் இருக்காங்க…

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2