கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 10
மேகலா : நகர்ப்புறங்களில் பட்ஜெட் கல்யாணம் நடத்துபவர்கள், கல்யாணத்தை கோயிலில் வைத்தோ, அல்லது hotel reception-ல் வைத்தோ நடத்துகிறார்கள் அல்லவா…. கல்யாணத்துக்கு வந்தவர்களை, hotel-லிலேயே சாப்பிடச் சொல்லி, ‘டோக்கன்’ கொடுத்து விடுகிறார்கள் கிருஷ்ணா… இது, இவ்வளவு செலவு ஆகும்னா…., அவ்வளவுதான் ஆகும்…. ஒரு இலைக்கு இவ்வளவு என்ற கணக்கு correct ஆக இருக்கும். ‘Waste’-ம் ரொம்ப இருக்காது….. கிருஷ்ணர் : Oh! இப்படியும் கல்யாணம் பண்ணுவார்களா…. மேகலா : ஆமாம் கிருஷ்ணா….. நகர்ப்புறங்களில், கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகையே லட்சக்கணக்கில் செலவாகும் போது, கோயிலில் கல்யாணம், அருகில் இருக்கும் ஹோட்டலில் சாப்பாடு என்பது, easy-யாகவும் இருக்கும்…., பட்ஜெட்டுக்குள்ளும் அடங்கும்….. நாங்கள் ஒரு முறை சென்னைக்கு கல்யாணத்திற்குப் போயிருந்த போது, அன்றைக்கு, கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயிலுக்குச் சென்றிருந்தோம். எல்லாக் கோயில்களிலும், கல்யாணம் முடிந்து, மாலையும் கழுத்துமாக மணமக்களும் வந்திருந்தனர். கபாலீஸ்வரர் கோயிலில், எங்களுக்குப் பக்கத்திலேயே ஒரு ஜோடிக்கு கல்யாணமும் நடந்தது. அர்ச்சகர