கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 10
மேகலா : நகர்ப்புறங்களில் பட்ஜெட் கல்யாணம் நடத்துபவர்கள், கல்யாணத்தை கோயிலில் வைத்தோ, அல்லது hotel reception-ல் வைத்தோ நடத்துகிறார்கள் அல்லவா…. கல்யாணத்துக்கு வந்தவர்களை, hotel-லிலேயே சாப்பிடச் சொல்லி, ‘டோக்கன்’ கொடுத்து விடுகிறார்கள் கிருஷ்ணா… இது, இவ்வளவு செலவு ஆகும்னா…., அவ்வளவுதான் ஆகும்…. ஒரு இலைக்கு இவ்வளவு என்ற கணக்கு correct ஆக இருக்கும். ‘Waste’-ம் ரொம்ப இருக்காது…..
கிருஷ்ணர் : Oh! இப்படியும் கல்யாணம் பண்ணுவார்களா….
மேகலா : ஆமாம் கிருஷ்ணா….. நகர்ப்புறங்களில், கல்யாண மண்டபத்தின் ஒரு நாள் வாடகையே லட்சக்கணக்கில் செலவாகும் போது, கோயிலில் கல்யாணம், அருகில் இருக்கும் ஹோட்டலில் சாப்பாடு என்பது, easy-யாகவும் இருக்கும்…., பட்ஜெட்டுக்குள்ளும் அடங்கும்….. நாங்கள் ஒரு முறை சென்னைக்கு கல்யாணத்திற்குப் போயிருந்த போது, அன்றைக்கு, கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயிலுக்குச் சென்றிருந்தோம். எல்லாக் கோயில்களிலும், கல்யாணம் முடிந்து, மாலையும் கழுத்துமாக மணமக்களும் வந்திருந்தனர். கபாலீஸ்வரர் கோயிலில், எங்களுக்குப் பக்கத்திலேயே ஒரு ஜோடிக்கு கல்யாணமும் நடந்தது. அர்ச்சகர் மந்திரத்தைச் சொல்ல, கபாலீஸ்வரர் சாட்சியாக சட்டுனு ஒரு கல்யாணம் நடந்தது கிருஷ்ணா….. நானெல்லாம் மனம் நிறைந்து வாழ்த்தினேன் கிருஷ்ணா. உற்றார், உறவினர், மணமக்கள் மீது போட்ட அட்சதை எங்கள் மீதும் விழுந்தது. வடபழனி கோயிலில், எங்கு திரும்பினாலும், மாலையும் கழுத்துமாக மணமக்களே காட்சி தந்தனர். பார்த்தசாரதி கோயிலிலும் அப்படித்தான். அவர்களோடு வந்திருந்த உறவினர்களும், மணமக்களுக்கு நிகராக பளபளவென்று உடை உடுத்தி colorful-ஆக இருந்தது….
கிருஷ்ணர் : நீ சாமியை நல்லா பார்த்தயா….
மேகலா : அதெல்லாம் திவ்ய தரிசனம் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : சரி…., உங்க பக்கத்துக் கல்யாணம், கல்யாணத்தன்று கலாட்டாக்களோடு முடிந்து விடுமா….
மேகலா : அதெப்படி கிருஷ்ணா…. மறுநாள் ‘கறி விருந்து’தான் star கலாட்டா கிருஷ்ணா….
கிருஷ்ணர் : எப்படி….? ‘கறி விருந்து’ அன்றும், காலையில் breakfast, மதியம் lunch….. என்று ஒரே இரத்தக்களரியா இருக்குமோ….
மேகலா : ‘இரத்தக்களரி’ என்று நீ சொன்னது…. தெரிந்து சொன்னாயா…., யதேச்சையா சொன்னாயா…., தெரியவில்லை. எங்க அப்பா மாதிரி ஆட்கள், கறி விருந்தன்று ‘கிடாவே’ வெட்டி விடுவார்கள் கிருஷ்ணா… அப்படி வெட்டுபவர்கள், காலையில் breakfast-க்கு இலையில் ‘ரத்தப் பொரியல்’ வைப்பார்கள் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : இன்னும் எனென்ன படைப்பார்கள் அம்மணி….
மேகலா : இட்லி, தோசை, பூரி என்பது main மெனுவாக இருக்கும் கிருஷ்ணா…. ஆனால், இதை விட, மக்கள், இதற்குத் தொட்டுக்க வைக்கும் side dishes-ஐத்தான் விரும்பி எதிர்பார்ப்பார்கள். கறிக் குழம்பு, ஈரல், இவற்றைச் சாப்பிடுவதற்காகவே இட்லியைச் சாப்பிடுவார்கள் கிருஷ்ணா…..
கிருஷ்ணர் : காலை வேளை breakfast இவ்வளவு heavy-யானால், மதியம் lunch-ஐ, simple ஆக முடித்து விடுவார்களா….
மேகலா : ஐயோ…, கிருஷ்ணா…. திருமணத்தன்று, dining hall-ல் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ, கறி விருந்துக்கு, dining hall-ல் கூட்டம் அலை மோதும். பட்ஜெட் கல்யாணம், பணக்காரக் கல்யாணம் எதுவென்றாலும், கறிச்சாப்பாட்டுக்கு அழைப்பிருந்தால், கூட்டம் இதற்குத்தான் வரும். அதனால், பட்ஜெட் கல்யாணம், மறு நாள் கறிச் சாப்பாடை, மண்டபத்தில் இல்லாமல், வீட்டு உறவுகளுக்குள்ளே முடித்துக் கொள்வார்கள். விருந்துக்காகவே கல்யாணம் நடத்துபவர்களிடம், விருந்துக்கான மெனுவை நாம் கொடுக்க முடியுமா கிருஷ்ணா….. அந்தக் காலங்களில், இது ‘சம்பந்தி விருந்து’; மாப்பிள்ளைக்கு ‘தலை முழுக்கு’ என்ற சடங்கு நடத்தி, வசதி படைத்தோர், எண்ணெய்க் கிண்ணத்தில் தங்கக் காசு போடுவார்கள். அதன் பின் சம்பந்தி வீட்டாருக்கு, பெண் வீட்டார் கொடுக்கும் விருந்து…, இப்போது ‘கறி விருந்தாகி’, இருவரும் சேர்ந்தே கொண்டாடுகிறார்கள்…..
கிருஷ்ணர் : Oh! அப்போ நம்மால் மெனு கொடுக்க முடியாது…, நம்மால் சாப்பிடத்தான் முடியும்….
மேகலா : Of course…., Yes, boss….
கிருஷ்ணர் : உங்க பக்கத்து பிரியாணி, Arab தம் பிரியாணியை விட நல்லாவா இருக்கும்…..?
மேகலா : ‘மாஸ் கிருஷ்ணா’….. ‘மரண மாஸ்’…… அப்படியிருக்கும்…. மட்டன் பிரியாணி, கோழி சாப்ஸ், சிக்கன் 65, மட்டன் கோளா உருண்டை….. என்று எங்க ஊருக்கென்றே சிறப்பான மெனு உண்டு….. இந்த மெனு எல்லா கல்யாணங்களிலும் கட்டாயம் இருக்கும். பணம் படைத்தோர், ஊரடைத்து விருந்து படைப்பார். மனம் படைத்தோர், உறவுகளோடு சேர்ந்து உண்பார்…. Dining hall-க்கு வெளியில் ice cream, பீடா, இத்யாதி, இத்யாதி…. என்று கல்யாண விருந்து களை கட்டும் கிருஷ்ணா…. ’கல்யாணம் முடிந்தது; கச்சேரியும் முடிந்தது’ – என்று கல்யாண கலாட்டாக்கள் ஒரு வழியாக நிறைவுக்கு வரும் கிருஷ்ணா….. வந்திருந்தோர், மணமக்களை வாழ்த்தினார்களா…, அது அவர்களுக்கே தெரியாது. மணமக்களுக்கோ, யார் யார் வாழ்த்த வந்திருந்தார்கள் என்பதையே அறியாமல், ’அவர்கள் உலகத்தில்’ இருப்பார்கள். வந்திருந்தோருக்கு தாம்பூலப்பை கொடுத்தனுப்புவது பாரம்பரியமான பழக்கம் தானே…. தேங்காய், பழம், வெற்றிலை, ஒரு சின்ன chocolate என்று, மணமக்களின் பெயர் போட்ட மஞ்சள் பையில் போட்டுக் கொடுப்பார்கள். இப்போ, மஞ்சள் பை, plastic பையாக மாறி விட்டது. தேங்காய்க்குப் பதிலாக ஒரு stainless steel டப்பா…, chocolate-க்குப் பதிலாக sweet box என்று, அதுவும் காலத்திற்கேற்ப உருமாறிருச்சி கிருஷ்ணா… இது மாதிரி எவர்சில்வர் டப்பா என்னிடம் எக்கச்சக்கமாக இருக்கு கிருஷ்ணா…. கல்யாணங்களில் மட்டுமில்லை கிருஷ்ணா…., வளைகாப்பு, பிள்ளைக்கு பெயர் சூட்டும் விழா…, என்று எந்த விழாவானாலும், இப்படி ஒரு நினைவுப் பொருளைக் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது. இன்று கல்யாணச் செலவுகளில், இந்த நினைவுப்பரிசு தவிர்க்க முடியாததாகி விட்டது கிருஷ்ணா… இந்த தாம்பூலப்பையை வாங்குபவர், கல்யாணத்திற்கு வராத தன் மகளுக்கோ, மகனுக்கோ என்று கேட்டு வாங்கிக் கொண்டுதான் போவார்கள் கிருஷ்ணா….
கிருஷ்ணர் : Oh! வீட்டில் எத்தனை டப்பா இருந்தாலும், தாம்பூலப்பை டப்பாவை விடவே மாட்டார்கள். ஆமாம்…., இதில் ஏதும் விசேஷம் கிடையாதா மேகலா…
மேகலா : இருக்கு கிருஷ்ணா…. வந்திருந்த அனைவருக்கும் பொதுவான தாம்பூலப்பை ஒன்று. Special relatives-க்கு தாம்பூலப்பை என்று இரண்டு இருக்கும். In-charge-ஆக நிற்பவர்கள் கொடுப்பது, general தாம்பூலப்பை…. கல்யாணம் நடத்துபவர், தன்னோட உறவினர்க்குக் கொடுப்பது special பை…. அதில், தேங்காய், special sweets என்று இருக்கும்….
கிருஷ்ணர் : அதான பார்த்தேன்…. எல்லாத்துலயும் prestige பார்ப்பவர்கள் இந்தத் தாம்பூலப் பையையும் சும்மா விட்டு விடுவார்களா…. அது சரி…., உங்கள் பக்கங்களில், ‘கட்டு சாதம்’ கிடையாதா மேகலா…. அந்தக் கட்டு சாதத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா….?
(தொடரும்)
Comments
Post a Comment