கல்யாணங்களும், கலாட்டாக்களும் - பகுதி 8

மேகலா : இன்னும் சில கல்யாணங்களில், புதுசா ஏதோ செய்யிறோம் என்று நினைத்து, மேடையின் மற்றொரு புறம், கேரளாவின் செண்டை மேளத்தை முழக்க விட்டு, கல்யாண வீட்டு கலகலப்பையே அடக்கி, செண்டை மேளம் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும்…..

கிருஷ்ணர் : ஓ! அப்போ…., அங்கு நாதஸ்வரம் இருக்காதோ…..

மேகலா : அதுவும் இருக்கும் கிருஷ்ணா…. அது ஒரு புறம்…., இது இன்னொரு புறம்…. கேரள வாத்தியங்கள் இல்லையென்றால், ‘பேண்ட் வாத்தியம்’ என்று சொல்வார்களே….., அதை arrange பண்ணி, கல்யாண வீட்டின் சப்தத்தை ஊர் முழுக்க கேட்கச் செய்து விடுவார்கள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : இது என்னவோ…., ‘இந்த இசை எனக்குப் பிடிக்கும்….. அதனால், கல்யாணத்திற்கு இந்த வாத்தியம் தான் arrange பண்ணியிருக்கிறேன்’ என்பது மாதிரி தெரியல…..

மேகலா : ஆம்…மாம்…., அப்படித்தான். எங்க வீட்டுக் கல்யாணத்தைப் பார்த்து, ஊர் முழுக்க வியந்து பாராட்டணும் என்று நினைப்பவர்கள் தான், ‘செண்டை மேளம்’, ‘பேண்ட் வாத்தியம்’ என்று arrange பண்ணுவார்கள் கிருஷ்ணா…..

கிருஷ்ணர் : இதெல்லாம், பணம் செய்யும் கலாட்டா மேகலா…… கல்யாணச் சம்பிரதாயங்களில் கலாட்டாவாகக் கொண்டாடும் மக்கள், விருந்து பரிமாறும் போது, கலாட்டா ஏதும் பண்ணுவார்களா….

மேகலா : பரிமாறுவதில் ஏகதேசம் கலாட்டா எதுவும் இருக்காது கிருஷ்ணா…. விருந்தையே கொண்டாடி மகிழ்ந்து போவாங்க கிருஷ்ணா… எங்க வீட்டுல, கல்யாணம் fix ஆனதும், நாங்க செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா…..? குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுற்றி உட்கார்ந்து செய்யும் வேலை, கல்யாணத்திற்கு சாமி கும்பிடுவதிலிருந்து, அடுத்தடுத்து நிகழ்ச்சிகளுக்கும், கல்யாணத்தன்றும், அதற்கும் மறுநாள் கறி விருந்து வரைக்கும் எந்த எந்த நேரத்துக்கு என்னென்ன மெனு என்று போடுவதுதான். சின்னப் பிள்ளைகளிலிருந்து ஒவ்வொருவரும், அவரவர்க்குப் பிடித்தமான item சொல்லும் போது, கல்யாணம் களை கட்டி விடும்ல…

கிருஷ்ணர் : ஓஹ்! இப்படிக் கூட கொண்டாடுவாங்களோ….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா….. ஒருவர் சொல்லுவார், ‘சாயந்திரம் snacks-க்கு பஜ்ஜியும், சேமியா கேசரியும்’பாங்க…. உடனே, இன்னொருவர்…., ‘ஐயே…, புழுக்கேசரி வேண்டாம்; ரவாக்கேசரி தான் நல்லா இருக்கும்…’ என்பாங்க….

கிருஷ்ணர் : ‘புழுக்கேசரி’யா…..? ஐயே…..

மேகலா : ‘புழு’ன்னா, நிஜப் புழு இல்ல கிருஷ்ணா…., ‘சேமியா கேசரி’தான்…. ஒவ்வொரு நேரத்திற்கும், இன்னின்ன dishes என்று தீர்மானம் செய்த பின், உடனே chef-ஐ வரவழைத்து விடுவார்கள். அவரிடம் பொறுப்பை ஒப்படைப்பதுதான் முதல் வேலையாக இருக்கும்…..

கிருஷ்ணர் : இதெல்லாம் கல்யாணத்திற்கு எத்தனை நாளுக்கு முன்னாடி நடக்கும்….

மேகலா : கல்யாண நாளை fix பண்ணிய அன்றே, உடனே செய்யும் முதல் வேலை இதுதான். அன்றிலிருந்து கல்யாணம் 2 மாதம் கழித்தோ, 70 நாட்கள், 80 நாட்கள் கழித்தோ நடக்கலாம்.

கிருஷ்ணர் : 2 மாதம் கழித்து நடக்கப் போகும் கல்யாணத்திற்கு இன்றே, மெனுவா….. சூப்பர்…..

மேகலா : நிச்சயதார்த்தம் என்று நாங்க எல்லோரும் சேர்ந்து இருக்கோம்ல கிருஷ்ணா…. அதான், ஜாலியா ஒரு வேலையைச் செய்திருவோம்….

கிருஷ்ணர் : சரி…, சரி….., உங்க வீட்டுக் கொண்டாட்டங்களை சொல்லிக் கொண்டே போகிறாயே…. ‘கல்யாண சமையல் சாதம்…., காய்கறிகளும் பிரமாதம்’ என்று நான் பாடும்படியாக, கல்யாண வீட்டு விருந்தைப் பற்றிச் சொல்லு….

மேகலா : கல்யாணம் என்றதும், வைதிகச் சடங்குகளிலிருந்து, make-up ஆகட்டும், fun கலாட்டாவாகட்டும், பொருட்கள் வாங்குவதாகட்டும், கல்யாண மேடை அலங்காரமாகட்டும், வாத்திய மேளமாகட்டும்…., எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். எந்தெந்த ஊரில் எது சிறப்பானதோ, அதை நம்ம வீட்டுக்கு கொண்டு வரத் தயாராகுபவர்கள், கல்யாண விருந்தை மட்டும் சும்மா விட்டு வைப்பார்களா…. சீர்வரிசைப் பலகாரங்களில், எந்தெந்த ஊரில் எதுயெது சுவையானதோ, அதை எப்படி சீர்த்தட்டில் வைப்பார்களோ…, அது போல, விருந்திலும் பார்த்துப் பார்த்து மெனு போடுவார்கள் கிருஷ்ணா…. பொதுவாக, எங்க பக்கத்தில், சாதாரண chef-லிருந்து, பெரிய catering party chef வரைக்கும் ரொம்ப சுவையாக சமைப்பார்கள். பட்ஜெட் கல்யாண வீட்டிலும், பணக்கார கல்யாண வீடு வரைக்கும், சாம்பார், ரசம், side dishes எல்லாமே, ஒரே சுவையாகத்தான் இருக்கும்….. வேறுபாடு என்பது, இலையில் வைக்கப்படும் variety உணவு வகைகள்தான்…

கிருஷ்ணர் : அப்படி என்ன உணவு வகைகள் பிரம்மாதமாக வைப்பார்கள்….?

மேகலா : நிறைய கல்யாணங்களில்…, இத்தனை variety வைத்தால் சாப்பிடுவார்களா என்ற யோசனையே இல்லாமல், ‘நான் எப்படி விருந்து கொடுக்கிறேன்’ என்ற பெருமை மட்டுமே இருப்பது மாதிரி விருந்து வைப்பார்கள் கிருஷ்ணா…. அந்தக் காலங்களில், திருமண நாளின் முந்தைய இரவில், ‘சாதம், சாம்பார், தக்காளி கொத்சு, கடலைப் பருப்பு கூட்டு என்று ஏகதேசம் எல்லார் வீட்டுக் கல்யாணங்களிலும், standard menu தான் இருக்கும். சிலர், side dishes-ஐ இன்னும் ஒன்றிரண்டு சேர்த்து பரிமாறுவார்கள். இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று ஒரு புத்திசாலிக்குத் தோன்றியதா…, இல்லை…. ‘நான் எப்படி விருந்து கொடுக்கிறேன், பார்’….. என்று மாற்றினார்களா தெரியவில்லை… இந்தக் காலத்தில், இலையில், மசால் தோசை, பன்னீர் பட்டர் மசாலா, கொத்து புரோட்டா என்று, chef-ஐயே திணற வைக்கும் அளவுக்கு மெனுவைக் கொடுப்பார்கள். விருந்தினர்கள் இலையிலும் நிரக்க வைத்து, பாதி சாப்பிட்டு, மீதி waste பண்ணி, எழுந்திரிச்சி போவார்கள். Dining Hall-க்கு வெளியே, அந்தக் காலங்களில் வெற்றிலை பாக்கு வைத்திருப்பார்கள். இப்போ, மண்டபத்திற்கு வெளியே நிறைய stall இருக்கும். அதில், பானிபூரி, chat items, ice cream, பான் பீடா என்று, வந்திருப்பவரை சாப்பாடாலேயே திணற வைப்பார்கள்…..

கிருஷ்ணர் : எந்த சாப்பாட்டின் சுவையும் தெரியாமல் போகுமே…..

மேகலா : இதை விட, ice cream-ல் ஏகப்பட்ட variety வைத்திருப்பார்கள். வயசானவங்க, சின்னவங்க என்று வயது வித்தியாசம் இல்லாமல் 2 or 3 என்று வாங்கி வந்து, சாப்பிட முடியாமல், dust bin-ல் போடும் போது, எனக்கு கண்ணீரே வந்து விடும் கிருஷ்ணா…. அந்தக் காலங்களில், கல்யாண வீட்டுச் சாப்பாடு என்றால், அதன் ருசியும் மணமும் தனிதான்…. கிட்டத்தட்ட ஒரு வாரம் வரைக்கும், அதன் சுவை, நாவிலும், நினைவிலும் நீங்காது இருக்கும்…. இப்போ, பகட்டுக்காக சாப்பாடு, அளவு கடந்த மெனு என்பதால், எந்த பதார்த்தத்தின் ருசியும் மனதில் நிற்பதில்லை….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2