வழிப்போக்கர்கள் - பகுதி 10
மேகலா : பாலைவனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஒரு மகா முனிவர் கிருஷ்ணா… பல தவங்களைப் புரிந்தவர்… கிருஷ்ணர் : ஓ! உத்தங்கரைச் சொல்கிறாயா….. ஆமாம், உத்தங்கர்…., சிறந்த மஹரிஷி… நான் துவாரகை செல்லும் போது, பாலைவனப் பிரதேசத்தில் சுற்றித் திரிந்த உத்தங்கரைச் சந்தித்தேன். மீதிக் கதையை நீ சொல்லு மேகலா…. மேகலா : கிருஷ்ணா…., கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடந்த யுத்தத்தில் பாண்டவர்கள் வென்றனர். அதன் பின்னர், கிருஷ்ணர், துவாரகை சென்றார். செல்லும் வழியில், பாலைவனப் பிரதேசத்தைக் கடக்கும் பொழுது, உத்தங்கர் என்ற மகரிஷியை சந்தித்தார். உத்தங்கர், கிருஷ்ணரைப் பார்த்து, நலம் விசாரித்தார். அஸ்தினாபுரத்திலிருந்து வரும் கிருஷ்ணரிடம், ‘உங்கள் ஆலோசனையால், கௌரவர்களும், பாண்டவர்களும், தங்கள் பகையை மறந்து நட்போடு இருக்கிறார்களா… இரு குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் அரசாட்சி நடத்துகிறார்களா’ என்று கேட்க…, கிருஷ்ணர் நடந்ததைக் கூறினார். குருக்ஷேத்திரத்தில் இரு தரப்புக்கும் பெரிய யுத்தம் நடந்தது…. அதில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்…. பீஷ்மர், துரோணர், துரியோதனன் உட்பட கௌரவர்கள் அனைத்து தரப்பினரும் உயிரிழந்த