வழிப்போக்கர்கள் - பகுதி 7

கிருஷ்ணர் : ஏன் மேகலா…., வழிப்போக்கர்கள், வழிப்பயணத்தில் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தோம். நாட்டையே அபகரிக்கும் வழிப்போக்கர்களையும் பார்த்தோம். இடையில் தடங்கல்கள் ஏற்பட்டால், அதைச் சமாளிக்கும் வழிப்போக்கர்களைப் பார்த்திருக்கிறாயா….

மேகலா : ஐயோ…, கிருஷ்ணா…., நானே உன்னிடம் சொல்லணும்னு நினச்சேன்…. இன்னைக்குத்தான் அதைச் சொல்லவே வாய்ப்பு கிடைச்சிருக்கு கிருஷ்ணா…

கிருஷ்ணர் : பெருசா என்னவோ சொல்லப் போறயா….

மேகலா : கிருஷ்ணா….., நான் U. S. A. போயிருந்தேன் இல்லையா. அப்போ, இந்தியா திரும்பும் நேரத்தில், Air India pilots strike நடந்தது…., ஞாபகம் இருக்கா கிருஷ்ணா….

கிருஷ்ணர் : Oh! அதனால் உன்னுடைய travel-லில் ஏதும் தடங்கலா மேகலா….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா. U. S. A – யிலிருந்து கிளம்புவதற்குக் கூட, substitute pilot போட்டு தான் flight-ஐ எடுத்தார்கள். இடையில் ஜெர்மனியில், Frankfurt-ல் கொஞ்ச நேரம் நிற்க வேண்டும். அங்கு நிற்கும் போது…, இதோ, இப்போ கிளம்பிரும் என்று காத்திருந்து, காத்திருந்து, காத்திருந்ததுதான் மிச்சமாகிப் போச்சு. வண்டியை எடுக்கும் வழியைக் காணோம். காரணம் என்ன என்று கேட்கும் போது…., வண்டியை எடுக்க pilot வரவில்லை என்று சொன்னார்கள். ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : பின்ன…. எப்போ வண்டிய எடுத்தாங்க….? வண்டிய எடுத்தாங்களா இல்லையா….?

மேகலா : வழிப்போக்கர்கள் அனைவரையும் அந்தரத்தில் மிதக்கவா வைக்க முடியும்…? வேறு வண்டியையே மாற்றி விட்டார்கள் கிருஷ்ணா. அதிலும்…., நான்கு மணி நேரம் கழித்து…, passengers அனைவரையும் வண்டி மாறி ஏறச் சொன்னார்கள்…. ஏறினோம்…. வண்டியை ஓட்டுபவர்கள் வந்தார்கள். அதன் பிறகுதான் பறந்தோம்… லக்கேஜை ஏற்றினார்களா இல்லையா என்று பயமாக இருந்தது….

கிருஷ்ணர் : Oh! அப்பாடா…. லக்கேஜ் கிடக்கட்டும்; அது வந்து விடும். ஒரு வழியாக இந்தியா வந்து சேர்ந்து விட்டாயே….

மேகலா : கிருஷ்ணா…., அதன் பிறகு வந்த தடங்கல்தான், மிகப் பெரிய சிக்கலாப் போச்சு கிருஷ்ணா….

கிருஷ்ணர் : அதான் இந்தியா வந்துட்டயே…, அப்புறம் என்ன….?

மேகலா : டெல்லிதானே வந்து சேர்ந்தேன்…, இன்னும் பெங்களூர் வரணுமில்ல…. அங்கிருந்த passengers-ல் கொஞ்ச பேர் தான், டெல்லிக்காரங்க. நான் Bangalore…. கோவால இருந்து வந்தவங்க – அப்படீன்னு நிறைய பேர் இருந்தோம்…. எல்லோரும் connecting flight-ற்கு மாறணும்… Airport சிப்பந்திகள் உட்பட, Air India staff மொத்தமாக strike…. ரொம்ப நேரம் airport-லேயே இருந்தோம்.

கிருஷ்ணர் : என்னதான் சொன்னாங்க….

மேகலா : ஆறுதல் மட்டும் தான் சொன்னாங்க கிருஷ்ணா…. என்ன step எடுக்கிறாங்க என்று யாருக்கும் புரியல. Counter-ல போயி விசாரிக்கலாம்னா…, counter close பண்ணப்பட்டிருக்கு…. சின்னப் பிள்ளைகள் luggage மேலேயே படுத்துத் தூங்குறாங்க… local bus stand மாதிரி இரிந்தது… அப்போ ஒரு officer வந்து ஒவ்வொரு ஊருக்கும் உண்டான connecting flight மறுநாள் arrange பண்ணுவோம்…., இப்போ, உங்களுக்கு தங்குவதற்கு arrange பண்ணியிருக்கிறோம் என்று சொன்னார். எனக்கு language தெரியல என்பதால், நடப்பதையெல்லாம் பார்த்து, ‘திரு திரு’னு முழிச்சிக்கிட்டே இருந்தேன்…. Passengers, யாராவது tie கட்டுனவர் வந்தா போதும்…. புரியாத மொழியில், ‘தேக்கோ…., தேக்கோ’ என்று தங்கள் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தாங்க…. செமயா ‘டோஸ்’ விடுராங்கன்னு புரிஞ்சுது…. இருந்தாலும் என்ன செய்ய முடியும்…. அதன் பின் air bus வந்தது. நாங்க அதில் ஏறி, டெல்லி வீதியில் வலம் வந்து, அங்கு ஒரு star hotel–ல் தங்கினோம். Night, buffet dinner arrange பண்ணி இருந்தார்கள்….. எல்லோரும் ஏதோ வேண்டா வெறுப்பாக, கொடுத்ததைத் தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொண்டது மாதிரி நடித்தார்கள்….. நான், நல்லா enjoy பண்ணினேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : நீ கதையை ரசிச்சி சொல்லும் போதே தெரியுது….. அப்புறம் எப்போ கிளம்பினீங்க….

மேகலா : மறுநாள் early morning flight என்றார்கள். ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பி ஏர்போர்ட்டுக்குள் வந்து flight ஏறி, மத்தியானம் Bangalore வந்து சேர்ந்தோம் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : வித்தியாசமான அனுபவம் தான் மேகலா….. விமானப் பயணம் என்பதால் தடங்கல் கூட ‘rich’ ஆக இருக்கிறது…. இதுவே bus ஆக இருந்தால் என்னாகியிருக்கும்…..

மேகலா : Bus break-down ஆகியிருக்கும்….. repair பண்ண முடியாமல் பஸ் நொண்டியடிக்க…, வேறு bus-ல் ஏற்றி விட்ட கதையும் அனுபவித்திருக்கிறேன் கிருஷ்ணா…

கிருஷ்ணர் : இது எப்ப….? ஏகப்பட்ட கதையெல்லாம் வச்சிருக்க போல….

மேகலா : பெங்களூருக்குப் போகும் போது தான் நடந்தது. ‘பர்வீன் ட்ராவல்ஸ்’ல போகும் போது, ஒரு முறை, திண்டுக்கல் தாண்டியவுடன், bus நின்று விட்டது. குனிஞ்சு பார்த்தும், பஸ்சுக்கடியில் படுத்துப் பார்த்தும், வண்டி கிளம்ப மாட்டேன் என்று அடம் பிடித்தது. ஒரு petrol bunk-ல் அடைக்கலம் புகுந்தோம்… நேரம் ஆக ஆக…., பயணிகள் driver- இடம் ’அனத்த’ ஆரம்பித்து விட்டார்கள். அப்போ, இன்னொரு travels bus வந்தது…. அதிலிருந்த seat-க்குத் தகுந்தபடி எங்களை ஏற்றினார்கள்… நான் உட்பட சில பெண்களுக்கு, சின்னப் பிள்ளைகள் வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, முதலில் வந்த பஸ்சில் எங்களை ஏற்றினார்கள். நான் பெங்களூர் போவதென்றால்…, luggage-ஐ தாராளமாக எடுத்துச் செல்வேனா…., அப்பப்பா…, அந்த ராத்திரியில், இந்த பஸ்சிலிருந்து இறக்கி, அடுத்த பஸ்சுக்கு ஏற்றி…., தடங்கலுக்கு நொந்து போனேன்….

கிருஷ்ணர் : பரவாயில்லை மேகலா….. நிறைய experience-ஐ வச்சிருக்க…. சரி…, நான் ஒண்ணு கேட்கிறேன்… இந்த மாதிரி பயணங்களில், எப்பவாச்சும், இந்த மாதிரி தடங்கல்கள் வர்ரது சகஜம் தான்…. உன்னுடைய அனுபவத்தை சொல்லிட்ட…. வேற யாருடைய அனுபவமாவது உனக்குத் தெரியுமா….?

மேகலா : ஏன் தெரியாமல்…..

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2