வழிப்போக்கர்கள் - பகுதி 6

மேகலா : இப்பவும் சிலர், உலகம் முழுக்க சுற்றிப் பார்க்கப் போகிறேன் என்று ஒரு குழுவாகக் கிளம்புவார்கள். அப்படிச் செல்பவர்களின் இலக்கு, ஊர் சுற்றிப் பார்ப்பது மட்டும் தான்….. 1 மாதம், 2 மாதம் வரையிலும் பயணம் செல்பவர்கள், தங்கள் வண்டிகளில் ஒரு சட்டி, பானை, மசாலா என்ற basic சாமான்களை வைத்திருப்பார்கள். வழியில் எங்காவது ஆளில்லாத இடங்களில், குளமோ, ஏரியோ தென்பட்டால், வண்டியை நிறுத்தி, குளித்து விட்டு, சமையலும் செய்வார்கள்…. பக்கத்து ஊர்களில் கிடைத்ததை வாங்கி வந்து, சமையல் செய்து, சாப்பிட்டு செல்வதாக சில ஆங்கிலப்படங்களில் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா. அதே மாதிரி, கடல்வழிப் பயணம் செல்பவர்களும், அதாவது மீன் பிடிக்கச் செல்பவர்கள், தாங்கள் செல்லும் படகில் இருந்தபடியே, கடலில் மீன் பிடித்து, குழம்பு வைத்து, சோறு பொங்கி சாப்பிடுவதை social media-வில் பார்த்திருக்கிறேன் கிருஷ்ணா….

கிருஷ்ணர் : இப்ப நீ….. என்ன சொல்ல வர்ற…. வழிப்போக்கர்களுக்கு, போகிற வழியில்…, சாப்பாட்டுப் பிரச்னையே இல்லை…. அப்படித்தானே…. சாப்பாடு கிடைக்காது என்கிற பட்சத்தில் கூட மனிதர்கள் ஏதாவது செய்து எடுத்துட்டுப் போறாங்க…. இல்லையென்றால், சமைத்தாவது சாப்பிட்ருவாங்க…., அப்படியா….

மேகலா : ஆமாம் கிருஷ்ணா

கிருஷ்ணர் : அப்போ…, சாப்பாட்டுப் பிரச்னை முடிஞ்சிருச்சி…. இனி, வழிப்போக்கர்களின் சுவையான வேற கதைகளைச் சொல்லு… சரி…, மேகலா…., பழங்காலத்தில் வெளிநாட்டிலிருந்து நம்ம நாட்டுக்கு வந்த வழிப்போக்கர்கள் யாராவது உனக்குத் தெரியுமா மேகலா….

மேகலா : கிருஷ்ணா…. தமிழ் நாவல் இலக்கியமான ‘பார்த்திபன் கனவு’ என்ற நாவலில், சீனத்திலிருந்து ‘யுவான் சுவாங்’ என்ற மதகுரு, ‘நரசிம்ம பல்லவர்’ காலத்தில், காஞ்சீபுரத்திற்கு வந்ததாகக் கூறப்பட்டுள்ளது கிருஷ்ணா. இந்த சீன யாத்ரீகர் இந்தியாவிற்குள், கைபர் கணவாய் வழியாக வந்தாராம் கிருஷ்ணா. இவருடைய காலத்தில் தான், இவருடைய பயணத்தின் மூலமாகத்தான், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இவருடைய காலம் என்பது, கி. பி. 629 என்று சொல்லப்படுகிறது. இந்தியாவில், காஷ்மீர், பாடலிபுத்திரம் என்ற நகரங்களுக்கும், தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்திற்கும் சென்றுள்ளார். அங்கு உள்ள புத்த மத கோயில்களுக்குச் சென்றுள்ளார். இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா கிருஷ்ணா…. நாளந்தா பல்கலைக்கழகத்தில் படித்தும் உள்ளார். யாத்ரீகராக வந்தவர், நம்ம நாட்டின் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார். நம்ம நாட்டின் கல்வி, கலாச்சாரம் இவற்றால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அது மட்டுமல்ல கிருஷ்ணா…. நம்ம நாட்டின் இயற்கை வளங்களும், பண்பட்ட நாகரிகமும் வெளிநாட்டவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது கிருஷ்ணா….

கிருஷ்ணர் : ஒருவர் மேற்கொள்ளும் வழிப் பயணம், வரலாற்றில் இடம் பெறுமளவுக்குச் செய்தியாகியிருக்கிறது. இந்த வழிப்போக்கர்களின் மூலம், ஒரு இடத்தின் கல்வியும், கலைகளும் மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்கிறது. வாவ்…. Super…. ஏன் மேகலா…. வழிப்போக்கர்கள், வனத்தில் மறைந்து கிடந்த கோயில்களைக் கண்டெடுத்தார்கள் என்று பார்த்தோம்…. யாராவது ஒரு வழிப்போக்கன், புதிய நாட்டினைக் கண்டுபிடித்திருக்கிறாரா….

மேகலா : கடல் பயணத்தில் ஆர்வமுள்ளவர்கள், அப்பப்ப கடலில் பயணிக்கும் போது, வழி தவறியோ அல்லது ஏதாவது மணற்திட்டைக் கண்டோ, அங்கிருக்கும் தீவில் கரை ஒதுங்குவது உண்டு. கண்டம் விட்டு கண்டம் கூட இடம் பெயர்ந்து சென்று, அங்கிருக்கும் வளங்களைக் கண்டு, அங்கேயே தங்கி விடுவது கூட உண்டு கிருஷ்ணா… இன்றைய ஆஸ்திரேலியா கண்டத்தில் வாழும் மக்கள், ஐரோப்பாவிலிருந்து 17-ம் நூற்றாண்டு வாக்கில் வந்தவர்கள்தான் கிருஷ்ணா…. அதற்கு முன்பு, பழங்குடி மக்கள்தான் இருந்ததாக வரலாறு கூறுகிறது கிருஷ்ணா…. லட்டு மாதிரி ஒரு தீவு…, சட்ட திட்டங்கள் பெருசா கிடையாது… சர சரண்ணு 19-ம் நூற்றாண்டுக்குள் அந்தக் கண்டத்தையே தனதாக்கிக் கொண்ட வழிப்போக்கர்கள் இவர்கள்.

கிருஷ்ணர் : Oh!

மேகலா : ஆஸ்திரேலியா மட்டுமல்ல கிருஷ்ணா…. ‘கொலம்பஸ் என்ற இத்தாலிய ஊர் சுற்றிப் பார்க்கும் பயணி வணிகர், அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாக சில மேதாவிகள் சொல்லுவாங்க கிருஷ்ணா…

கிருஷ்ணர் : அப்போ…. அமெரிக்காவை யார் கண்டுபிடிச்சா….

மேகலா : உனக்குத் தெரியாதா கிருஷ்ணா…. அதென்ன இருண்ட கண்டமாகவா இருந்தது…. செவ்விந்தியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். வேறு இன மக்களும் வாழ்ந்திருக்கிறார்கள். பதினோராவது நூற்றாண்டிலேயே, ‘எரிக்சன்’ என்பவர் வட அமெரிக்காவிற்கு சென்று இறங்கியுள்ளார். அதன் பிறகுதான் கொலம்பஸ், வணிகர் என்று சொல்லிக் கொண்டு அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். அதிலும், இந்தியாவைத் தேடித்தான் பயணம் செய்து, அமெரிக்காவில் இறங்கி, இது இந்தியா என்று நம்பியிருக்கிறார். இவருடைய கடல் பயணங்களே, அமெரிக்காவுடன் ஐரோப்பியர்களின் முதல் தொடர்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிறகு, 3 முறை அமெரிக்காவிற்கு வந்திருக்கிறார். இன்று இவர் பெயரில் ஒரு மாகாணமே இருக்கிறது. இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்து, வரலாற்றில் இடமும் பிடித்திருக்கிறார்கள் கிருஷ்ணா…. இவர் இப்படி…. இன்னொரு வழிப்போக்கர் இருக்கிறார் கிருஷ்ணா. போர்த்துக்கீசிலிருந்து புறப்பட்டு வந்து, நம்முடைய கேரளாவில், கொச்சிக்கு வந்து இறங்கினார்…. வெறும் வழிப் பயணம் செய்வதில் ஆர்வம் கொண்ட வழிப்போக்கர், நம்ம இந்தியாவுக்குள் வந்து, இந்தியாவிலிருந்து அழகிய பொருட்களை அள்ளிச் சென்று, போர்த்துக்கீசிய நாட்டினரிடையே ஒரு ஆவலைக் கிளப்பி விட்டு, மறுபடியும் இங்கே வந்து, போர்த்துக்கீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் வைசிராய் ஆனார். இப்படி சிலர் செய்த கடல் பயணங்களால், பல நாடுகளைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள் இந்த ஐரோப்பிய வழிப்போக்கர்கள்….

கிருஷ்ணர் : இப்படி இவர்கள் என்ன காரணத்தினால் அந்நிய நாட்டின் எல்லை கடந்து வந்திருக்கிறார்கள்…

மேகலா : முதலில் ஊர் சுற்றிப் பார்க்க வருகிறார்கள் கிருஷ்ணா… அந்த நாட்டின் வளங்களைப் பார்க்கிறார்கள். நாட்டை ஆளும் தலைமையின் அமைப்பைப் பார்க்கிறார்கள். அப்பவே கணக்குப் போட்டு விடுகிறார்கள், இந்த நாட்டை ஆட்டையைப் போட்டுக்கலாம் என்று… அடுத்து வரும் போது, வணிகர்களாக வருகிறார்கள். அதன் பின் நாட்டையே தன் வசமாக்குகிறார்கள். அதனால்தான், இன்றைய நிலையில் பல நாடுகளில் அந்நிய நாட்டினர், தன்னுடைய நாட்டில் வாணிகம் செய்வதற்கும், குடியுரிமை பெறுவதற்கும் ஏகப்பட்ட கெடுபிடிகளை வைத்திருக்கிறார்கள். ஒரு நாட்டுக்குள் நுழைவதற்குக் கூட, passport, visa என்ற சட்ட திட்டங்கள் இல்லையென்றால், நாட்டைச் சூறையாடுவதற்கென்றே சில வழிப்போக்கர்கள் உலகம் முழுக்கச் சுற்றித் திரிந்து கொண்டே இருப்பார்கள். ஆளில்லாத தீவுகளைப் பார்த்தால் கூட, அதைத் தனதாக்கிக் கொண்டு, மனுஷன் நாட்டாமை செய்யத்தான் விரும்புகிறான். முன்னேயெல்லாம் இப்படி address இல்லாமல், ‘ஊர் சுர்றிப் பார்க்க வந்தேன்’ என்று சொல்லிக் கொண்டு வருபவர்களை, வணிகர்கள் என்று சொல்லிய அரசாங்கம், இன்றைய காலத்தில், முறையான passport இல்லாமல் சந்தேகத்திற்கிடமாக உள்ளே நுழைபவர்களை, ‘தீவிரவாதி’ என்ற முத்திரையைக் குத்தி உள்ளே தள்ளி, ‘தீர விசாரித்து’ விடுகிறார்கள்….

கிருஷ்ணர் : எந்த இடத்திலும், சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட விசாரணையும், தண்டனையும் தான், ஒரு நாட்டினை பாதுகாப்பாக வைத்திருக்கும். இதற்கு வழிப் பயணம் செய்யும் வழிப்போக்கர்களும் விதிவிலக்கு அல்ல….

(தொடரும்)

Comments

Popular posts from this blog

வலிமை - பாகம் 9 (நிறைவுப் பகுதி)

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 1

உள்ளத்தனையது உயர்வு - பாகம் 2