வாழ்க்கையில் ஒருமுறையாவது... --- பகுதி 12
மேகலா : Driver, மேலே ஏறும் போதே சொல்லி இருந்தார்… ’சில views நின்று ரசிக்கலாம்’ என்று… சில இடங்களில் கங்கையையும், இமயமலையையும் பார்ப்பதற்கு தெய்வீகத்தன்மை உடையதாகவும், அழகாலேயே நம்மை பரவசப்படுத்துவதாயும் இருக்கும் என்றும் நாங்கள் பார்த்தோம் கிருஷ்ணா… அதன்படிக்கு, மேலே ஏறும் போதே, ஒரு பாலத்தில் நின்று கங்கையின் ஆர்ப்பரிப்பான அழகைப் பார்த்து விட்டோம். ’இன்னும் ஒரு இடம் இருக்கிறது… அங்கு சென்றால்…, அந்த இடத்தை விட்டு அகல உங்களுக்கு மனமிருக்காது’ என்று driver சொன்னார். எனக்கு, மொத்த ‘ரிஷிகேஷுமே’ பேரின்ப வாசலாக இருந்தது… இருந்தாலும், வரும் வழியை ரசித்துக் கொண்டும், driver சொன்ன மாதிரியான இடத்தையும் தேடிக் கொண்டே வந்தோம்…. ஒரு வளைவைக் கடக்கும் போது, மலைகளின் ‘இடுக்கு’ ஒன்றிலிருந்து நீர் ஒழுகி, அருவியாகக் கொட்டியது. கொட்டும் இடத்தில், சிறு குளமாக நீர் பரவி இருந்தது. அதிலிருந்து ஒரு ஓடையும், சன்னமான சலசலப்போடு ஓடியது. பாதையின் இடப்பக்கத்தில் ஒரு சரிவு… அப்படியே இறங்கி, அந்த அருவி பாயும் இடத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் ஒருமித்த குரலில், ‘ஹேய், நிப்பாட்டுங்க’ – என்றதும், driver-ம் ஏ